தாம்பத்தியம் பற்றி தம்பதிகள் கேட்க தயங்கும் 4 கேள்விகளுக்கான மருத்துவரின் பதில்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சங்கோஜம், சங்கடம் காரணத்தினால் சில சந்தேகங்களை பலரும் மருத்துவர்களிடம் கேட்பதில்லை. அதிலும், அந்தரங்கம் அல்லது தாம்பத்தியம் சார்ந்ததாக இருந்தால் சுத்தமாக அதைப்பற்றி வெளியே கேட்க தயக்கம் கொள்கின்றனர். இதனால், பாதிப்பும், எதிர்வினை தாக்கமும் உண்டாவது என்னவோ அவர்களுக்கு தான்.

மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கட்டாயம் செய்ய வேண்டியவை!

அந்த வகையில் உடலுறவுக் குறித்தும், உடலுறவு மூலம் பரவும் நோய் தொற்றுகள் குறித்தும் தம்பதிகள் மருத்துவர்களிடம் கேட்க தயங்கும் நான்கு கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் குறித்து இனிக் காணலாம்...

முதல் முறை பெற்றோரானவர்கள் கேட்கும் 12 கேள்விகளும்... அதற்கான பதில்களும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாதவிடாய் காலத்தில் உடலுறவு?

மாதவிடாய் காலத்தில் உடலுறவு?

உண்மையில் மாதவிடாய் காலத்தில் உடலுறவு வைத்துக் கொள்தல் பெண்களை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை. மேலும் பெண்களுக்கு இது இன்பத்தையும் அளிக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாதவிடாய் காலத்தில் உடலுறவு?

மாதவிடாய் காலத்தில் உடலுறவு?

ஆனால், இரத்த போக்கின் காரணமாக நேரடியாக உறவில் ஈடுபடுவதால் சில சமயங்களில் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஆணுறை போன்ற பாதுகாப்பு உபகரணம் பயன்படுத்தி உறவில் ஈடுபடுவது நல்லது.

விருத்தசேதனமில்லாத ஆணுறுப்பு எஸ்.டி.டி. தாக்கம்

விருத்தசேதனமில்லாத ஆணுறுப்பு எஸ்.டி.டி. தாக்கம்

விருத்தசேதனம் (சுன்னத்) செய்யப்படாத / செய்யப்பட்ட ஆணுறுப்பில் பால்வினை தாக்கம் அதிகரிக்கிறது என வேறுபாடுகள் ஏதும் இல்லை. பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடும் போது தான் எஸ்.டி.டி தொற்று அதிகமாக உண்டாகிறது. எனவே, உடலுறவில் ஈடுபடும் போது பாதுகாப்பாக இருங்கள்.

விருத்தசேதனமில்லாத ஆணுறுப்பு எஸ்.டி.டி. தாக்கம்

விருத்தசேதனமில்லாத ஆணுறுப்பு எஸ்.டி.டி. தாக்கம்

ஆனால், விருத்தசேதனமில்லாத ஆணுறுப்பு மூலம் எஸ்.டி.டி தொற்று சிறிதளவு கூடுதலாக பரவும் வாய்ப்புகள் இருக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மகப்பேறு மருத்துவரால் உடலுறவில் ஈடுபட்டதை கண்டரியமுடியுமா?

மகப்பேறு மருத்துவரால் உடலுறவில் ஈடுபட்டதை கண்டரியமுடியுமா?

நேற்று நீங்கள் உடலுறவில் ஈடுபட்டது மைக்ரோஸ்கோப் மற்றும் விந்து பரிசோதனை மூலமாக மகப்பேறு மருத்துவர்கள் கண்டறிய வாய்ப்புகள் இருக்கின்றன.

மகப்பேறு மருத்துவரால் உடலுறவில் ஈடுபட்டதை கண்டரியமுடியுமா?

மகப்பேறு மருத்துவரால் உடலுறவில் ஈடுபட்டதை கண்டரியமுடியுமா?

24 மணி நேரத்திற்குள் என்றால் நிச்சயம் கண்டறிய முடியும். அதன் பிறகு கண்டறிய சில பரிசோதனைகள் செய்யலாம். ஆனால், 48 மணிநேரத்திற்கு மேல் கண்டறிய வாய்ப்புகள் குறைவு தான்.

ஹெர்பெஸ்

ஹெர்பெஸ்

ஹெர்பெஸ் தொற்று நேரடியாக எந்த ஒரு திரவ தொடர்பாலும் உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன. ஒருவேளை உங்கள் துணைக்கு ஹெர்பெஸ் தொற்று, புண்கள் இருந்தால் அந்த இடத்தில் எச்சில் மூலமாகவோ, முத்தமிடுதல் மூலமாகவோ நேரடியாக தொடர்புக் கொள்ள வேண்டாம்.

ஹெர்பெஸ்

ஹெர்பெஸ்

இப்படி தொடர்ப்புக் கொள்வதால் ஹெர்பெஸ் மற்றுமின்றி வேறுவகையான தொற்றுகளும் கூட உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன. பிறப்புறுப்பு மட்டுமின்றி உடலில் வேறு எந்த இடத்தில் ஹெர்பெஸ் தொற்று இருந்தாலும், மேற்கூறியவாறு நேரடி தொடர்புக் கொள்ள வேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: basics, அடிப்படை
English summary

A Doctor Answers Four Embarrassing Intercourse Questions

A Doctor Answers Four Embarrassing Intercourse Questions, read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter