ஆண்கள் சந்திக்கும் மலட்டுத்தன்மைக்கும், விறைப்புத்தன்மை பிரச்சனைக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Posted By:
Subscribe to Boldsky

பலருக்கும் விறைப்புத்தன்மை பிரச்சனை மற்றும் மலட்டுத்தன்மை பிரச்சனை, இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உண்மையான அர்த்தம் என்னவென்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இரண்டும் ஒரே பிரச்சனையைத் தான் குறிக்கிறதா அல்லது வெவ்வேறு பிரச்சனையைக் குறிக்கிறதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

விறைப்புத்தன்மை பிரச்சனை என்பது உடலுறவின் போது ஆணுறுப்பு விறைப்பு அடையாமல் இருப்பதைக் குறிக்கும். மலட்டுத்தன்மை பிரச்சனை என்பது ஆண் இனப்பெருக்க உறுப்பில் உள்ள பிரச்சனையைக் குறிக்க பயன்படுத்தப்படும் வார்த்தையாகும்.

இப்போது ஆண் இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த சில உண்மைகளைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை #1

உண்மை #1

முதுமை ஆண்களின் இனப்பெருக்க சக்தியைக் குறைக்கும். சமீபத்திய புள்ளிவிவரப்படி, 41 சதவீத ஆண்கள் தங்களது 40 வயதை எட்டும் போது விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவஸ்தைப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதே சமயம் 70 வயதை அடையும் போது, 70 சதவீத ஆண்கள் விறைப்பு பிரச்சனையை தீவிரமாக சந்திக்கின்றனராம்.

உண்மை #2

உண்மை #2

இதை சரிசெய்ய முடியுமா? பிரச்சனையின் தீவிரத்தைப் பொறுத்து எடுக்கப்படும் சிகிச்சையால் குணமாகும் வாய்ப்புள்ளது. மேலும் அன்றாட உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மருந்துகளினாலும், ஆண்களின் இனப்பெருக்க பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

உண்மை #3

உண்மை #3

வயது மட்டும் இவைகளுக்கு காரணமல்ல. ஏனெனில் சில ஆண்கள் தங்களது முதுமைக் காலத்திலும், காதல் வாழ்க்கையில் சிறப்பாக ஈடுபட்டு, குழந்தையைப் பெற்றுள்ளனர்.

உண்மை #4

உண்மை #4

விறைப்புத்தன்மை பிரச்சனை எதனால் ஏற்படுகிறது? இதற்கு முக்கிய காரணம், ஆண் இனப்பெருக்க உறுப்பில் போதிய இரத்த ஓட்டம் இல்லாதது. இப்படி இரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதற்கு மன அழுத்தம், குறிப்பிட்ட மருந்துகள், மன இறுக்கம், சோர்வு, பதற்றம், கெட்ட பழக்கங்கள் போன்றவை தான் காரணங்களாகும்.

உண்மை #5

உண்மை #5

சில இடுப்பு உடற்பயிற்சிகள், இடுப்பு பகுதியை வலிமைப்படுத்துவதோடு, அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படச் செய்து, இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: basics, அடிப்படை
English summary

Difference Between Impotence And Erectile Dysfunction

Let us discuss about male reproductive issues first as both the words are about problems men face in the area of reproduction.
Story first published: Monday, October 3, 2016, 14:04 [IST]
Subscribe Newsletter