For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீறிட்டு அழுது கொண்டே இருக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி?

குழந்தைகள் 3 வயதை எட்டும் வரை, அவர்களது உணர்வுகளை தெளிவாக எடுத்துரைக்க முடியாது; அதீத சோர்வால், வீறிட்டு அழுது கொண்டே இருக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி என இங்கு பார்க்கலாம்.

|

பிறந்த குழந்தைகள் தானாய் எழுந்து நடக்கும், பேசும் பருவம் வரும் வரையில் சில சமயங்களில் அழுது கொண்டே இருப்பார்கள்; அவர்கள் குழந்தை பருவத்தில் இருப்பதால் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்று அவர்களால் வாய் திறந்து கூற முடியாது. குழந்தைகள் தங்கள் உடலில் அசௌகரியம் ஏற்பட்டு இருப்பதை அழுகை, அமைதியாக இருத்தல், வழக்கமான செயல்களை செய்யாமல் உம்மென்று இருப்பது போன்ற நடவடிக்கைகளின் மூலம் வெளிப்படுத்துவர்.

Soothing Tips For Overtired Baby

பெரும்பாலும் குழந்தைகள் அதீத சோர்வு அடைந்தால் மட்டுமே குழந்தைகள் வீறிட்டு வீல்வீலென எப்பொழுதும் அழுது கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அழும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது, ஏன் இவ்வாறு அழுகிறார்கள், என்ன காரணம் போன்ற விஷயங்கள் குறித்து இந்த பதிப்பில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குழந்தைகளுக்கு அதீத சோர்வா?

குழந்தைகளுக்கு அதீத சோர்வா?

குழந்தைகள் பிறந்தது முதல் எந்த வேலையும் செய்வதில்லை; உண்டு விட்டு உறங்க மட்டும் தான் செய்கிறார்கள். அவர்களின் உடலில் எப்படி சோர்வு ஏற்படும் என்ற கேள்வி உங்கள் மதில் எழுகிறதா நண்பர்களே! ஆம் நீங்கள் கேட்பது சரிதான், குழந்தைகள் எந்தவொரு வேலையும் செய்வதில்லை.

ஆனால் அவர்கள் இப்பொழுது தான் பூமிக்கு தாயின் வயிற்றில் இருந்து வந்து இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்; அதனால் தான் அவர்களை நாம் மனிதர்கள் என்று அழைக்காமல், பின்னாளில் மனிதர்களாக வளரப்போகும் குழந்தைகள் என்று அழைக்கிறோம்.

எதனால் ஏற்படும்?

எதனால் ஏற்படும்?

குழந்தைகள் பிறந்த பின் தான், அவர்களின் உடல் உறுப்புகள் நன்கு பலம் பெற்று ஆரோக்கியமாக வளரத் தொடங்கும்; அந்த வளர்ச்சி காலகட்டத்தில் அவர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் அதாவது போதிய உணவு, ஊட்டச்சத்துக்கள், உறக்கம் போன்றவை கிடைக்காமல் மற்றும் போதிய உடல் வளர்ச்சி ஏற்படாமல் இருந்தால், அந்த சமயங்களில் குழந்தைகள் அதிக சோர்வாய் உணர்வார்கள், அவர்களின் சோர்வு உணர்வை எப்படி வெளிப்படுத்துவது என்று அறியாமல் அழுது கொண்டே இருப்பார்கள்.

குழந்தைகளுக்கு சோர்வினை ஏற்படுத்தும் முக்கிய காரணங்களை பற்றி அடுத்தடுத்த பத்திகளில் விரிவாக பார்க்கலாம்.

அதீத தொந்தரவுகள்

அதீத தொந்தரவுகள்

குழந்தைகள் சோர்வாய் உணரும் சமயங்களில் அல்லது தூங்க நினைக்கும் நேரங்களில் குழந்தைக்கு ஏதேனும் தொந்தரவுகள் ஏற்பட்டால், அவற்றை குழந்தைகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனில் குழந்தைகள் தங்கள் கோபத்தை, இயலாமையை அழுகையாக வெளிப்படுத்துவர். எப்படி நமக்கு கடுப்பாக இருக்கும் நேரங்களில் யாராவது வந்து தொந்தரவு செய்தால் கோபம் வருகிறதோ அதே போல் தான் குழந்தைகள்; அவர்கள் நமது சிறுவயது பிரதிபலிப்பு என்பதை உணருங்கள்.

தொந்தரவுக்கான காரணிகள்!

தொந்தரவுக்கான காரணிகள்!

பொதுவாக குழந்தைகள் சோர்வாக, உறக்கம் கொள்ளாமல், உண்ண முடியாமல் தவிக்கும் நேரங்களில் அவர்கள் மீது படும் ஒளி, காற்று, அணைப்பு போன்ற அனைத்துமே அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும்; அது அழுகையாக வெளிப்படும். குழந்தைகளை அவர்கள் சுகமில்லாத பொழுது அடிக்கடி பலர் தூக்க நேர்ந்தாலும், அன்னை தட்டிக் கொடுக்க நேர்ந்தாலும் கூட குழந்தைகள் பொறுமை இழந்து வெடித்து அழ தொடங்கி விடுவார்கள்.

உள்ளுறுப்புகளின் பிரச்சனை!

உள்ளுறுப்புகளின் பிரச்சனை!

குழந்தைகள் உட்கொண்ட உணவுகள் அல்லது மருந்துகள் அவர்களின் உள்ளுறுப்புகளில் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி இருந்தால், அதன் காரணமாக குழந்தைகள் அதிகம் அழுவர். இந்த பாதிப்பு அவர்களின் குடல் பகுதிகள், வயிறு மற்றும் மலவாய் பகுதிகளில் ஏற்பட்டு இருக்கலாம். ஆகையால், குழந்தைகள் வீறிட்டு அழும் பொழுது அவர்கள் உடலில் ஏதேனும் பிரச்சனை இருக்கலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

குறைவான உணவு!

குறைவான உணவு!

குழந்தைகளுக்கு, அவர்களின் வளர்ச்சிக்கு போதுமான அளவு உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கள் கிடைக்கவில்லை எனில், அந்த நேரங்களில் குழந்தைகள் அழுது கொண்டே இருப்பர்; ஆகையால், குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் போதுமான அளவு உணவினை அளித்து வருவது பெற்றோர்களின் கடமை!

அறிகுறிகள் என்னென்ன?

அறிகுறிகள் என்னென்ன?

குழந்தைகள் தொந்தரவுகளை சந்தித்தால், அவர்களின் உடல் நலமில்லாமல் இருந்தால் அவர்கள் செய்யும் செயல்களில், உண்ணும் உணவினில் நாட்டம் இல்லாமல் இருப்பர்; சரியாக பால் குடிக்க மாட்டார்கள், சரியாக முகம் பார்க்க மாட்டார்கள், குழந்தைகளின் உடல் விரைத்து இருக்கும். கொட்டாவி, விக்கல் போன்றவை ஏற்பட்டு கொண்டே இருக்கும், முக பாவனையில் மாறுபாடு, கை, காது, முடியை பிடித்து இழுத்துக் கொண்டே இருப்பர் மற்றும் தன்னைத்தானே ஆறுதல் படுத்திக் கொள்ள அதிகம் முயல்வர்.

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகள், அவர்கள் சந்தித்த பிரச்சனைகளால் தொந்தரவு அடைந்து அழுது கொண்டே இருக்கும் பொழுது பெற்றோராகிய நீங்கள், குறிப்பாக அன்னைகள் குழந்தையின் பிரச்சனை என்ன என்று அறிய முற்பட வேண்டும். மேற்கூறிய காரணங்களுள் எது குழந்தையை பாதித்து இருக்கிறது என்று அறிந்து அதற்கேற்ற தீர்வை அளிக்க முயல வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகள் போதிய அளவு உணவு பெறவில்லை எனில், அவர்களுக்கு தேவையான அளவு உணவு அளிக்க வேணும்.

என்னென்ன செய்யலாம்?

என்னென்ன செய்யலாம்?

குழந்தைகள் தொந்தரவு அடைந்து அழுது கொண்டே இருக்கும் நேரங்களில், அவர்களுக்கு சரியாக உணவு வழங்குதல், அவர்களுக்கு தொந்தரவு தரும் அணைப்பு, தொடுதல், வெளிச்சம் அனைத்தையும் குழந்தையை தொந்தரவு செய்து விடாமல் தவிர்க்க வேண்டும். குழந்தையை போர்வை கொண்டு நன்கு மூடி உறங்க வைக்க வேண்டும்; குழந்தையின் உறக்கம் தடைபடாமல், தொந்தரவு இல்லாமல் இருக்கும் வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இயல்பு நிலை!

இயல்பு நிலை!

குழந்தைகளுக்கு சரியான அளவு தாய்ப்பால் அளிக்க வேண்டும்; குழந்தைகளுக்கு பிடித்த விஷயங்களை செய்து அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வர முயல வேண்டும்; ஆனால் அது அவர்களுக்கு மேலும் தொந்தரவாக மாறாமல் இருக்கிறதா என்று கவனித்து செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு விருப்பமான தாலாட்டு, ரைம்ஸ், கதைகள் போன்றவற்றை கூற வேண்டும். குழந்தைகளுக்கு விருப்பமான காணொளிகளை, பொம்மைகளை தந்து அவர்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர முயல வேண்டும்.

என்ன செய்தும் குழந்தைகள் சரியாகவில்லை எனில், உடனே மருத்துவரை சந்தித்து கலந்துரையாடி குழந்தையின் பிரச்சனைக்கு தீர்வு காண முயலுதல் வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Soothing Tips For Overtired Baby

Soothing Tips For Overtired Baby
Story first published: Saturday, September 1, 2018, 10:18 [IST]
Desktop Bottom Promotion