ஆண், பெண் குழந்தைகள் வயதுக்கு வந்ததை வெளிப்படுத்தும் நான்கு ஆரம்பக் கால அறிகுறிகள்!

Posted By:
Subscribe to Boldsky

தங்கள் குழந்தை ஒவ்வொரு பருவத்தை கடந்து வளர்ந்து வருவதை கண்டு பெருமகிழ்ச்சி அடைவோர் தான் பெற்றோர்கள். இதில், பருவம் அடைதல் என்பது முக்கிய கட்டம். ஆண்களை, காட்டிலும் பெண்கள் மத்தியில் தான் இதை விழாவாக கொண்டாடும் வழக்கம் நம் கலாச்சாரத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

சில வீடுகளில் குசும்புத்தனமாக, ஆண் குழந்தைகள்,"எங்களுக்கெல்லாம் இது கிடையாதா" என வினாவுவார்கள். இதற்கு பெரும்பாலும், சிறிய முறைத்த பார்வை தான் பதிலாக கிடைக்கும். பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் துவங்குவதை வைத்து அவர்கள் வயதுக்கு வந்துவிட்டனர் என அறியப்படுகிறது.

இதே, போல ஆண்களுக்கும் சில அறிகுறிகளை வைத்து கண்டிறிய முடியும். மேலும், ஆரம்பக் கட்டத்திலேயே ஆண், பெண் குழந்தைகள் வயதுக்கு வந்துவிட்டனர் என்பதை வெளிக்காட்டும் நான்கு அறிகுறிகளும் இருக்கின்றன...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறி #1

அறிகுறி #1

குரல் உடைதல்! ஆண்கள் வயதுக்கு வந்துவிட்டனர் என்பதை அவர்களது குரலில் ஏற்படும் மாற்றத்தை வைத்து கண்டறியலாம். அவர்களது குரல்வளம் மிக ஆழமாக, கம்பீரமாக மாறும். இதை தான் ஆங்கிலத்தில் வாய்ஸ் பிரேக்கிங் என்கின்றனர்.

அறிகுறி #2

அறிகுறி #2

மனநிலை மாற்றம்! உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்களை வைத்து ஆண், பெண் இருவர் மத்தியிலும் வயது வந்ததற்கான அறிகுறிகளை அறியலாம். திடீர் கோபம், மன அழுத்தம், வெட்கம், சோகம் போன்றவை காரணமின்றி தோன்றும்.

அறிகுறி #3

அறிகுறி #3

கேசம் வளர்தல்! அந்தரங்கள் உடல் பாகங்களில் கேசம் வளர்வதை வைத்து ஆண், பெண் இருவர் மத்தியிலும் வயது வந்ததை எளிதாக கண்டறிய முடியும். கால்கள், அக்குள், பிறப்புறுப்பு போன்றவற்றில் கேசம் வளர ஆரம்பிக்கும்.

அறிகுறி #4

அறிகுறி #4

மார்பக வளர்ச்சி! இது பெண்களிடம் உண்டாகும் மாற்றம். மாதவிடாய் துவங்குவது மட்டுமின்றி, மார்பக வளர்ச்சியை வைத்தும், பெண் வயதுக்கு வர இருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள முடியும். மேலும், மார்பு பகுதியில் சற்று வலி ஏற்படுவதை வைத்தும் கூட அறிய முடியும்.

குறிப்பு!

குறிப்பு!

இன்றைய உணவு மற்றும் வாழ்வியல் மாற்றங்களினால் சில பெண் குழந்தைகளுக்கு மிக சிறு வயதிலேயே மார்பக வளர்ச்சி தென்படலாம். அதை இத்துடன் சார்பு படுத்தி குழப்பமடைய வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: basics, அடிப்படை
English summary

Four Early Signs Of Puberty In Your Child

Four Early Signs Of Puberty In Your Child, take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter