Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!
கருத்தரிக்காமல் இருப்பதற்கு எத்தனையே கருத்தடை முறைகள் இருந்தாலும், அவை அனைவரும் சரியாக வேலை செய்வதில்லை. ஆனால் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால், நிச்சயம் கருத்தரிப்பதை தடுக்கலாம். இத்தகைய கருத்தடை மாத்திரைகள் அனைத்து மருந்து கடைகளிலும் கிடைக்கின்றன. மேலும் இவற்றை உட்கொண்டால் 72 மணிநேரத்திற்கு காதல் வாழ்க்கையில் ஈடுபடலாம். இருப்பினும், இப்படி கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டால் ஒருசில பக்கவிளைவுகள் ஏற்படும் என்று கேள்விப்பட்டிருப்போம்.
தற்போது பெரும்பாலான பெண்கள் கருத்தரிக்காமல் இருப்பதற்கு எடுத்து கொள்ளும் ஒன்று தான் கருத்தடை மாத்திரை. இப்படி எடுத்துக் கொள்ளும் போது ஒருசில உடல்நல பிரச்சனைகளுக்கு ஆளாக நேரிடும்.
அதிலும் இவை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக இந்த கருத்தடை மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டால், கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவதோடு, கருச்சிதைவின் அளவு அதிகரிக்கும். இதனால் நாளடைவில் மலட்டுத்தன்மை கூட ஏற்படும் வாய்ப்புள்ளது. சரி, இப்போது கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்வதால் ஏற்படக்கூடிய சில பக்க விளைவுகளைப் பார்ப்போம்.

மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும்
கருத்தடை மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், அவை கருத்தரிப்பதை கட்டுப்படுத்தும். ஆனால் அதே சமயம் அது மாதவிடாய் சுழற்சி மற்றும் கருத்தரிக்க முயலும் போது தடையை ஏற்படுத்தும்.

குமட்டல்
கருத்தடை மாத்திரையினால் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் குமட்டல். இப்படி கருத்தடை மாத்திரை எடுத்த பின்னர் குமட்டல் ஏற்பட்டால், அது கர்ப்பத்திற்கான அறிகுறி அல்ல. மாறாக அது கருத்தடை மாத்திரையினால் ஏற்படும் ஒரு பக்க விளைவாகும்.

இரத்தப்போக்கு
கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பின்னர், மாதவிடாய் சுழற்சியின் போது அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலியை சந்திக்கக்கூடும்.

தலை வலி
கருத்தரிக்கக் கூடாது என்று கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டால், கடுமையான தலை வலி ஏற்படும். இப்படி தலை வலி ஏற்படும் போது, அதற்கான மாத்திரைகளை எடுப்பதற்கு பதிலாக தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும்.

பிடிப்புகள்
மாதவிடாய் சுழற்சியின் போது அதிகப்படியான பிடிப்புகள் ஏற்படும். அப்படி பிடிப்புகள் ஏற்படும் போது மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல், சுடு தண்ணீரைக் கொண்டு ஒத்தடம் கொடுக்க வேண்டும் மற்றும் சுடு தண்ணீரை குடிக்க வேண்டும்.

மனநல மாற்றம்
கருத்தடை மாத்திரையினால் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படுவதால், அது அவ்வபோது மனநல மாற்றத்தை ஏற்படுத்தும்.

காதலுணர்ச்சி குறையும்
அதிகப்படியான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போது, நாளடைவில் காதலுணர்ச்சியை அதிகரிக்கும் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்துவிடும். காதல் வாழ்க்கையில் உள்ள நாட்டம் குறையும்.

மார்பகங்கள் மென்மையாகும்
இது கருத்தடை மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏற்படும் மற்றொரு பக்க விளைவாகும். அதில் மார்பகங்கள் மென்மையாவதோடு, அதனை தொட்டால் வலி ஏற்படும். ஆனால் இத்தகைய வலி விரைவில் குணமாகிவிடும்.



Click it and Unblock the Notifications