விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது எப்படி?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் ஆண்கள் தங்களது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியத்தின் மீது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மன அழுத்தம் சூழ்ந்துள்ள தற்போதைய சூழ்நிலையில், விந்தணுக்கள் எளிதில் அழிக்கப்படுவதோடு, அதன் உற்பத்தியும் பாதிக்ககப்படுகிறது.

உடலுறவின் போது முன்கூட்டியே விந்து வெளிப்படுகிறதா? இதோ அதற்கான சில நாட்டு வைத்தியங்கள்!

மேலும் எங்கும் நா ஊறும் ஜங்க் உணவுகள் இருப்பதால், அவைகளை எந்நேரமும் வாங்கி சாப்பிட நேரிடுகிறது. இதனால் அவற்றில் உள்ள கெமிக்கல்கள் மற்றும் நச்சுக்கள் உடலினுள் சென்று, ஆரோக்கியத்திற்கும், ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும் இடையூறை ஏற்படுத்துகிறது.

ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் குறைந்த விலையில் கிடைக்கும் சில உணவுப் பொருட்கள்!!!

இங்கு ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்க ஒருசில ஐடியாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றி உங்கள் விந்துவின் உற்பத்தியை அதிகரித்து பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுய இன்பம்

சுய இன்பம்

சில ஆய்வுகளில் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்பது விந்தணுக்களின் கன அளவை பாதிப்பதாக கூறுகின்றன. உங்களுக்கு ஏற்கனவே விந்தணு குறைவாக இருப்பின், சுய இன்பம் காண்பதைக் குறைத்துக் கொண்டு, உடலின் ஆற்றலை அதிகரித்து, படுக்கையில் சிறப்பாக செயல்படுங்கள்.

புகைப்பிடித்தல்

புகைப்பிடித்தல்

புகை விந்தணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, அதன் இயக்கத்தையும் குறைத்து, குறைப்பிரசவம் நடைபெற வழிவகுக்கும். ஆகவே நல்ல கருவளத்துடன் இருக்க, புகைப் பிடிப்பதை உடனே கைவிடுங்கள்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி

விந்தணுக்களின் எண்ணிக்கையில் உடற்பயிற்சியும் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே உங்கள் விந்தணு ஆரோக்கியமாக இருக்க தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

உடல் குளிர்ச்சி

உடல் குளிர்ச்சி

உடல் வெப்பம் விந்தணுக்களின் கன அளவை பாதிக்கும். எனவே இறுக்கமான உள்ளாடை, சுடுநீர் குளியல் மற்றும் அந்தரங்க பகுதியை வெப்பமடையச் செய்யும் எந்த ஒரு செயலையும் செய்யாதீர்கள். மேலும் நீண்ட நேர பைக் பயணம் மேற்கொள்வதையும் தவிர்த்திடுங்கள். ஏனெனில் அதுவும் விந்தணு உற்பத்தியை பாதிக்கும்.

ஆல்கஹால்

ஆல்கஹால்

ஆல்கஹால் ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவைக் குறைத்து, ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும். இதனால் விந்தணு உற்பத்தியில் இடையூறு ஏற்படும். எனவே மதுவை தொடாதீர்கள்.

தண்ணீர்

தண்ணீர்

விந்தணுக்களின் எண்ணிக்கையைப் பராமரிப்பதில் தண்ணீர் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே தினமும் போதிய அளவில் தண்ணீரைப் பருகி வாருங்கள்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மன அழுத்தம் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும். மன அழுத்தத்தின் தாக்கத்தில் இருந்து விடுபட தியானம், உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதோடு, உங்கள் மனதை அமைதிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: basics, அடிப்படை
English summary

Ways To Buildup Sperm

Todays men may need to be more careful about their sperm quality and count. Stress has become a part of our lives and toxins are there in the air we breathe, the food we eat and the water we drink.
Subscribe Newsletter