ஆணுறை பயன்படுத்தாமலே கர்ப்பமடைவதை தடுக்க உதவும் 6 வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

திருமணமான புதியதில் தம்பதிகள் மத்தியில் இருக்கும் பல பயங்களில் ஒன்று, தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது எங்கே கருத்தரித்து விடுமோ என்பது. புதுமண தம்பதிகள் மத்தியில் இந்த எண்ணம் இயல்பு தான். சிறுது காலம் வாழ்க்கையை சந்தோசமாக கழிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க தான் செய்யும்.

கருத்தரிக்க நினைக்கும் போது ஆணுறை அல்லது கருத்தடை மாத்திரை தான் பொதுவாக மனதில் எழும். கருத்தடை மாத்திரைகள் பெண்களின் ஆரோக்கியத்தில் பக்கவிளைவுகளை ஏற்படும் தாக்கம் கொண்டவை. எனவே, ஆணுறையை தான் பயன்படுத்தி ஆகவேண்டும்.

ஆணுறையும் இன்றி கருத்தரிப்பதை தடுக்க ஏதேனும் வழி இருக்கிறதா எனில், இருக்கிறது. 100 சதவீதம் இல்லை எனிலும், 80% வரை கருத்தரிப்பதை தடுக்க இந்த முறைகள் பின்பற்ற படுகின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரியான வாரம்!

சரியான வாரம்!

மாதவிடாய் முடிந்த முதல் நான்கு நாட்கள் மற்றும் மாதவிடாய் ஆரம்பிக்க போகும் நாளுக்கு முந்தைய நான்கு நாட்களில் உறவில் ஈடுபட்டால் கருவின் தன்மை முழுமையாக இருக்காது, இதனால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.

புள் அண்ட் அவுட்

புள் அண்ட் அவுட்

உடலுறவில் ஈடுபடும் போது விந்தை உல் செலுத்தாமல் ஈடுபடும் முறையை ஆங்கிலத்தில் புள் அண்ட் அவுட் என கூறுகின்றனர். இந்த முறையில் 83% வரை கருத்தரிக்க வாய்ப்புகள் இல்லை.

காப்பர் டி!

காப்பர் டி!

கருத்தரிக்க நீங்கள் விரும்பும் வரையில், பெண்ணின் உடலில் "T" வடிவிலான ஒரு டிவைஸ்-ஐ நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் ஒருவர் வைத்து விடுவார். இது, கருத்தரிக்கும் வாய்ப்பை குறைத்துவிடும்.

கருத்தடை அறிவை சிகிச்சை!

கருத்தடை அறிவை சிகிச்சை!

இது குழந்தை பெற்ற பிறகு செய்யப்படும் அறுவை சிகிச்சை. அடுத்த குழந்தை வேண்டாம் என்ற முடிவுக்கு தம்பதிகள் வந்துவிட்டால், கருத்தடை அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளலாம். இந்த குழந்தை கட்டுப்பாடு அறுவை சிகிச்சை ஆண், பெண் இருவருக்கும் வெவ்வேறு முறையில் செய்யப்படுகிறது.

கருத்தடை மாத்திரைகள்!

கருத்தடை மாத்திரைகள்!

கருத்தரிக்காமல் இருக்க, கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்தலாம். ஆனால், இளம் வயதில் 18 -24 வயது வரை அதிகமாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வது பின்னாளில் கருத்தரிக்க நினைக்கும் போது, பலனளிக்காமல் போகலாம். அதாவது, இது கருப்பையின் வலிமையை குறைத்து, கருத்தரிக்க முடியாமல் போக செய்துவிடும்.

ஃபோர்ப்ளே!

ஃபோர்ப்ளே!

ஆணுறை பயன்படுத்தாமல், கருத்தரிப்பதை தடுக்க வேண்டும் எனில், ஃபோர்ப்ளேவில் மட்டும் தான் ஈடுபட வேண்டும். ஃபோர்ப்ளே கணவன், மனைவிக்கு மத்தியில் பிணைப்பை, உறவில் ஒரு நெருக்கத்தை அதிகரிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: basics, அடிப்படை
English summary

Six Ways To Avoid Pregnancy Without Using Condom

Six Ways To Avoid Pregnancy Without Using Condom, take a look on here.
Story first published: Thursday, August 25, 2016, 16:54 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter