Latest Updates
-
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
வெறும் 5 ரூபாயில் கிடைக்கும் இந்த பொருள் கோடையில் சந்திக்கும் பாதி பிரச்சனையை தடுக்குமாம் - கூறும் டாக்டர்! -
அடிச்சது ஜாக்பாட் - தென்னிந்தியாவின் இந்த மாநிலத்தில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கிடைத்திருக்காம் -
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் 27 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் லாபமும், வெற்றியும் குவியப்போகுது..
இயற்கையை அடிப்படையாய் கொண்ட குழந்தைகளுக்கான பெயர்கள்!
பெயர் என்பது தான் ஒருவரின் அடிப்படை அடையாளம்; இயற்கையை அடிப்படையாய் கொண்ட ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்கள் என்னென்ன என்று இங்கு படித்து அறியலாம்.
குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களில் அல்லது மாதங்களில் பெற்றோரால் அல்லது உறவினர் மற்றும் நண்பரால் தேர்ந்து எடுத்து வைக்கப்படும் பெயர் தான் அவர்களுக்கு நாளைய எதிர்காலத்தின் ஒரு முக்கிய அடையாளமாக மாற போகிறது. அப்படிப்பட்ட குழந்தைகளின் எதிர்கால அஸ்திவாரத்தை நன்கு திடமாக போட வேண்டும்.

அஸ்திவாரத்தை திடப்படுத்திக் கொடுப்பது, சிறப்பாக அமைத்து கொடுப்பது பெற்றோரின் கடமை!

பெயரின் முக்கியத்துவம்!
எதிர்கால அடையாளம் என்று கூறிய பின், புதிதாய் கூற எதுவும் இல்லை; இருப்பினும் குழந்தைகள் பெயர் வைத்த நொடியில் இருந்து மாண்டு போகும் நாள் வரை நீங்கள் வைத்த பெயரால் தான் அழைக்கப்பட இருக்கிறார்கள்! அப்படி இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு சூட்டப்போகும் பெயர், அவர்களுக்கு தன்னம்பிக்கை, நான் தனித்துவமானவன் என்ற உறுதி, நேர்மறை உணர்வு போன்ற விஷயங்களை தரக் கூடியதாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்!

இயற்கை சார்ந்து ஏன்?
இந்த பதிப்பில் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான பெயர்களை, அதிலும் இயற்கையின் அடிப்படையில், இயற்கையை சார்ந்த பெயர்களை பற்றி படித்து அறிய போகிறோம். ஏன் இயற்கை சார்ந்த பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என்றால், மேற்கூறிய பத்தியில் கூறிய அனைத்து முக்கிய விஷயங்களையும் ஒட்டு மொத்தமாக கொடுத்து, இயற்கை எனும் மாபெரும் சக்தியின் அடையாளம் குழந்தைகள் என்பதை அவர்களுக்கு சூட்டிய பெயர் உணர்த்தும்!

உதாரணம் பாப்போம்!
உதாரணத்திற்கு நெருப்பின் தன்மையை கொண்ட பெயரை குழந்தைக்கு சூட்டும் பொழுது, ‘நான் நெருப்புடா, என்னை யாரும் நெருங்க முடியாது; என்னால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்' என்ற உணர்வு குழந்தைகளின் மனதில் ஏற்படும். இத்தகைய நம்பிக்கையை, விடா முயற்சியை, வெற்றி கொள்ள முடியும் எண்ணத்தை இயல்பிலேயே குழந்தைகளுக்கு ஏற்படுத்த அவர்களுக்கு சூட்டப்படும் பெயர் உதவும்.!
இப்பொழுது பெண் மற்றும் ஆண் குழந்தைகளுக்கான இயற்கையை சார்ந்த அற்புத பெயர்கள் என்னென்ன மற்றும் அவற்றின் பொருள் என்ன என்று படித்து அறியலாம்.

அதரா - Adara
அதரா என்னும் பெயர் இயற்கையின் முக்கிய அம்சமான, பஞ்ச பூதங்களில் ஒன்றான நெருப்பை குறிக்கும். இந்த பெயருக்கு சக்தி, ஆற்றல், ஒளி, தன்னம்பிக்கை பண்ற அர்த்தங்கள் உண்டு. இந்த பெயரை குழந்தைக்கு சூட்டுவது வாழ்வில் அவர்களை நம்பிக்கை நிறைந்த, சக்தி கொண்ட மனிதர்களாய் வளர செய்யும். இது பெண் குழந்தைகளுக்கான ஒரு அருமையான பெயர்.

இஷியா - Ishya
இஷியா என்பது வசந்த காலத்தின் பொழுதான இயற்கையை குறிக்கும். குழந்தையின் வாழ்வு பூக்கள் மற்றும் தளிர் துளிர் விட்டு மலரும் வசந்த காலமாக, என்றென்றும் சந்தோசம், வளர்ச்சி, புதிதான விஷயங்கள் பிறப்பது என்று மகிழ்ச்சியாக அமைவதற்கான சக்தியை இப்பெயர் அளிக்கும். இந்த பெயர் பெண் குழந்தைகளுக்கு சூட்ட சிறந்த பெயர்.

பிராக்ருதி - Prakruthi
பிராக்ருதி என்னும் பெயர் பெண் குழந்தைகளுக்கானது; மிகவும் அழகான பெயர். இந்த பெயரின் பொருளே இயற்கை என்பது தான்; இந்த பெயரை குழந்தைக்கு சூட்டினால், அவர்களுக்கு வாழ்வில் வளர்ச்சியும், புத்தாக்கமும், இயற்கையை போன்ற நல்ல திடமான சக்தியும் கிடைக்கும். குழந்தைகளுக்கு சூட்டி மகிழ சிறந்த பெயர்!

சிருஷ்டி - Shristi
சிருஷ்டி என்ற பெயர் பெண் குழந்தைகளுக்கு சூட்டுவதற்கு ஏற்ற மிகச்சிரான்ஹா பெயர்; இந்த பெயருக்கு உலகம், அண்டம், படைப்பாளி என்ற பொருள்கள் உண்டு. இந்த பெயரை குழந்தைக்கு சூட்டினால், அவர்கள் ஒரு புது உலகத்தையே படைக்கும் அளவுக்கு ஆற்றல் பொருந்தியவர்களாக, படைப்புத்திறன் மேம்பட்டவர்களாக வாழ்வில் விளங்குவர்.

உதிப்தி - Udipti
உதிப்தி எனும் பெயருக்கு தீப்பொறி, தீ என்று அர்த்தம்; இந்த பெயர் பெண் குழந்தைகளுக்கு சூட்ட ஏற்றது. இந்த பெயரை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டினால், அவர்கள் வாழ்வில் எதையும் யாரையும் உரசிப் பார்க்கும், தட்டிக் கேட்கும் குணம் கொண்டவர்களாக, தைரியமானவர்களாக வளர்வார்கள். அவர்களால் நினைத்ததை அடைந்து வெற்றியை ஈட்ட முடியும்.
இப்பொழுது ஆண் குழந்தைகளுக்கான பெயர்களை, அவற்றின் அர்த்தங்களுடன் ஒவ்வொன்றாக படித்து அறியலாம்.

எய்டன் - Aiden
எய்டன் என்னும் பெயரும் நெருப்போடு தொடர்பு கொண்டது தான்; நெருப்பு என்பதால், ஒரு விஷயம் உருவாக காரணமாகவும் இருக்க முடியும், ஒரு விஷயத்தை அழித்து விடவும் முடியும். குழந்தைகள் வாழ்வில் அஞ்சா நெஞ்சம் மற்றும் அற்புத சக்தி கொண்டு, ஏற்படும் சிறு தோல்வியையும் பெரிய வெற்றிக்கு அடித்தளமிட்டு வளர இந்த பெயர் உதவும்.

அர்னவ் - Arnav
அர்னவ் என்னும் பெயருக்கு பெருங்கடல் என்று அர்த்தம். எப்படி கடல் மிகப்பெரியதாக, அதிக சக்தி கொண்டதாக, பல உயிர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பலருக்கு வாழ்வதற்கான வழியை காட்டி தொழில் அளிக்கிறதோ, அதே போல், இந்த பெயர் கொண்ட குழந்தையும் மிகப்பிறந்த உள்ளம் மற்றும் எண்ணம் கொண்டவனாக, பலரது வாழ்வில் ஒளி ஏற்றி, பலருக்கு வாழ்க்கை கொடுப்பவனாக இருப்பான்!

துருவ் - Dhruv
துருவ் என்னும் பெயர் வானத்தில் தெரியும் துருவ நட்சத்திரத்தை தான் குறிக்கிறது; அந்த நட்சத்திரம் எப்படி வழி தவறியவர்களுக்கு சரியான வழியை கட்டி உதவுகிறதோ, அது போல் இந்த பெயர் சூட்டப்பட்ட குழந்தை பலரின் வாழ்விற்கு வழிகாட்டி ஒரு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பான்!

ப்ரக்ருத் - Prakruth
ப்ரக்ருத் என்னும் பெயர் இயற்கையை குறிக்கும்; இயற்கை தான் ஆணையும் பெண்ணையும் படைத்தது; ஆகையால் இந்த இயற்கையின் மற்றொரு பெயரான பிரக்ருத் என்பதை ஆணுக்கும், பிராக்ருதி என்னும் பெயரை பெண்ணுக்கும் சூட்டலாம். இந்த பெயர் கொண்ட குழந்தை வாழ்வில் இயற்கையை போன்ற பெரும் பலம் மற்றும் சக்தி பொருந்தியவனாக பல்வேறு உருவாக்கத்திற்கு காரணமாக இருப்பான்!

தேஜன் - Tejan
தேஜன் என்னும் பெயர் மூங்கில் என்னும் பொருளை அளிக்கக் கூடியது. இந்த பெயரை குழந்தைகளுக்கு சூட்டினால், வளர்ந்து கொண்டே போகும் மூங்கிலை போல, வாழ்வில் நேர்மையாக உயரத்தை மட்டுமே நோக்கி, குழந்தைகளும் உயர்ந்து கொண்டே போவார்கள்! மூங்கிலினால் பல பயன்கள் மற்றும் இனிய இசை ஏற்படுவது போல, இந்த பெயர் சூட்டப்பட்ட குழந்தையால், இந்த அகிலம் பல நன்மையை பெறும்.



Click it and Unblock the Notifications