ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் ஆண்களின் கருவளம் மிகவும் குறைந்த அளவிலேயே ஆரோக்கியமாக உள்ளது. ஆண்களின் கருவளம் என்று வரும் போது அதில் விந்தணுக்களின் எண்ணிக்கை, தரம் போன்றவையும் அடங்கும். இதற்கு உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை என பலவற்றை காரணங்களாக கூறலாம்.

Foods To Increase Male Fertility In Men

இதனால் தம்பதிகளால் கருத்தரிப்பதில் இடையூறை சந்திக்க நேரிடுகிறது. எப்படி சில உணவுகள் ஆண்களின் கருவளத்தைக் குறைக்கிறதோ, அதேப்போல் சில உணவுகள் கருவளத்தை அதிகரிக்கவும் உதவும். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை தினமும் சாப்பிட்டு வந்தாலே ஆண்களின் கருவளம் அதிகரிக்கும்.

இங்கு ஆண்களின் கருவளத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து, அவற்றை தினமும் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தக்காளி

தக்காளி

தக்காளியில் லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக உள்ளது. நிறைய ஆய்வுகளும் தக்காளி விந்தணு கருமுட்டை வரை நீந்தி செல்ல உதவுவதாக கூறுகின்றன. எனவே ஆண்கள் தக்காளியை அன்றாட உணவில் சேர்ப்பது நல்லது.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளது. ஆய்வு ஒன்றில் ஆண்கள் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிட்டு வந்தால், விந்தணுவின் எண்ணிக்கை, இயக்கம் மற்றும் அமைப்பு மேம்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பூசணிக்காய் விதை

பூசணிக்காய் விதை

பூசணி விதைகளில் விந்தணுவின் வளர்ச்சி மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு தேவையான ஜிங்க் வளமாக உள்ளது. மேலும் இதில் வேறுபல அத்தியாவசிய சத்துக்களும் அடங்கியுள்ளது. எனவே சாப்பிடும் சாலட்டுகளின் மேல் பூசணி விதைகளைத் தூவி சாப்பிடுங்கள்.

பருப்பு வகைகள்

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் ஃபோலேட் ஏராளமாக உள்ளது. இது ஆண்களுக்கு மட்டுமின்றி, பெண்களுக்கும் தான். ஆண்களின் உடலில் ஃபோலேட் குறைவாக இருந்தால் தான், விந்தணு தரமற்றதாக இருக்கும். எனவே புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான க்யூயர்சிடின் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உள்ளது. ஆய்வுகளில் க்யூயர்சிடின் விந்தணுவின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் மற்றும் அதில் உள்ள ரெஸ்வெட்ரால் விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் இயக்கத்தை அதிகரிக்கும் என தெரிய வந்துள்ளது. எனவே ப்ளூபெர்ரி கிடைக்கும் போது, அவற்றை வாங்கி சாப்பிடுங்கள்.

தண்ணீர்

தண்ணீர்

ஆண்களின் கருவளத்தை அதிகரிக்கும் எளிய வழிகளுக்கு ஒன்று தண்ணீர் குடிப்பது. தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், விந்தணுவின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, அதன் தரமும் அதிகரிக்கும். பொதுவாக விந்தணு நீர்மம் போன்றது என்பதால், தண்ணீரை அதிகம் பருகினால், விந்தணுவின் ஆரோக்கியம் மேம்படும்.

மாதுளை

மாதுளை

மாதுளையை ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும். ஆய்வுகளில் மாதுளை விந்ததுணுவின் தரத்தை அதிகரிப்பதாகவும், பாலியல் வாழ்க்கை சிறப்பாக்குவதாகவும் தெரிய வந்துள்ளது.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் அமினோ அமிலங்கள் அதிகம் உள்ளது. இதனால் அது விந்தணுவின் எண்ணிக்கை மற்றும் அதன் இயக்கத்தை அதிகரிக்கும். எனவே தினமும் ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். டார்க் சாக்லேட் கசப்பாக இருக்கும் என்பதை மறவாதீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Foods To Increase Male Fertility In Men

Here are some foods to increase male fertility in men. Read on to know more...
Story first published: Friday, October 21, 2016, 15:03 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter