வேகமாக கருத்தரிக்க உதவும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய தம்பதிகள் பலர் கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு தற்போதைய மோசமான பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை தான் காரணங்கள். இதனால் கருவளம் மற்றும் கருப்பையின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, கருவுறுவதில் பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.

கருவுறுவதில் பிரச்சனையை சந்திக்காமல் வேகமாக கருத்தரிக்க நினைக்கும் தம்பதிகள், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அன்றாடம் சிறிது உட்கொண்டு வந்தால், கருவளம் மேம்பட்டு, கருத்தரிக்க முயற்சிக்கும் போது விரைவில் கருத்தரிக்கலாம். சரி, இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் உள்ள புரோட்டின், கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே வேகமாக கருத்தரிக்க நினைப்பவர்கள், கொண்டைக்கடலையை தினமும் சிறிது உட்கொண்டு வருவது நல்ல பலனைத் தரும்.

பன்னீர்

பன்னீர்

புரோட்டீன் வளமாக நிறைந்துள்ள உணவுகளில் ஒன்று பன்னீர். இது இனப்பெருக்க உறுப்புக்களை வலிமைப்படுத்தி, விரைவில் கருத்தரிக்க உதவும்.

ஐஸ் க்ரீம்

ஐஸ் க்ரீம்

ஆய்வு ஒன்றில் ஐஸ் க்ரீம்மில் உள்ள குறிப்பிட்ட கொழுப்புக்கள், கர்ப்ப ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டி, வேகமாக கருத்தரிக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள்

வேகமாக கருத்தரிக்க நினைப்பவர்கள், பச்சை இலைக் காய்கறிகளை தினமும் உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்து, கருத்தரிக்க உதவும்.

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகள்

பூசணிக்காய் விதைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பெண்கள் இந்த பூசணிக்காய் விதைகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், கருவளம் ஆரோக்கியமாகி, வேகமாக கருத்தரிக்க உதவும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் உடலினுள் உள்ள உட்காயங்களை குணப்படுத்தி, கருவுறுவதில் உள்ள பிரச்சனையைத் தடுக்கும்.

மீன்

மீன்

மீனில் ஒமேகா-3 ஃபேட்டி அமிலம் மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இவை கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, வேகமாக கருத்தரிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Kitchen Ingredients Can Help You Get Pregnant Faster!

Kitchen Ingredients For Faster Pregnancy work the best when it comes to easy conception, have a look at the list of best foods to get pregnant, here.
Story first published: Saturday, August 20, 2016, 15:12 [IST]
Subscribe Newsletter