கருத்தடை மாத்திரை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் வினோதமான பக்க விளைவுகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

கருத்தரிக்க விரும்பாத தம்பதிகள், கருத்தரிப்பதை தடுக்க நிறைய வழிகள் இருக்கின்றன. ஆனால், பலரும் ஆணுறையை விட அதிகம் கருத்தடை மாத்திரைகள் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் பெண்களின் உடல்நலனில் நிறைய குறைபாடுகள் ஏற்படுகின்றன.

பிரசவம் குறித்து மருத்துவரிடம் கேட்க சங்கோஜப்படும் கேள்விகளும் அதற்கான பதில்களும்!!!

அதிகமாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் எதிர்காலத்தில் நீங்கள் விரும்பினால் கூட கருத்தரிக்க முடியாத அபாயம் ஏற்படலாம். எனவே, தம்பதியினர் கருத்தரிப்பு ஏற்படுவதை தடுக்க ஆணுறை போன்ற வேறு முறைகளை கையாள்வது நல்லது.

பெண்கள் ஏன் சிசேரியன் பிரசவத்தை மேற்கொள்கிறார்கள் என்று தெரியுமா?

இனி, கருத்தடை மாத்திரை அதிகம் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் வினோதமான பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஈஸ்ட் தொற்று

ஈஸ்ட் தொற்று

சரியான கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயுள்ள பெண்கள் அதிகமாக கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் திறன் குறைந்து ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்புகள் இருக்கின்றன.

கண்பார்வை பிரச்சனைகள்

கண்பார்வை பிரச்சனைகள்

கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் கண் பார்வையை வெகுவாக பாதிக்கிறது. சில அறிகுறிகள் உங்கள் கண்ணை வறண்டு போன மாதிரி உணர வைக்கும், இது கண் சார்ந்த பெரிய பிரச்சனையின் ஆரம்பமாக இருக்கலாம்.

இரத்த கட்டிகள்

இரத்த கட்டிகள்

இரத்த கட்டிகள் ஏற்படுவது என்பது கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால் மிகவும் அரிதாக ஏற்பட கூடிய பக்க விளைவாகும். இதய வலி, சுவாசிப்பதில் சிரமம், போன்றவை நுரையீரல் அல்லது இதயத்தில் இரத்த கட்டிகள் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள். காலில் வலி அல்லது வீக்கம் ஏற்படுதல் போன்றவை காலின் கீழ் பகுதியில் இரத்த கட்டி ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள்.

ஒற்றை தலைவலி

ஒற்றை தலைவலி

அதிகமாக கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதால் ஒற்றை தலைவலி அடிக்கடி ஏற்படும். கருத்தடை மாத்திரையினால் ஈஸ்ட்ரோஜெனில் ஏற்படும் குறைபாடு தான் இதற்கு காரணம்.

மன அழுத்தம்

மன அழுத்தம்

மனநலம் சார்ந்த பிரச்சனை உள்ள பெண்கள் அதிகம் கருத்தடை மாத்திரைகள் உட்கொள்வதால் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. நரம்பியக்கடத்திகள் எனப்படும் நியூரோட்ரான்ஸ்மிட்டர்ஸில் ஏற்படும் சமநிலை இன்மையின் காரணமாக தான் இவ்வாறு நடக்கிறது.

உடலுறவில் வலி

உடலுறவில் வலி

கருத்தடை மாத்திரைகள் அதிகம் உட்கொள்வதால் கீழ் இடுப்பு பகுதியில், உடலுறவுக் கொள்ளும் போது வலி ஏற்படும். கருத்தடை மாத்திரையின் விளைவால் ஈஸ்ட்ரோஜெனில் ஏற்படும் குறைபாடினால் தான் இந்த வலி ஏற்படுகிறது.

மருத்துவர்கள் எச்சரிக்கை

மருத்துவர்கள் எச்சரிக்கை

அதிகமாக கருத்தடை மாத்திரை எடுத்துக் கொள்வது பின்னாட்களில் கருத்தரிக்க முடியாமல் போகும் நிலைக்கு ஆளாக்கலாம். எனவே, கருத்தரிப்பதை தடுக்க வேறு முறைகளை கையாளுங்கள் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Six Strange Side Effects Of The Pill

Do you know about the six strange side effects of the pill? read here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter