Latest Updates
-
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உடலுறவினால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்!
உடலுறவினால் உண்டாகும் ஆச்சரியமூட்டும் மாற்றங்கள்
பல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் ஆரோக்கியமான உடலுறவு என்பது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என கூறப்படுகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலுறவு என்பது முக்கிய காரணியாக உள்ளது. மேலும் உடலுறவு உங்களை நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வைக்கிறது.
ஆராய்ச்சிகளின் மூலம் வெளிவந்த, உடலுறவு கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பகுதியில் காணலாம்.

1. சளி மற்றும் காய்ச்சல்
வாரத்தில் இரண்டு முறை உடலுறவு கொள்ளும் தம்பதிகளுக்கு சளி மற்றும் காய்ச்சலை எதிர்த்து போராடும் அளவிற்கு நோயெதிர்பு சக்தி அதிகரிக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2. உடல் எடை குறைகிறது
உடலுறவு கொள்வதால் உங்களது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, இதயத்தின் துடிப்பும் அதிகரிக்கிறது. மேலும் உடலுறவுகொள்வது ஒரு உடற்பயிற்சி செய்வதற்கு சமமானதாக உள்ளது.

3. மாதவிடாய் பிரச்சனை
உடலுறவு மாதவிடாய் பிரச்சனையை ஒழுங்கு செய்யும் ஹார்மோன்களை சரியாக இயங்க வைக்கிறது. மேலும் எதிர்மறையான மேனோபாஸ் அறிகுறிகளை குறைக்கிறது.

4. தலை மற்றும் உடல்வலி
உடலுறவு வைத்துக்கொள்ளும் போது உடலில் உள்ள ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் செயல்பட ஆராம்பிக்கிறது. இது உடல் மற்றும் தலைவலியை போக்க உதவியாக உள்ளது.

5. மார்பக புற்றுநோய்
முப்பது வயதிற்கு மேல் பெண்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனை இந்த மார்பக புற்றுநோய் தான். உடலுறவு வைத்துக்கொள்வதால், மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகள் குறைகிறது.

6. நறுமணங்களை உணரும் திறன்
ஆரோக்கியமான உடலுறவு, உங்களின் நறுமணங்களை உணரும் திறனை அதிகரிக்கிறது. இது மூளைக்கு புத்துணர்வை தருகிறது.

7. மனஇறுக்கம் குறையும்
காலை நேரத்தில் உடலுறவு கொள்வதால் அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. மன இறுக்கம் குறைகிறது.



Click it and Unblock the Notifications
