கர்ப்பிணிப்பெண்கள் கடைபிடிக்க வேண்டிய எளிய அழகு குறிப்பு!

Posted By:
Subscribe to Boldsky

பெண்களின் வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக மூன்று முக்கியமான விஷயங்களில் ஒன்று தாய்மை. மிகவும் உன்னதமாக பார்க்கப்படுகிற இந்த விஷயத்த்தினால் அதாவது பெண்கள் தாய்மைப் பேறு அடைவதாலேயே ஒரு பெண் முழுமையடைகிறாள் என்றும் சொல்லப்படுகிறது.

ஒரு பெண் குழந்தையை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏராளமான மாற்றங்களை சந்திப்பார்கள். வாழ்க்கையில் புதுமையான அனுபவத்தை சந்திக்கும் போது அதனை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பவர்களும் உண்டு அதே சமயம் அதனை கையாளத் தெரியாமல் மிகுந்த அவதிக்குள்ளாவர்.

Basic Beauty tips for pregnancy ladies

பொதுவாக பெண்கள் தங்கள் அழகில் கொஞ்சம் அக்கறை செலுத்துபவராக இருப்பர்,கர்ப்பமாக இருக்கும் போது உடலில் ஏற்படும் மாற்றத்தினால் அதன் பிரதிபலிப்பு சருமத்திலும் தோன்றிடும். கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் சருமப் பிரச்சனைகள் தோன்றிடும்.

அதற்கு சிகிச்சையளிக்கும் வகையில் பல்வேறு அழகுசாதன பொருட்களை பயன்படுத்தியிருப்போம். ஆனால் கர்ப்பமாக இருக்கும் போது இவற்றையெல்லாம் பயன்படுத்தலாமா? நாம் இதனை பயன்படுத்துவதால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு உண்டாகுமா? என்ற சந்தேகம் எழலாம். இதற்கு தீர்வு காணும் வகையில் எந்த கெமிக்கலும் சேர்க்காத இயற்கையான பொருட்களைக் கொண்டு கர்ப்பிணிப்பெண்களுக்கான சில அழகு குறிப்புகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை ஜெல் :

கற்றாழை ஜெல் :

சருமத்திற்கு மிகவும் பயன் தரக்கூடியது இந்த கற்றாழை ஜெல். இதிலிருக்கும் அற்புதமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவிடும். இது எந்த பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது.

இதனை எளிதாக வீட்டிலேயே கூட தயாரிக்கலாம். அலர்ஜி அல்லது வேறு ஏதேனும் சருமப்பிரச்சனை இருக்கும் இடங்களில் இந்த ஜெல்லை எடுத்து தடவுகள். சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிடலாம்.

ஜெல் தடவிய சிறிது நேரத்திலேயே சருமம் ஜெல்லை உறிந்து கொள்ளும் ஆனாலும் நீங்கள் கழுவுவதால் அந்த பிசுபிசுப்புத்தன்மை இருக்காது. இதனை தினமும் கூட பயன்படுத்தலாம்.

வெள்ளரி :

வெள்ளரி :

சருமத்தில் வெவ்வேறு நிற மாற்றங்கள் உண்டாகியிருந்தால் அதனை போக்க இதனை முயற்சிக்கலாம்.

வெள்ளரியை அதன் விதைகளை நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். மைய அரைத்த அந்த விழுதுடன் பால் இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் கழுவிடலாம்.

இதனால் சருமம் பொலிவுடன் காணப்படும்.

விட்டமின் இ :

விட்டமின் இ :

சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க விட்டமின் இ என்கிற சத்து மிகவும் அவசியமாகும். உங்கள் உடலில் விட்டமின் இ குறைந்தால் கூட சருமத்தில் அதன் பாதிப்புகள் தெரியும். இச்சமயத்தில் சருமத்திற்கு மட்டும் என்னென்ன க்ரீம்கள்,ஜெல் அப்ளை செய்துவந்தால் மட்டும் சருமம் பொலிவடையாது.

சருமத்திற்கு தேவையான சத்துக்களையும் நாம் கொடுக்க வேண்டும். அதனால் அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளில் விட்டமின் இ இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

பப்பாளி :

பப்பாளி :

பப்பாளி சருமத்திற்கு மிகவும் நல்லது. பப்பாளிப் பழத்தில் இருக்கும் சத்துக்கள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இரண்டு டீஸ்ப்பூன் பப்பாளி பழக்கூழுடன் ஒரு டீஸ்ப்பூன் தேன் கலந்து முகத்தில் பேஸ் பேக்காக போடுங்கள். 15 நிமிடங்களில் நன்றாக காய்ந்ததும் கழுவிவிடலாம்.

வரண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது நல்ல தீர்வாக அமைந்திடும். இதனை சருமத்தில் பயன்படுத்துவதற்கு பதிலாக உட்கொள்ளவும் செய்யலாம். இதுவும் மிகவும் நல்லது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

தயிர் :

தயிர் :

சருமத்தில் கரும்புள்ளிகள் தோன்றினால் அதற்கு தயிர் சிறந்த மருந்தாக அமைந்திடும். வெறும் தயிரை மட்டுமே கூட பயன்படுத்தலாம் அல்லது தயிருடன் பப்பாளிப்பழக்கூழை பயன்படுத்தினால் உடனடி மாற்றம் தெரிந்திடும்.

பப்பாளிக்கூழுடன் தயிர் சேர்த்து திக்கான பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். இதனை சருமத்தில் இரண்டு லேயர்களாக அப்ளை செய்து நன்றாக காய்ந்ததும் வெது வெதுப்பான நீரில் கழுவிடலாம்.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைந்திருக்கின்றன. இத்துடன் கூடுதலாக எந்த பொருளும் சேர்க்கத் தேவையில்லை. இதனை நீங்கள் இரண்டு விதமாக பயன்படுத்தலாம்.

ஒன்று உருளைக்கிழங்கை பெரிய பீஸாக கட் செய்து கொள்ளுங்கள் . பின்னர் அதனைக் கொண்டு உங்கள் முகத்தை துடைத்தெடுக்கலாம். இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் எல்லாம் நீங்கிடும். மேலும் சருமத்துளைகளும் புத்தாக்கம் பெறுவதால் ப்ரைட்டாக தெரியும்.

இதே போல உருளைக்கிழங்கை தோல்சீவி அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதிலிருந்து சாறெடுத்து அதனையும் முகத்தில் அப்ளை செய்யலாம்.

தண்ணீர் :

தண்ணீர் :

நம்முடைய சருமம் வரண்டுவிடாமல் பாதுகாத்து வந்தாலே பல்வேறு தோல் நோய்களிலிருந்து தப்பிக்கலாம். சருமத்தை ஈரப்பத்துடன் வைத்திருக்க வேண்டுமானால் போதுமான அளவு தண்ணீர் சத்து அவசியம்.

அதனால் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், தண்ணீரைத் தவிர இயற்கையான பழச்சாறுகள்,சூப்,இளநீர்,போன்றவை குடிக்கலாம். செயற்கையான பானங்கள்,கேஸ் நிறைந்த பானங்கள், அதிகமாக காபி,டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்த்திடுங்கள்.

சந்தனம் :

சந்தனம் :

சந்தனம் மிகவும் குளிர்ச்சியானது. இதனை சூடான நீரில் கலந்து கொள்ளலாம் அல்லது இரண்டு டீஸ்ப்பூன் எலுமிச்சை சாறுடன் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தில் தோன்றும் நிறமாற்றங்களை போக்கிடும். அதே சமயம் முகத்தை எப்போதும் ஃபிரஷ்ஷாக வைத்திருக்க உதவிடும்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் :

முகத்தில் சுருக்கம், பரு, அல்லது அதிகப்படியான வரண்ட சருமம் இருப்பவர்கள் ஓட்ஸை முகத்திற்கு பயன்படுத்தலாம். ஓட்ஸை முதலில் தனியாக அரைத்து பவுடராக்கிக் கொள்ளுங்கள். அவற்றுடன் காய்ச்சாத பாலை இரண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்து குழைத்து முகத்தில் பூசி காய்ந்ததும் கழுவி விடலாம்.

இதே எண்ணெய் பசையுள்ள சருமம் என்றால் தயிருடன் சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Basic Beauty tips for pregnancy ladies

Basic Beauty tips for pregnancy ladies
Story first published: Thursday, October 12, 2017, 10:00 [IST]