Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
உங்கள் வீட்டு இளவரசிகளுக்கான 10 வித்தியாசமான ட்ரெண்டிங் தமிழ் பெயர்கள்..!
உங்கள் வீட்டு அழகு தேவதைகளுக்கான அருமையான, ஸ்டைலான, காலத்திற்கேற்ற ட்ரெண்டிங் தமிழ் பெயர்கள் குறித்து இங்கு படித்தறியுங்கள்..!
ஒவ்வொரு தம்பதியரும் பற்பல கனவுகளுடன் தங்கள் வாழ்க்கையை தொடங்குகின்றனர். தம்பதியர்களின் வாழ்க்கையை நிறைவு செய்வது, அவர்தம் காதலின் அடையாள சின்னமாக விளங்குவது அவர்கள் வாழ்வில் கிடைக்கும் குழந்தைச் செல்வம் தான். அப்படிப்பட்ட தங்களின் கடவுளின் பரிசிற்கு, ஒரு தகுந்த - சிறந்த பெயர் சூட்டி அழகு பார்த்து அதன் வாழ்க்கையை அழகு படுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
அந்த வகையில் பெற்றோர் அனைவரும் தங்கள் குழந்தைக்கு நல்ல ஒரு பெயரை சூட்ட வேண்டும். அதுவும் காலத்திற்கேற்ப பெயர் சூட்ட வேண்டியது மிகவும் அவசியம்; ஏனெனில் ஒரு உதாரணத்திற்கு தம்பதியர் தன் குழந்தைக்கு லட்சுமி என்று காலங்காலமாக வைக்கும் பெயரை வைத்தால், அக்குழந்தை நாளை வளர்ந்து 'எனக்கு ஏன் இந்த பெயரை வைத்தீர்கள் இந்த பெயருக்கு பதிலாக வேறு பெயரை வைத்திருக்கலாமே என்று கேட்டால் அது நன்றாக இருக்குமா?'

ஆகையால் யோசியுங்கள் பெற்றோர்களே! தமிழ் பெயரை, உங்கள் முன்னோர் அல்லது பெற்றோர் பெயரை உங்கள் குழந்தைக்கு வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற உங்களின் ஆசை மற்றும் பாசம் புரிகிறது. ஆனால், அந்த பெயர் உங்கள் குழந்தையின் மனதை பாரமாக்கி, அதன் மகிழ்ச்சியை குலைக்குமானால், அத்தகைய பெயர் அவசியமா? என்று சிந்தித்து பாருங்கள்.
இதுவே நீங்கள் வைக்க நினைக்கும் பெயர் லட்சுமி என்றால், அதை காலத்திற்கு ஏற்ற வகையில் லக்சனா என்று ஸ்டைலாக வையுங்கள். உங்கள் குழந்தைக்கு நல்ல தமிழில், ஸ்டைலான, ட்ரெண்டிங்கான பெயர் வைக்க உங்களுக்கு உதவும் வகையில் இந்த பதிப்பை சமர்ப்பிக்கிறோம்..! பதிப்பை படித்து பெயர் சூட்டவும்.

மேஷா
மேஷா என்றால் தமிழில் நீடுழி வாழ் அல்லது அதிக ஆயுள் காலம் கொண்டு வாழ்வை வெல்பவர் என்று அர்த்தம். உங்கள் குழந்தை நீண்ட ஆயுளை பெற விரும்பினால், ஸ்டைலான மேஷா என்ற பெயரை உங்கள் வீட்டு இளவரசிக்கு சூட்டி மகிழுங்கள்.

நாவ்யா
நாவ்யா எனும் பெயர் புகழுக்குரியவர், பாராட்டுக்குரியவர், என்றும் இளமை என இது போன்ற அர்த்தங்களை அளிக்கக்கூடியது. உங்கள் குழந்தை வாழ்வில் புகழின் உச்சத்தை தொட்டு, என்றும் பதினாறாக இளமையுடன் வாழ வேண்டும் என்று நீங்கள் ஆசை கொண்டால், இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டுங்கள்.

டெவினா
டெவினா எனும் நாமம் தெய்வத்தின் ஒரு அம்சம், தெய்வாதீனம் பொருந்தியவர் என்று பொருள் படுகிறது. இந்த பெயரை குழந்தைக்கு சூட்டுவதால், குழந்தை தெய்வாம்சத்தின் அலைகளை பெற்று, வெற்றிகரமான வாழ்க்கையை மேற்கொள்ளும்.

ரசிகா
ரசிகா எனும் நாமம் கொண்ட குழந்தை அந்த சிவபெருமானின் அருளால் பிறக்கப் பெற்றது என்று பொருள். இந்தப் பெயரை குழந்தைக்கு சூட்டும் போது, குழந்தை சிவனின் அருள் பெற்று வாழ்வில் ஜெயம் பெறுகிறது.

நைஷா
நைஷா என்பது சிறப்பானவர், அன்புக்குரிய அலல்து காதலுக்குரிய மலர் என்று பொருள் தரும் பெயர். உங்கள் குழந்தை தன் வாழ்வில் சிறப்பான அன்பு மலராக விளங்க இந்த பெயரை உங்கள் வீட்டு தேவதைக்கு சூட்டி மகிழலாம்.

ரீஷா
ரீஷா எனும் பெயர் மிருதுவான தன்மை கொண்ட இறகு போன்றவள், நீண்ட நேர்கோடு போன்ற பிரச்சனைகள் இல்லா வாழ்வு, புனிதத் தன்மை கொண்டவர் என்று பொருள் தருகிறது. இந்தப் பெயரை குழந்தைக்கு சூட்டுவதால், குழந்தையின் வாழ்வு புனிதத் தன்மை பெற்று, பிரச்னைகளின்றி சந்தோசமாக அமையும்.

ஸைநா
ஸைநா எனும் பெயர் அழகு மற்றும் இளவரசி எனும் பொருளைத் தரும். இந்தப் பெயரை குழந்தைக்கு சூட்டுவதால், உங்கள் வீட்டு இளவரசி, வாழ்நாள் முழுதும் அரசியாக அழகுடன் வாழ்வாள்.

ஹீரா
ஹீரா எனும் பெயர் வாழ்வில் சக்திகள் கிடைக்கப் பெற்றவர், வைரம் போன்றவர் என்று பொருள் தரக்கூடிய பெயராகும். இதனை குழந்தைக்கு சூட்டும் போது, குழந்தையின் வாழ்வு யாராலும் அசைக்க முடியாததாக, சக்தியுடன் விளங்கும்; மேலும் குழந்தை சோதனைகளை வென்று சாதனையாக்கும் திறனை கொண்டு விளங்குவார்.

சைத்ரா
சைத்ராஎனும் நாமம் புத்தொளி, எழுச்சியின் கதிர், ஒளி பொருந்தியவர் என்ற பொருளைக் கொண்டது. இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டினால், அது குழந்தையின் வாழ்க்கையை ஒளி பொருந்தியதாக மாற்றி, குழந்தை ஒரு புது விடியலின் நாயகியாக வாழ்வில் வளர உதவும். மேலும் குழந்தை மற்றவர்க்கு பெரும் நன்மை செய்து, சரித்திரத்தில் இடம் பெறும் ஒளியோடு விளங்கும்.

சரித்ரா
சரித்ரா எனும் பெயர் ஒரு புது சரித்திரம் படைக்க போகும் நபரைக் குறிக்கும். உங்கள் குழந்தையின் வாழ்க்கை சாமானியமானதாக இல்லாமல், சரித்திரம் படைக்கும் - ஒரு சிறந்த மனித வாழ்க்கையாக, நல்ல தலைவரின் குணங்கள் கொண்ட நபராக விளங்க இந்த பெயரை உங்கள் குழந்தைக்கு சூட்டுங்கள்..



Click it and Unblock the Notifications
