குழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த வயது எது? மகப்பேறு மருத்துவர் ஆலோசனை!

Posted By:
Subscribe to Boldsky

பொருளாதாரம், வணிகம், விலைவாசி, மக்கள் தொகை என தொடர்ந்து இவற்றில் இந்தியா வளரும் நாடாகவே இருந்து வருகிறது. பொருளாதார வளர்ச்சி நல்லது தான் என்றாலும், மக்கள் தொகையிலும் வளர்ச்சி அடைவது அந்த பொருளாதாரத்திற்கு ஓர் பெரும் தடையாக அமைந்துவிடுகிறது.

A Feritility Doctor Says This Is the Ideal Age to Get Pregnant

இதற்கு முற்றிப்புள்ள வைப்பதாக நினைத்தோ என்னவோ, இன்றைய இளம் சமுதாயம் குழந்தை பெற்றுக் கொள்வதை நீண்ட கோடிட்டு தள்ளி வைத்துவிடுகிறார்கள். இதன் காரணத்தால் சிலருக்கு குறிப்பிட்ட வயதிற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் சிரமமாகிவிடுகிறது.

இளமை, வேலை, வாழ்வியல், பிடித்த வாழ்க்கையை வாழ்கிறோம் என பல காரணம் காட்டி குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளி வைக்கும் இளம் தம்பதிகள். இதைப் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்...

மருத்துவர் ஆலோசனை:

சமீபத்தில், பிரபல ஐரோப்பிய கருத்தரிப்பு மருத்துவர் டாக்டர். கில்லியன் லாக்வுட், குழந்தை நலன், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் விரைவாக கருத்தரிக்க எந்த வயது சிறந்தது என கூறியிருந்தார்.

A Feritility Doctor Says This Is the Ideal Age to Get Pregnant

இதுகுறித்து மருத்துவர் கில்லியன், "ஏறக்குறைய 25 வயது / வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்வது பெண்களுக்கு சரியான வயது. இந்த வயதில் மனதளவிலும், உடல் அளவிலும் பெண்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் முதிர்ச்சிப் பெற்றிருப்பர்கள்.

தற்போதைய வாழ்வியல் முறையை வைத்துப் பார்க்கும் போது, பொருளாதார அடிப்படையிலும், குழந்தை வளர்ப்பு சார்ந்தும் கூட 25 வயது குழந்தைப் பெற்றுக்கொள்ள சிறந்த வயது" என கூறியிருக்கிறார்.

இன்றைய நிலை:

ஆம், உலகளவில் இன்று ஆண், பெண் பேதமின்றி அனைத்துத் துறைகளிலும் காலூன்ற ஆரம்பித்துவிட்டோம். கணவன், மனைவி இருவரின் ஊதியமும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் வாழும் குடும்பக்களில் பெரிய பங்கு வகிக்கிறது.

A Feritility Doctor Says This Is the Ideal Age to Get Pregnant

எனவே, எதிர்கால வாழ்க்கை திட்டம், குழந்தை வளர்ப்பு என இரண்டும் சார்ந்த பார்க்கையில் 25 வயது குழந்தைப் பெற்றுக்கொள்ள சிறந்த வயதாக கருதப்படுகிறது.

மேலும், இயற்கையாகவே 20 - 26 வயது வரை பெண்களின் கருவின் வலு அதிகமாக காணப்படும். இதனால் கருத்தரிப்பதும் எளிமையாக இருக்கும். முப்பது வயதுக்கு பிறகு மெல்ல, மெல்ல பெண்களின் கருவின் வலு குறைய ஆரம்பித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: basics அடிப்படை
English summary

A Feritility Doctor Says This Is the Ideal Age to Get Pregnant

A Feritility Doctor Says This Is the Ideal Age to Get Pregnant