Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்களின் கருவளத்தை அதிகரிப்பது எப்படி?
கர்ப்பமாவதில் ஆண்களின் கருவளம் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆண்களின் விந்து செல்களின் எண்ணிக்கையுடன், ஆரோக்கியமானதாக இருந்தால் தான், எளிதில் கருவுற முடியும். ஆனால் இன்றைய ஆண்களின் மோசமான வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால், கருவளம் குறைந்து, பல்வேறு பாலியல் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

எனவே தமிழ் போல்ட்ஸ்கை ஆண்களின் பாலியல் பிரச்சனைகளைத் தடுத்து, அவர்களின் கருவளத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து, அவற்றை ஒவ்வொரு ஆணும் பின்பற்றினால், நிச்சயம் அவர்களின் கருவளம் மேம்படும்.

டிப்ஸ் #1
ஆண்கள் தங்களது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இல்லாமல் அதிகமாக இருந்தால், உடனே அதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், உடல் பருமன் விந்துவின் ஆரோக்கியத்தை அழிக்கும். எனவே தினமும் உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.

டிப்ஸ் #2
ஆண்களின் கருவளம் பாதிக்கப்படுவதற்கு, அவர்களின் மோசமான உணவுப் பழக்கமும் ஓர் முக்கிய காரணம். ஆண்கள் ஜங்க் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தவிர்த்து, பழங்கள் மற்றும் காய்கறிகளை தங்கள் உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். இதனால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

டிப்ஸ் #3
இது விந்து உற்பத்தியைத் தூண்டும் அற்புதமான பயிற்சி. அது என்னவெனில், ஆணுறுப்பை மென்மையாக சுழற்ற வேண்டும். இதனால் அதன் சுற்றளவு அதிகரித்து, இரத்த நாளங்கள் விரிவடையும். அதுமட்டுமின்றி இந்த பயிற்சியால் மறைமுகமாக விந்துவின் உற்பத்தியும் தூண்டப்படும்.

டிப்ஸ் #4
லேப்டாப்பில் வேலை செய்யும் போது, மடியில் வைத்து வேலை செய்வதைத் தவிர்த்திடுங்கள். இது விந்தணுவின் எண்ணிக்கையை பாதிக்கும்.

டிப்ஸ் #5
கேகல் பயிற்சியை ஆண்கள் தினமும் செய்து வந்தாலும், ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியம் மேம்படும். மேலும் இப்பயிற்சி விந்துவின் உற்பத்தியை சீராக்கும்.

டிப்ஸ் #6
நல்ல ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றிலும் பாலியல் பிரச்சனைகளை சந்தித்தால், சற்றும் தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். மருத்துவர் கூறுவதைப் பின்பற்றுங்கள்.



Click it and Unblock the Notifications