For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர்களே! இந்த உணவுகள உங்க குழந்தைக்கு தெரியாம கூட சாப்பிட கொடுக்காதீங்க...இல்லனா ஆபத்தாகிடுமாம்!

தேன் குழந்தைகளுக்கு ஆபத்தானது. இது குழந்தை பொட்டுலிசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு சோம்பல், பசியின்மை மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம்.

|

வளரும் குழந்தைகள் மற்றும் பிறந்து ஒரு வருடமான குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் கவனித்துக்கொள்வது பெற்றோரின் கடமை. குழந்தைகள் வளரும் வரை, அவர்களுக்கு எது செய்தாலும், பெற்றோராகிய நீங்கள் பார்த்து பக்குவமாக அவர்களுக்கு ஆரோக்கியமானதை மட்டுமே செய்ய வேண்டும். குழந்தைகள் வளரும்போது, அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு கொடுப்பது முக்கியம். ஏனெனில், உணவு நம் உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய உணவுகளை உங்கள் குழந்தைக்கு நீங்கள் கொடுக்க முயற்சித்தாலும், உங்கள் குழந்தை அதை சாப்பிட ஆர்வமாக இருந்தாலும், குழந்தைகள் சாப்பிடக் கூடாத சில உணவுகள் உள்ளன. குறைந்தபட்சம் அவர்களின் வயிறு அவர்களுக்கு இடமளிக்கும் வரை இதை நீங்கள் பின்பற்ற வேண்டும். குழந்தைகளின் உடல் முழு வளர்ச்சியடையாத காரணத்தால் சில உணவையும் உட்கொள்ள முடியாது.

foods-that-are-not-safe-for-babies-in-tamil

சில உணவுகளை அவர்கள் ஜீரணிக்க முடியாததால், குழந்தைகள் தங்கள் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சில குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். பெற்றோரின் அலட்சியம் குழந்தையின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும் மற்றும் அவர்களின் வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கும். ஆதலால், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே அவர்களுக்கு கொடுக்க வேண்டும். உங்கள் குழந்தைக்கு கொடுக்கக்கூடாத சில உணவுகளை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சில உணவுகள் குழந்தைகளுக்கு ஏன் மோசமானவை?

சில உணவுகள் குழந்தைகளுக்கு ஏன் மோசமானவை?

நிபுணர்களின் கூற்றுப்படி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை கொடுக்காமல் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது அவர்களின் மூளை செயல்பாட்டை எதிர்மறையாக பாதிக்கும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீது நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் உணவுப் பழக்கம் என்று வரும்போது, பெற்றோர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆறு மாத வயதை அடையும் வரை திட உணவுகளை அவர்களுக்கு கொடுக்கக்கூடாது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக தாயின் பாலை முழுமையாக கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு அவகேடோ, நட்ஸ்கள், முட்டையின் வெள்ளைக்கரு, மட்டி மற்றும் சிட்ரஸ் பழங்கள் சாப்பிட கொடுக்கக்கூடாது. இந்த உணவுகளை உட்கொள்வது வளரும் குழந்தைகளுக்கு ஆரோக்கிய அபாயங்களை ஏற்படுத்தும். இந்த உணவுகளில் சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

உப்பு

உப்பு

உங்கள் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக உப்பைச் செயலாக்கும் திறன் கொண்டவை அல்ல என்பதால், உங்கள் குழந்தையின் உணவில் அதிக உப்பு சேர்க்க வேண்டாம். சில சமயங்களில், அதிகப்படியான உப்பு மூளைக்கு கூட சேதம் விளைவிக்கும். எனவே, உங்கள் குழந்தையின் உணவில் அதிக உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை

சர்க்கரை

அதிக சர்க்கரை கொண்ட உணவு குழந்தைகளுக்கு பல் சிதைவை ஏற்படுத்தும். சர்க்கரை அதிகம் உள்ள பழங்கள், மிட்டாய்கள், சாலடுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம். இந்த காரணத்திற்காக, குழந்தைகளுக்கு அதிக சர்க்கரை கொண்ட சில இனிப்புகளை தவிர்க்க அறிவுறுத்தப்பட வேண்டும். இத்துடன் சாக்லேட்களையும் தவிர்க்க வேண்டும்.

தேன்

தேன்

தேன் குழந்தைகளுக்கு ஆபத்தானது. இது குழந்தை பொட்டுலிசத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கு சோம்பல், பசியின்மை மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, குழந்தைக்கு ஒரு வயது வரை தேன் கொடுப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

நட்ஸ்கள்

நட்ஸ்கள்

குழந்தைகளுக்கு நட்ஸ்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். 6 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கு முட்டைகளை ஜீரணிப்பதில் சிரமம் உள்ளது. எனவே, ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முட்டை மற்றும் நட்ஸ்கள் கொடுப்பதை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்

முட்டை

முட்டை

குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை என்றால், முட்டையின் வெள்ளைக்கருவை அளவோடு கொடுக்கலாம். முட்டையின் வெள்ளைக்கருவில் வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. சிறு வயதிலேயே உங்கள் குழந்தைக்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஊட்டினால், அது எரிச்சல், தடிப்புகள் மற்றும் செரிமான அமைப்பைத் தூண்டி வயிற்றுப்போக்கிற்கு வழிவகுக்கும். இருப்பினும், முதலில் உங்கள் குழந்தைக்கு ஒவ்வாமை இருக்கிறதா என்று பரிசோதித்த பிறகு, ஒரு வருடம் கழித்து முட்டையின் வெள்ளைக்கருவை ஊட்டத் தொடங்குவது சிறந்தது.

பசுவின் பால்

பசுவின் பால்

பசுவின் பாலில் அதிக லாக்டோஸ் உள்ளடக்கம் இருப்பதால், அது உங்கள் குழந்தையின் சிறிய வயிற்றை மோசமாக பாதிக்கலாம். எனவே, உங்கள் குழந்தை ஒரு வயதை அடையும் வரை பசுவின் பால் குடிக்கக் கூடாது. அதன் பிறகு, நீங்கள் பசுவின் பாலை குழந்தைக்கு குடிக்க கொடுக்கலாம். அப்போது, இது எளிதில் செரிமானமாகும் மற்றும் உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கும்.

இறுதிக் குறிப்பு

இறுதிக் குறிப்பு

உங்கள் குழந்தைக்கு பாலூட்டும் முதல் வருடத்தில், சில உணவுகள் சுகாதாரப் பிரச்சினைகளை உண்டாக்கும் என்பதால், உணவுகளை உண்ணாமல் இருப்பதை உறுதி செய்வது அவசியம். ஒரு புதிய பெற்றோராக, உங்கள் குழந்தைக்கு எந்த உணவுகள் பாதுகாப்பானவை மற்றும் பாதுகாப்பற்றவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு மென்மையான செரிமான அமைப்பு உள்ளது. மேலும் அவர்களின் அமைப்புக்கு பொருந்தாத உணவுகள் உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். ஆதலால், உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் உணவில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Foods That Are Not Safe For Babies in tamil

Here we are talking about the Foods That Are Not Safe For Babies in tamil.
Story first published: Tuesday, January 10, 2023, 19:41 [IST]
Desktop Bottom Promotion