For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியம்னு நெனச்சு குழந்தைகளுக்கு தர்ற மோசமான உணவுகள் இவைதான்... இனி தராதீங்க...

By Mahibala
|

மற்ற சுவைகளைக் காட்டிலும் குழந்தைகளுக்கு சிறுவயதில் இனிப்பு சுவை உள்ள உணவுகளைத் தான் அதிகமாக சாப்பிடக் கொடுப்போம். அதற்குக் காரணம் அவர்களுக்கு உணவன் மீது ஆர்வம் உண்டாக வேண்டும் என்பதற்காக தான்.

குழந்தைகளுக்கு அதிக அக்கறையோடு செய்கிறேன் என்று ஆரோக்கியம் என நினைத்து, ஆரோக்கியமற்ற ஆமாசமான உணவுகளைக் கொடுக்கிறோம். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளுக்கான உணவுகள்

குழந்தைகளுக்கான உணவுகள்

பெரும்பாலான குழந்தைகள் இனிப்பு உணவுகளையே ஆரம்ப காலத்தில் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். அது குழந்தைகளின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தாலும் கூட, வெறும் இனிப்பு மட்டும் சாப்பிடுவதால் அவர்களுடைய ருசிக்கும் திறன் குறைந்துவிடும்.

அதனால் தான் நாளடைவில் அவர்களுக்கு சராசரியாக நாம் சாப்பிடும் உணவின்மீது ஈடுபாடு ஏற்படுவதே இல்லை. ஏனெனில் குழந்தைகளைப் பொருத்தவரை ஓரு கேரக்டராகவே குழந்தைகளுக்குள் செல்வது தான் மன ரீதியான தாக்கத்தை உண்டாக்கி வைத்திருக்கிறது.

அப்படி நீங்கள் ஆரோக்கியம் என்று நினைத்துக் கொண்டு தவறான உணவுப் பழக்கத்தைச் சொல்லிக் கொடுப்பது பற்றி பார்க்கலாம்.

MOST READ: பிறந்த நாளுக்கு நன் டிரஸ் போட்டுதான் கேக் வெட்டுமாம்... இது பிள்ளையா? பிசாசா?

பழச்சாறுகள்

பழச்சாறுகள்

குழந்தைகளுக்கு பொதுவாக ஆரோக்கியமானது என்று குழந்தைகள் வளர வளர வெவ்வேறு வகைகளில் பழச்சாறுகளைக் கொடுக்கிறோம். அது அவர்களுக்கும் மிக வசதியானதாகவே இருக்கிறது. ஆனால் பழமாக சாப்பிடக் கொடுப்பதற்கும் ஜூஸ் கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? ரெண்டுமே ஒன்று தான் நீங்கள் நினைக்கலாம். நீங்களே யோசித்துப் பாருங்கள்.

ஒரு கிளாஸ் பழச்சாறில் குறைந்தபட்சம் 4 முதல் 5 ஸ்பூன் அளவு சர்க்கரை இருக்கிறது. அது நாம் சேர்க்கும் சர்க்கரை, பழங்களில் உள்ள நார்ச்சத்து வெளியேற்றப்பட்ட பின் இருக்கும் சர்க்கரையும் சேர்த்து. அது குழந்தைகளின் உடலில் கார்போஹைட்ரேட்டை மட்டுமே சேர்க்கும்.

அதனால் பழமாக அப்படியே சாப்பிடக் கொடுங்கள். பழச்சாறாகக் கொடுக்காதீர்கள்.

யோகர்ட்

யோகர்ட்

யோகர்ட்டில் நிறைய புரோ-பயோடிக் இருக்கிறது. அதனால் குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் என்று மருத்துவர்களும் பரிந்துரை செய்கிறார்கள். ஆனால் யோகர்ட் நல்லது என்று கடைகளில் இனிப்பு சேர்க்கப்பட்ட செயற்கை சுவையூட்டப்பட்ட யோகர்ட்டை வாங்கி ஸ்டைலாக குழந்தைகளின் கைகளில் கொடுத்து விடுகிறோம்.

கடைகளில் பிரிட்ஜில் வைத்த, சர்க்கரை, பழச்சுவை ஆகியவை சேர்த்து கலோரி கூட்டப்பட்ட யோகர்ட் கொடுப்பதால் தான் இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வந்து விடுகிறது. உடல் பருமனாகிறார்கள். அதனால் சிரமம் பார்க்காமல் குழந்தைகளுக்கு வீட்டிலேயே யோகர்ட் செய்து கொடுங்கள்.

செரல்ஸ்

செரல்ஸ்

நம்மில் நிறைய பேர் செய்யும் பெரிய தவறு இதுதான். நாம் வீட்டில் பார்த்து பார்த்து சமைக்கும் உணவுகளை விடவும் சூப்பர் மார்க்கெட்டுகளில் பளபளக்கும் கவர்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் உணவைச் சாப்பிடுவதை கௌரவமாகவும் ஆரோக்கியமாகவும் நினைப்பது தான். ஆனால் அது உண்மையல்ல.

குறிப்பாக செரல்ஸ், கார்ன்பிளக்ஸ் ஆகியவற்றை மிக எளிதாக குழந்தைகளுக்கு காலை உணவாகப் பாலில் கலந்து கொடுத்துவிடுகிறோம். அது மிக முக்கியமாக மாற்ற வேண்டிய விஷயம்.

MOST READ: ராமரே வந்து மண்டியிட்டு வழிபட்ட தமிழ்நாட்டு சிவன் கோவில் எது தெரியுமா?

தேன்

தேன்

குழந்தைகளுக்கு தேன் கொடுத்து வந்தால் அந்த குழந்தை வேகமாகவும் தெளிவாகவும் பேசுவார்கள். சளி குறையும் இப்படி நிறைய வதந்திகள் உண்டு. ஆனால் நிச்சயமாக தேன் குழந்தைகளுக்கு இரண்டு வயதுக்கு முன்பாகக் கொடுக்கவே கூடாது. ஏனென்றால் சிலருக்கு அது அழற்சியாக மாறிவிடும். ஏனென்றால் தேனில் பாக்டீரியாக்கள் இருப்பதால் சில குழந்தைகளுக்கு ஒவ்வாமை உண்டாகிவிடும்.

நோ திராட்சை

நோ திராட்சை

குழந்தைகளுக்கு வைட்டமின்களும் மினரல்களும் மிக அவசியமானது தான். திராட்சையில் அவை நிறைய இருக்கின்றன. ஆனாலும் குழந்தைகளுக்கு வளரும் வரை திராட்சை கொடுக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் திராட்சை குழந்தைகளின் ஜீரண சக்தியைப் பாதிக்கும்.

மல்டி விட்டமின்

மல்டி விட்டமின்

குழந்தைகளுக்கு மல்டி விட்டமின் மிக முக்கியம். அதற்காக மல்டி விட்டமின் மாத்திரைகளைக் கொடுக்காதீர்கள். அதற்கு பதிலாக வாழைப்பழத்தைக் கொடுக்கலாம். அது ஜீரண சக்தியையும் கூட மேம்படுத்தும்.

MOST READ: ஏ.எல்.விஜயக்கு ரெண்டாவது கல்யாணமாம்... பொண்ணு யார்னு தெரியுமா?

மில்க் ஷேக்

மில்க் ஷேக்

நிறைய பேர் பெப்ஸி போன்ற சோடா கலக்கப்பட்ட பானங்களைக் கொடுக்கிறார்கள். அது மிகத் தவறான விஷயம். அதற்கு பதிலாக பால் சேர்க்கப்பட்ட மில்க் ஷேக்குகள் கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Harmful Foods We Often Give to Our Children

Many children start eating foods that contain a lot of sugar at a very young age. This causes a child’s taste buds to reduce their sensitivity, so normal food doesn’t seem appealing anymore. There are also foods that children shouldn’t eat because of the physiological characteristics of their body
Story first published: Monday, July 1, 2019, 16:25 [IST]