தாயின் உடல் பருமன் பிறக்காத குழந்தையையும் குண்டாக்குமா?

By: Batri Krishnan
Subscribe to Boldsky

ஒரு புதிய ஆய்வின் முடிவுகள் கர்ப்பிணி பெண்களின் உடல் பருமன் மற்றும் அதிக இரத்த சர்க்கரை அளவு போன்றவை கர்க்பத்தில் உள்ள குழந்தையை பருமனாக்குகின்றது என்று தெரிவிக்கின்றது. கர்ப்பிணிப் பெண் ஏற்கனவே அதிக பருமனாகவும் மற்றும் உயர் இரத்த சர்க்கரையால் பாதிக்கப்பட்டிருந்தால், அது அவரின் கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கின்றது.

Does Your Obesity Make Your Baby Fat?

இதற்கான உண்மையான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், வயிற்றிலுள்ள குழநதை அங்கு நிழவும் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்கின்றது. அதாவது சில நேரங்களில் தாய் உட்கொள்ளும் அதிக உணவானது தொப்புள் கொடி மூலம் சிசுவிற்கு செல்வதால் அந்த சிசுவும் அதிக உடல் பருமனுக்கு உள்ளாகின்றது என நம்பப்படுகின்றது.

Does Your Obesity Make Your Baby Fat?

ஆராய்ச்சியாளர்கள் 20,000 க்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் குழந்தைகளை ஆய்வு செய்தனர். அப்பொழுது அதிக இரத்த சர்க்கரை அளவினால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகள் குழந்தைப் பருவத்தில் உடல் பருமன் ஆபத்திற்கு ஆளாகின்றனர் என கண்டுப்பிடித்தனர்.

Does Your Obesity Make Your Baby Fat?

இந்த ஆய்வு முடிவுகள் இத்தகைய குழந்தைகளில் 31 சதவீதத்தினர் தங்களுடைய 8 வயதிற்கு முன் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர் என தெரிவிக்கின்றது. ஒரு கர்ப்பிணி பெண் தன்னுடைய கர்ப்ப காலத்தில் சுமார் 17.5 கிலோவிற்கும் அதிகமாக உடல் எடை கூடினால், அவர்களுடைய குழந்தை உடல் பருமனால் அவதிப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

Does Your Obesity Make Your Baby Fat?

சுகாதார நிபுணர்கள் ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் பல்வேறு வழிமுறைகளை பரிந்துரைக்கின்றார்கள். ஏனெனில் இது புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் ஏற்படும் உடல் பருமனைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

English summary

Does Your Obesity Make Your Baby Fat?

A new study claims that obesity and abnormal blood sugar levels in pregnant women could make the child obese. The metabolism of the baby in the mother’s...
Subscribe Newsletter