சென்றமுறை மருத்துவரிடம் சென்ற போது உடலுறவு பற்றி உங்களது சந்தேகங்களை கேட்டீர்களா என்ற கேள்விக்கு பெரும்பாலும் அனைவரிடம் இருந்தும் இல்லை என்று தான் பதில் வரும். ஏனென்றால் இந்த உடலுறவு சம்பந்தப்பட்ட கேள்விகளை கேட்பதற்கு அனைவருக்கும் பயம் மற்றும் தயக்கம். ஆனால் உடலுறவு என்ற வார்த்தையில் உள்ள காமத்தை எடுத்துவிட்டால், இது உடலின் ஒரு செயல்பாடாக மட்டுமே கருதப்படும்.
இரவு உணவின் போது குழந்தைகளிடன் கேட்க வேண்டிய கேள்விகள்!
உடலுறவை பொருத்தவரை உங்களுக்கு எந்த இடைவெளியில் உடலுறவு கொள்வது, கர்ப்ப கால உடலுறவு, பிரசவத்திற்கு பின்னரான உடலுறவு போன்ற பல சந்தேகங்கள் இருந்தால், நீங்கள் மருத்துவரிடம் இதை பற்றி கேட்பதில் எந்த தவறும் இல்லை. இதில் கூச்சப்படுவதற்கும் ஒன்றும் இல்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.
பிரசவத்திற்கு பிறகு தழும்புகள் உண்டாகமல் இருக்க இத சாப்பிடுங்க..!
ஆரோக்கிய பிரச்சனை
பலரும் தனக்கு உடலுறவு தொடர்பான பிரச்சனை ஏற்பட்டு பாலியல் செயலிழப்பிற்கு ஆளான பிறகு தான் மருத்துவரை நாடுகின்றனர். ஆனால் உடலுறவு பிரச்சனைகளை உடற்பயிற்சிகள் மற்றும் சத்தனா உணவுகளை உண்பதன் மூலம் எவ்வாறு சரி செய்யலாம் என்பதை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்.
உடலுறவு பிரச்சனையை வெறும் காமம் தொடர்பானதாக மட்டுமே நினைப்பது தவறு. இது சிறுநீரகம், உளவியல், கர்ப்பமடைதல் ஆகியவை சார்ந்ததாகவும் இருக்கிறது.
உடலுறவு என்பது உடல் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாகும். இது அனைத்து உயிர்களுக்கும் போதுவானது. எனவே இதனை பற்றிய சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்பதில் தயக்கம் வேண்டாம்.
மருத்துவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
மருத்துவரிடம் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அவர் உடலுறவு பற்றி பேசிகிறார் என்பதற்காக அவரிடம் மரியாதை குறைவாகவோ அல்லது முட்டாள் தனமான கேள்விகளையோ கேட்க கூடாது.
ஒரு உடலுறவு பிரச்சனை தொடர்பான சந்தேகத்தை நீங்கள் கேட்காமல் இருப்பதால், உங்களது ஆபத்து அதிகரிக்க தான் செய்யும்.
#1
மருத்துவரிடன் கேட்க வேண்டிய கேள்விகளை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்க வேண்டியது அவசியம். அவற்றை பயம் இல்லாமல் மருத்துவரின் கேளுங்கள். அவர் அதற்கு உகந்த பதிலளிக்க மருத்துவரிடன் நல்லமுறையிலான நட்பு வைத்திருப்பது அவசியம்.
#2
கேள்விகளை உங்களுக்கு தெரிந்த வார்த்தைகளை உபயோகித்து கேட்கலாம். மருத்துவம் சம்பந்தப்பட்ட வார்த்தைகளை உபயோகித்து தான் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
#3
முதல்முறையாக மருத்துவரை சந்தித்து பாலியல் தொடர்பான கேள்விகளை கேட்க தயக்கம் இருந்தாலும், நீங்கள் இரண்டாம் முறை சந்திக்கும் போதாவது உங்களது கேள்விகளை கேட்கலாம்.
#4
உங்களது சந்தேகங்களை தீர்த்து வைத்தற்காக மருத்துவருக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்.
#5
நீங்கள் மருத்துவரிடம் உங்களது பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களை மறைக்காமல் சொல்ல வேண்டியது அவசியம்.
#6
நீங்கள் தவறான உறவுகள் மற்றும் தீய பழக்கங்கள் ஆகியவற்றில் இருந்தால் கண்டிப்பாக மருத்துவரிடம் இதை பற்றி சொல்ல வேண்டியது அவசியம்.
#7
நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவருக்கு விடை தெரியவில்லை என்றால், உங்களுக்கு விடையளிக்க கூடிய ஒரு மருத்துவரை சந்திக்க பரிந்துரை செய்ய சொல்லுங்கள்.
#8
மருத்துவர் மீது நம்பிக்கை வையுங்கள். அவர் கூறும் விஷங்களை கடைபிடிப்பதில் அலச்சியம் வேண்டாம்.
Boldsky உடனடி செய்தி அலர்ட் பெற | Subscribe to Tamil Boldsky.
Related Articles
உடலுறவின் உச்சத்தை அனுபவித்துக் கொண்டே குழந்தை பெற்றெடுக்க முடியுமாம்... புதிய கண்டுபிடிப்பு
எய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்
கர்பிணிகளைக்கூட விட்டு வைக்காத மிருகங்கள்!
ஆழ்ந்த தூக்கத்தில் அரங்கேறும் செக்ஸோமேனியா குறித்து தெரியுமா?
ஆண்மைத் தன்மை அதிகரிக்க இத மட்டும் சாப்பிட்டா போதும்!
நீங்கள் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்!
மகள் கன்னிக்கழிவதை தாய் பார்த்தாக வேண்டிய கட்டாயம் இங்கே!
அவ எனக்கு ஒத்துழைக்கவே மாட்றான்னு இனிமே சொல்ல கூடாதுன்னா இதப் படிங்க!
‘விர்ச்சுவல் செக்ஸ்’மேற்கொள்வதற்கு முன்னால் இதைப் பற்றியெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்!
நேப்கின்னா என்ன? எதுக்கு யூஸ் பண்றீங்க! #SexEducation_02
யூ.கே.ஜி படிக்கும் குழந்தை‘Penis’பற்றி கேட்ட கேள்வியால் அதிர்ந்த குடும்பம்! #SexEducation_01
நீங்கள் செக்ஸுவலி அட்டாச்சுடு என்பதை இந்த அறிகுறிகளைக் கொண்டு கண்டுபிடிக்கலாம்!
இந்த அறிகுறிகளை சாதாரணமா எடுத்துக்கிட்டா உயிரே போயிடும்...