கர்ப்பக் காலத்தில் பெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

கர்ப்பக் காலாத்தில் பெண்களின் உடலில் பல விதமான மாற்றங்கள் காணப்படும். உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்வு ரீதியாக பெண்கள் நிறைய மாற்றங்கள் உணர்வார்கள். இது மிகவும் இயல்பு. பெரும்பாலான மாற்றங்களுக்கு ஹார்மோனில் உண்டாகும் மாற்றங்கள் தான் காரணம்.

உடல் ரீதியாக எடுத்துக் கொள்ளும் போது, செரிமானம், குடல் இயக்கங்களிலும் மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும். கர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, தன்மை வரை பல மாற்றங்களை உண்டாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்!

பாரம்!

உடலில் கர்ப்பம் சார்ந்த ஹார்மோன் அதிகரிப்பதால் சில சுரப்பிகள் அதிகரிக்கும். இந்த சுரப்பி மார்பகம் பெரிதாக காரணியாக இருக்கின்றது. இதனால், கர்ப்பக் காலத்தில் பெண்கள் மார்பகத்தை சற்று பாரமாக உணர்வார்கள்.

மென்மை!

மென்மை!

கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு மார்பக பகுதியில் இரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். ஹார்மோன் மாற்றத்தால் திசுக்கள் உப்பியது போல ஆகும். இது, மார்பகம் கொஞ்சம் வலி மிகுந்ததான உணர்வை அளிக்கும்.

நரம்புகள் வெளிப்படும்!

நரம்புகள் வெளிப்படும்!

நீல நிறத்தில் நரம்புகள் மார்பக பகுதியில் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் அதிகப்படியான இரத்த ஓட்டம் தான்.

பெரிதாகும்!

பெரிதாகும்!

கருவுற்ற பெண்கள் சிலருக்கு மார்பக முலைக்காம்பு பகுதி கடினமாகவும், பெரிதாகவும் காணப்படும். திசு பெரிதாகும் போது சில பெண்கள் மத்தியில் இந்த மாற்றம் காணப்படலாம்.

பால் சுரத்தல்!

பால் சுரத்தல்!

இரண்டாவது அல்லது மூன்றாவது மூன்று மாத சுழற்சியின் போதே கர்ப்பிணி பெண்களுக்கு பால் சுரக்கும். இதனால், அவர்களுக்கே அறியாமல் பால் வடிதல் உண்டாக வாய்ப்புகள் உண்டு. குழந்தை பிறக்கும் முன்னரே பால் வடிதல் உண்டாவது இயல்பு தான்.

ஸ்ட்ரெச் மார்க்!

ஸ்ட்ரெச் மார்க்!

மார்பகங்கள் திடீரென பெரிதாவதால் ஸ்ட்ரெச் மார்க் உண்டாகலாம்.

தொய்வுற்று காணப்படும்!

தொய்வுற்று காணப்படும்!

மார்பகங்கள் பெரிதாவதால் தொங்குவது போன்ற தொய்வு காணப்படும். இது கர்ப்பக் காலத்தில் குறைவாக இருப்பினும், குழந்தை பிறந்த பிறகு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

இதை தவிர்க்க, பெண்கள் பிரசவத்திற்கு பிறகு முறையான உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: basics, அடிப்படை
English summary

Seven Surprising Changes Your Breasts Experience During Pregnancy

Seven Surprising Changes Your Breasts Experience During Pregnancy, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter