Latest Updates
-
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்!
தொப்புள்கொடி பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய திகைப்பூட்டும் உண்மைகள்!
தொப்புள்கொடியில் இருந்து தான் தாய் மற்றும் பிள்ளையின் உறவு ஆரம்பிக்கிறது. தொப்புள்கொடி அறுபட்ட பிறகு தான் இவ்வுறவின் இணைப்பும், நெருக்கமும் மிகவும் அதிகமாகிறது.
தொப்புள்கொடி, நஞ்சுக்கொடி மூலமாக தான் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் தாயின் உடலில் இருந்து பரிமாற்றம் செய்யப்படுகிறது. இன்றளவும் உலகில் அதிக வியப்புடன் காணப்படும் உருவாக்கம் ஓர் விந்து கருவோடு இணைந்து சிசுவாக வளர்வது தான்.
அப்படிப்பட்ட உறவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் தொப்புள்கொடியை பற்றிய திகைப்பூட்டும் தகவல்கள் பற்றி இனிக் காண்போம்...

உண்மை #1
மரபணு மற்றும் உயிரியல் ரீதியாக நஞ்சுக்கொடியின் ஒருபகுதி அம்மாவுடையது, மறுபகுதி குழந்தையுடையது ஆகும்.

உண்மை #2
கர்ப்பக் காலத்தின் ஒவ்வொரு நிமிடத்திலும், ஒவ்வொரு துளி இரத்தம் கருப்பை வாயுளாக நஞ்சுக்கொடிக்கு ஊட்டச்சத்துக்கள் செல்கிறது. மேலும், அம்மாவின் இரத்தம் நேரடியாக குழந்தையுடன் கலப்பதும் கிடையாது.

உண்மை #3
நஞ்சுக்கொடி சராசரியாக 22 சென்டிமீட்டர் குறுக்களவும், 2.0-2.5 சென்டிமீட்டர் அடர்த்தியும் கொண்டிருக்கும். மேலும், நஞ்சுக்கொடியின் எடை 470 கிராம்.

உண்மை #4
நஞ்சுக்கொடி மூலம் முதன்முதலில் உருவாகும் ஹார்மோன் hCG ஆகும். இந்த ஹார்மோன் கர்ப்பகால பரிசோதனையின் போது கண்டறியப்படுகிறது.

உண்மை #5
ஒவ்வொரு கலாச்சார ரீதியில் நஞ்சுக்கொடி சார்ந்த நம்பிக்கைகள் வேறுபடுகின்றன. சிலர் புதைக்கின்றனர், சிலர் உண்கின்றனர், சிலர் அதை மருந்தாக நம்புகின்றனர்.

உண்மை #6
தொப்புள்கொடியானது சிசுவின் ஓர் அங்கமாகும். இதில், இரண்டு தமனிகளும், ஒரு நரம்பும் இருக்கும்.

உண்மை #7
தொப்புள்கொடி சராசரியாக 22 இன்ச் நீளம் இருக்கும். இது நஞ்சுக்கொடியுடன் இணைந்திருக்கும்.

உண்மை #8
தொப்புள்கொடி அறுத்த பிறகு 5-15 நாட்கள் கழித்து உருவாவது தான் தொப்புள்.



Click it and Unblock the Notifications
