திருமணத்திற்குப் பின் முதல் குழந்தையை ஏன் தள்ளிப் போடக்கூடாது எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் திருமணத்திற்கு பின் நிறைய தம்பதிகள் குழந்தைப் பெற்றெடுப்பதைத் தள்ளிப் போடுகின்றனர். இதற்கு முதல் காரணம் நிதி நிலைமை தான். நாம் வாழ்வதற்கே பணம் போதாமல் இருக்க, குழந்தையைப் பெற்றெடுத்து அதையும் ஏன் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைப்பது சரி தான்.

ஆனால் வாழ்க்கையில் ஒரு நல்ல நிலைமைக்கு வரவே பல வருடங்கள் ஆகும். வீட்டின் நிதி நிலைமையை அதிகரித்துக் கொள்கிறேன் என்று வருடக்கணக்கில் தள்ளிப் போட்டால், வயது அதிகரித்து, பின் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.

4 Important Reasons Why You Should Not Delay Your First Pregnancy

எனவே திருமணமான பின் ஒரு வருடத்திற்கு குழந்தையைத் தள்ளிப் போடலாமே தவிர, அதற்கு மேல் தள்ளிப் போடக்கூடாது. கீழே திருமணத்திற்குப் பின் முதல் குழந்தையை ஏன் தள்ளிப் போடக்கூடாது என்பதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

வயது அதிகரிக்க வாய்ப்பு குறையும்

4 Important Reasons Why You Should Not Delay Your First Pregnancy

பெண்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க கருமுட்டைகளின் எண்ணிக்கை மற்றும் சக்தி குறையும். ஆகவே குழந்தையை தள்ளிப் போட்டால், பிற்காலத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க முயலும் போது கஷ்டத்தை சந்திக்க வேண்டிவரும். குறிப்பாக இன்றைய பெண்களுக்கு 30 வயதிற்கு மேல் இறுதி மாதவிடாய் நெருங்குவதால், குழந்தையைப் பெற்றெடுப்பதில் மிகுந்த சிரமத்தை அனுபவிக்கக்கூடும்.

பிறப்பு குறைபாடுகளுக்கான வாய்ப்பு அதிகம்

4 Important Reasons Why You Should Not Delay Your First Pregnancy

என்ன தான் கருத்தரிப்பதற்கான சிகிச்சைகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்த சிகிச்சைகளின் உதவியுடன் பிறக்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு இருக்கத் தான் செய்கிறது. அதிலும் 30 வயதிற்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு டவுன் சிண்ட்ரோம் என்னும் அசாதாரண குரோமோசோம்களைக் கொண்ட குழந்தைப் பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. அதே சமயம் 30 வயதிற்கு மேல் கருத்தரிக்கும் பெண்களுக்கு, கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்பும் அதிகம் இருக்கும்.

பிரசவத்தின் போது சிக்கல்

4 Important Reasons Why You Should Not Delay Your First Pregnancy

இன்றைய காலத்தில் 30 வயதிற்கு மேலான பெண்களுக்கு சுகப்பிரசவம் நடைபெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. ஏனெனில் வயது அதிகமாகி கருத்தரிக்கும் பெண்களின் உடல் பலம் குறைவாக இருப்பதோடு, பிரசவத்தின் போது நிறைய சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால் பெரும்பாலும் சிசேரியன் மூலம் தான் குழந்தையைப் பெற்றெடுக்கக்கூடும்.

நோய் தாக்குதல் அதிகம்

4 Important Reasons Why You Should Not Delay Your First Pregnancy

வயது அதிகரிக்கும் போது நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் தானாக உடலில் வரும். இந்த பிரச்சனையுடன் கருத்தரிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. மேலும் இந்த பிரச்சனையுடன் கருவுறும் போது, அது குழந்தையையும் தாக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எனவே தாமதிக்காமல் முடிந்த அளவில் சீக்கிரம் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொள்ளுங்கள்.

English summary

4 Important Reasons Why You Should Not Delay Your First Pregnancy

Here are few reasons why delaying your first pregnancy is an unhealthy choice. Read on to know more.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter