ஆண்களுக்கு ஆண்மையின்மை ஏற்பட காரணமாக இருக்கும் சில விஷயங்கள்!

By: Batri Krishnan
Subscribe to Boldsky

ஆரோக்கியமே ஒருவரின் உண்மையான செல்வம். இருப்பினும், பலர் நவீன வாழ்க்கையின் பலனாக, ஆரோக்கியத்தை இழந்து தவிக்கின்றனர். எனவே நாம் ஒவ்வொருவரும், நமக்கு என்னென்ன நோய்கள் உள்ளன? அவைகள் ஏன் ஏற்பட்டது? அவற்றை தீர்க்கும் வழிகள் என்னென்ன? போன்ற சில முக்கிய கேள்விகள் மற்றும் அதற்குரிய பதில்களை தெரிந்து வைத்திருப்பது, நம்முடைய நல்ல மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தொடர்ந்து அனுபவிக்க உதவும்.

ஆண்மையின்மை என்பது ஒரு ஆணின் இயலாத தன்மைதான். இது கண்டிப்பாக கவனத்திற்குரியது. இதன் காரணமாக உங்களுக்கு மன அழுத்தம், விரக்தி மற்றும் ஊக்கமின்மை போன்றவை அதிகரிக்கலாம். அதோடு மட்டுமல்லாமல் இது உங்களின் பாலியல் வாழ்வையும் மங்கச் செய்துவிடும்.

ஆண்மையின்மை என்பது ஒரு உடல் சம்பத்தப்பட்ட பிரச்சனை என்பதால், இதை குணப்படுத்த கண்டிப்பாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும். நீங்கள் இயல்பாகவே ஆண்மையின்மையைத் தவிர்த்து ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்க ஐந்து எளிய வழிமுறைகள் உள்ளன. எனவே இங்கே அதைப் பற்றி புரிந்து கொள்ள சில காரணங்கள் உள்ளன ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெளிப்படுத்து

வெளிப்படுத்து

ஆண்மையின்மையைத் தடுக்க, நீங்கள் உங்களுடைய விருப்பத்தை மறைக்காமல் துணையிடம் வெளிப்படுத்துங்கள். ஏனெனில் தூண்டல் என்பது உங்களை உடலுறவுக்கு தயார்படுத்தும். கவனத்தை கவர உங்களுக்கு ஒரு சில நிமிடங்கள் தேவைப்படலாம். இது அனைவருக்குமே தேவைப்படும்.

மருந்துகள்

மருந்துகள்

சில மருந்துகள் ஆண்மையிழப்பு போன்ற பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவர்களின் கூற்றுப்படி, சுமார் 150-க்கும் மேற்பட்ட மருந்துகளில் ஆண்மையின்மையை ஏற்படுத்தும் மூலக்கூறுகள் உள்ளன. எனவே நீங்கள் உங்களுடைய மருந்துகளை எடுத்துக் கொள்ளும் முன், உங்களுடைய மருத்துவருடன், உங்களுடைய மருந்துகளின் பாலியல் சம்பந்தமான பாதகமான விளைவுகளின் சாத்தியம் பற்றி கலந்து ஆலோசனை செய்யுங்கள். மருந்துகளில் மாற்றம் தேவைப்பட்டால் அது உங்கள் மருத்துவரின் மேற்பார்வையில் மட்டுமே நடைபெற வேண்டும்.

மது

மது

நீங்கள் அதிகமாக மது அருந்துவதை தள்ளி வைத்தால், ஆண்மையின்மையும் உங்களிடம் இருந்து வெகு தொலைவில் இருக்கும்.

புகை

புகை

சிகரெட் புகைத்தல் என்பது உங்களின் சுகாதார வாழ்க்கையைப் பாதிக்கும். சிகரெட்டில் அடங்கியுள்ள நிக்கோட்டின், இரத்த நாளங்களை சுருங்கச் செய்து விடுவதால், அது உங்களின் ரகசிய உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைத்து விடும். எனவே, ஆண்மையின்மையை தவிர்க்க நிக்கோட்டின் உள்ள சிகரெட் புகைத்தலை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஆரோக்கியமற்ற உணவு

ஆரோக்கியமற்ற உணவு

சில உடல் பிரச்சனைகள் ஆண்மையின்மையை ஏற்படுத்தி விடுகின்றது. எனவே நல்ல மற்றும் ஆரோக்கியமான உணவு வழக்கங்கள் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள் மூலம், ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை தக்க வைத்து, அதன் மூலம் ஆண்மையின்மை பிரச்சனையைத் தவிர்க்க முடியும். ஆரோக்கியமற்ற உணவு மற்றும் உடற்பயிற்சி இல்லாமை போன்றவை தவிர்க்கப்பட்டால், உடல் பலவீனம் ஏற்படாது. ஒரு நல்ல உணவு திட்டம் மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகள் உங்களின் எடையை குறைத்து, உங்களின் சுயமரியாதையை மேம்படுத்த உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Major Causes Behind Male Impotency

Do you know the actual reason behind male impotency? There are several factors that cause erectile dysfunction in men. Read to know more.
Subscribe Newsletter