For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளின் மூளை செயல்பாட்டை அதிகரிக்க உதவும் உணவுகள்..!

இரும்புச்சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிக முக்கியமானது; குழந்தைகளின் உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து இங்கு படிக்கலாம்.

|

குழந்தைகள் பிறந்து வளரும் காலகட்டமான 0-1 என்னும் முக்கிய வளர்ச்சி காலகட்டமும், 1-10 என்னும் மிகமுக்கிய வளர்ச்சி காலகட்டமும் சரியாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏனெனில் குழந்தைகள் 14 வயதை எட்டும் வரையில் தான் அவர்கள் குழந்தைகளாக குழந்தை தனத்தோடு தாய் தந்தை பேச்சினை கேட்டு நடப்பர்; அதன் பின் அவர்கள் தங்கள் சுயபுத்தியை பயன்படுத்தி முடிவுகளை எடுக்க தொடங்கி விடுவர்.

iron rich foods for kids

தாய் தந்தை பேச்சை குழந்தைகள் கேட்கும் காலகட்டத்திலேயே அவர்களுக்கு அனைத்துவிதமான நல்ல பழக்க வழக்கங்களையும், கற்றுக் கொடுக்க விரும்பும் கலைகளையும் மொழிகளையும், பழக்கப்படுத்த விரும்பும் வாழ்க்கை முறையையும் கற்பித்து விட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பதிப்பின் நோக்கம்!

பதிப்பின் நோக்கம்!

எனவே, இந்த பதிப்பில் குழந்தைகள் என்றென்றும் ஆரோக்கியத்துடன் வாழ உதவும் சில முக்கிய இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை இன்றே படித்து, குழந்தைகளுக்கு அடிப்படை இரும்புச்சத்தை அளித்து, அனைத்து சத்துக்களையும் உடல் நலத்தையும் பெற உதவுங்கள் பெற்றோர்களே! வாருங்கள் என்னென்ன உணவுகள் என்று அறிய பதிப்பிற்குள் செல்வோம்.!

இரும்புச்சத்தின் அவசியம்!

இரும்புச்சத்தின் அவசியம்!

குழந்தைகளுக்கு இரும்புச்சத்து என்பது மிகவும் முக்கியமான ஒரு தேவை. குழந்தைகளின் வளர்ச்சி காலகட்டத்தில் சரியான அளவு இரும்புச்சத்து கிடைத்தால் மட்டுமே குழந்தைகள் பின்னாளில் ஆரோக்கியமாக வாழ முடியும். இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, மூளை செயல்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி, ஹீமோகுளோபின் அளவு, உடலின் இரத்த பெருக்கம் மற்றும் சரியான இரத்த ஓட்டம் போன்றவற்றை அதிகரித்து, உறுப்புகள் மிகச்சரியாக இயங்க உதவுகிறது.

எதைத் தடுக்கும்?!

எதைத் தடுக்கும்?!

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளால் குழந்தைகளின் உடலில் அனீமியா எனும் இரத்தசோகை, பலவீனம், முடி உதிர்தல், மற்ற உறுப்புகளின் சரியற்ற வளர்ச்சி போன்றவை பாதிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளின் உடலில் காயங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவை உடனடியாக குணமாக மற்றும் உடல் உறுப்புகளின் திசுக்கள் சரியான அளவு ஆக்சிஜனை பெறவும் உதவுகிறது.

அளவு எவ்வளவு?

அளவு எவ்வளவு?

குழந்தைகளுக்கு இரும்புச்சத்து முக்கியம், அவசியம் என்று கூறியாகி விட்டது, அதன் நன்மைகள் என்ன என்றும் சொல்லப்பட்டு விட்டது, இனி எந்த அளவு இரும்புச்சத்தை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்று பெற்றோர் அறிவது மிகவும் அவசியம்.

குழந்தைகள் பிறந்தது முதல் ஆறு மாத காலம் வரை ஒரு நாளைக்கு 0.27 மில்லிகிராம் அளவும், ஆறு முதல் 1 வயதிலான குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 11 மில்லிகிராம் அளவும், 1முதல் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 7 மில்லிகிராம் அளவும், 3 முதல் 7 வயது வரையிலான பிள்ளைகளுக்கு ஒரு நாளைக்கு 10 மில்லிகிராம் அளவிலான இரும்புச்சத்து கட்டாயம் கிடைக்க வேண்டும். இப்பொழுது இரும்புச்சத்து நிறைந்த உணவு வகைகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அசைவ உணவுகள்!

அசைவ உணவுகள்!

அசைவ உணவுகளில் அதிக கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகளை சரியாக தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். உண்ணத்தகுந்த அனைத்து வகை அசைவ உணவு வகைகளில், எந்தெந்த இறைச்சி வகையில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக இரும்புச்சத்து உள்ளதோ அவற்றை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். இறைச்சிகளில் ஆட்டின் ஈரல், கோழியின் மார்பு சதைகள், இறால், மீன் போன்றவை குழந்தைகளுக்கு கட்டாயமாக அறிமுகப்படுத்த வேண்டிய ஒன்று.

கீரைகள்

கீரைகள்

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க துவங்கும் காலத்திலேயே கீரை சாதம் போன்ற வகைகளை அறிமுகப்படுத்தி கீரைகளை உட்கொள்ள குழந்தைகளை அப்பொழுதில் இருந்தே பழக்க வேண்டும். இது குழந்தைகள் நன்கு ஆரோக்கியமுடன் அதிக சத்துக்கள் பெற்று வளர உதவும்.

அனைத்து வகை கீரை வகைகளையும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த முயலுங்கள்; குறிப்பாக முருங்கைக்கீரையை குழந்தையை எப்படியாவது வாரம் 2 அல்லது 3 முறை உண்ண வைத்து விடுங்கள்.

ப்ரூனே பழம்!

ப்ரூனே பழம்!

ப்ரூனே பழ வகை அதிக இரும்புச்சத்து கொண்டதாக அறியப்படுகிறது; அதனை குழந்தைகளுக்கு அளித்து அவர்கள் இரும்புச்சத்தினை பெற உதவ வேண்டும். குழந்தைகளுக்கு இந்த இரும்புச்சத்து நிறைந்த பழத்தை அப்படியே அலல்து பழச்சாறாக தயாரித்து அவ்வப்போது அளித்து வருதல் மிகவும் நல்லது.

பூசணி மற்றும் காளான்!

பூசணி மற்றும் காளான்!

குழந்தைகளுக்கு பூசணி விதைகளை உணவில் சேர்க்க முயல வேண்டும்; ஏனெனில் அவை அதிகம் இரும்புச்சத்து கொண்டவை. அதே போல் குழந்தைகளின் உணவில் அதிக இரும்புச்சத்து கொண்ட காளான் வகையை அறிமுகப்படுத்துதல் வேண்டும். இந்த இரண்டும் குழந்தைகளை நன்கு பலசாலியாக வளர உதவும்.

உலர் திராட்சை மற்றும் உருளை!

உலர் திராட்சை மற்றும் உருளை!

குழந்தைகளுக்கு தினசரி கால் கப் உலர் திராட்சையை உண்ண அளித்து வருதல், அவர்தம் உடலின் இரும்புச்சத்து அளவினை அதிகரிக்க உதவும் என்று கண்டறியப்பட்டு உள்ளது. மேலும் உருளைக்கிழங்கினை தோல் நீக்காமல் குழந்தைகளுக்கு உண்ண அளித்து வந்தால், அது அவர்தம் உடலில் இரும்புச்சத்து கூடுவதற்கு உதவும்.

சிட்ரஸ் மற்றும் பருப்புகள்!

சிட்ரஸ் மற்றும் பருப்புகள்!

குழந்தைகளின் உடலில் இரும்புச்சத்து அதிகமாக அவர்களுக்கு சிட்ரஸ் வகை பழங்கள் மற்றும் காய்களை அளித்தல் நல்லது. மேலும் குழந்தைகள் இரும்புச்சத்து நிறைந்த பயறுகள், முழுதானிய வகைகள், பருப்புகள் போன்றவற்றை உட்கொள்ளுமாறு வழிவகை செய்தல் வேண்டும்.

குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவினை அளிப்பதாக இருந்தாலும், ஒருமுறை மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து, நீங்கள் அளிக்கப்போகும் உணவு குழந்தையின் உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா எனக்கேட்டு அறிந்து அளிப்பது நன்று.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Iron Rich Foods For Kids Brain Development

Iron Rich Foods For Kids Brain Development
Story first published: Thursday, August 30, 2018, 13:02 [IST]
Desktop Bottom Promotion