தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

குழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள், அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை; இப்பதிப்பில் குழந்தைகள் தவறு செய்தால் அதை எப்படி திருத்துவது என்பது பற்றி பார்க்கலாம்.

குழந்தைகள் களிமண்ணை போன்றவர்கள், அவர்களுக்கு சரியான உருவம் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தைகளை பெற்று போடுவதுடன் மட்டும் பெற்றோரின் கடமை முடிந்து விடுவது இல்லை; பெற்ற குழந்தைகளை சீரும் சிறப்புமாக நல்ல வழியில் வாழ கற்று தந்து வழிநடத்துவதும் பெற்றோரின் முக்கிய கடமை ஆகும்.

How To Correct Bad Habits In Your Children

இந்த பதிப்பில் குழந்தைகள் தவறு செய்தால் அதை எப்படி திருத்துவது மற்றும் தவறு செய்யும் குழந்தைகளை நல்வழிப்படுத்த பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தவறுவதும் இயல்பே!

தவறுவதும் இயல்பே!

குழந்தைகள் பிறந்த பின் அவர்கள் நல்லதையே செய்ய வேண்டும், அறிவாளியாக தான் இருக்க வேண்டும், அவர்கள் தவறே செய்து விட கூடாது, அவர்களை அனைவரும் பாராட்டும் வண்ணம் குழந்தைகள் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பினை பல பெற்றோர்கள் குழந்தைகள் பிறக்கும் பொழுது கொண்டு உள்ளனர். இது மிக மிக தவறு; குழந்தைகள் ஞானிகளோ, அரிஜன்கர்களோ அல்ல.

மனித பிறப்பு!

மனித பிறப்பு!

அவர்கள் மனித பிறப்பு; தவறு புரிவதும், அதனை சரி செய்து வாழ்க்கையில் முன்னேறுவதும் தான் மனிதனின் அடையாளம். தவறே செய்யாவிட்டால், வாழ்க்கையில் கற்று கொள்ளவே முடியாமல் போய்விடும். குழந்தைகள் தவறு செய்தால், தீய வழியில் சென்றால் அவர்கள் தவறு என்று அர்த்தம் இல்லை; குழந்தைகளை பெற்றவர்களும், அவர்களை வளர்த்த விதமும், அவர்கள் வளர்ந்த சூழலும், உறவுகளும் நண்பர்களும் தான் காரணம்.

ஆகையால் குழந்தைகள் தவறு செய்யும் பொழுது அவர்களை எப்படி நல்வழிப்படுத்துவது என்பது பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

கண்டு கொள்ளாமல் கண்டிக்க!

கண்டு கொள்ளாமல் கண்டிக்க!

குழந்தைகள் தவறு செய்தால், அதை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அந்த சமயத்தில் ஒன்றும் கூற வேண்டாம். ஏனெனில் உறவுகளின் முன்னோ, தனிமையில் தவறு இழைப்பதை பார்த்த பின்னோ, நண்பர்களின் முன்னோ குழந்தைகள் தவறு இழைத்ததை தம்பட்டம் அடித்து அவர்களை அவமானப்படுத்த வேண்டாம்.

நம்பிக்கையை உணர்த்துங்கள்.!

நம்பிக்கையை உணர்த்துங்கள்.!

குழந்தைகளுடன் தனியாக நேரம் செலவழிக்கையில் அல்லது குழந்தைகளுக்கு பிடித்த இடத்திற்கு அழைத்து சென்று தனிமையில் அவர்கள் செய்த தவறை எடுத்துக்கூறி, அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படலாம் என்று கூறி, அந்த தவறு சரியற்ற செயல் என்று அவர்களுக்கு அன்பாக எடுத்து சொல்லி புரிய வையுங்கள்.

அவர்கள் திரும்ப அதே தவறை இழைக்காதவாறு கண்டிப்பினை அன்பான முறையில் அளித்து, பெற்றோரின் பெயரை கெடுக்க கூடாது, அவர்களின் நம்பிக்கையை உடைக்க கூடாது என்ற எண்ணத்தை குழந்தைகளின் மனதில் வரவழையுங்கள்!

பரிசும் பாராட்டும்!

பரிசும் பாராட்டும்!

குழந்தைகள் நல்ல விஷயங்களை செய்யும் பொழுது, மற்றவர்களுக்கு உதவும் பொழுது, தனது திறமையை வெளிப்படுத்தும் பொழுது என குழந்தைகள் செய்யும் நல்ல விஷயங்களுக்கு பாராட்டி, பரிசுகளை அளியுங்கள். குழந்தைகளிடம் அவர்கள் நல்லது செய்தால் நல்லதே திரும்ப கிடைக்கும் என்று சொல்லி வளருங்கள்.

சொல்லி காட்ட வேண்டாம்..

சொல்லி காட்ட வேண்டாம்..

குழந்தைகள் வளரும் பொழுது என்றோ செய்த தவறை, அந்த சமயத்தில் கூறி திருத்தாமல், திடீரென ஓர் நாள் "அன்று நீ அந்த தவறை செய்தவன் அல்லவா" என்று சொல்லி காட்டி குழந்தையின் மனதில் காயத்தை உண்டு பண்ணாதீர்கள்; அது உங்கள் மீது வெறுப்பாய் மாறி, குழந்தையை மேலும் தவறான பாதைக்கு அல்லது பெற்றோரான உங்களிடம் இருந்து அதிக தூரம் பிரித்து சென்று விடும்.

கற்றுக் கொடுங்கள்!

கற்றுக் கொடுங்கள்!

குழந்தைகளுக்கு நலல்து எது? கேட்டது எது? என்று தெளிவாக கற்று கொடுங்கள்; குழந்தைகளுக்கான இந்த கற்பித்தலை கதைகள், படங்கள், பாடல்கள் மற்றும் தினசரி நிகழ்வுகள் மூலம் கற்பிக்க முயலுங்கள். இந்த அனைத்து விதமான கற்பித்தலுமே குழந்தையின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லது.

ஒரு சமயத்தில் ஒன்று தான்!

ஒரு சமயத்தில் ஒன்று தான்!

குழந்தைகளுக்கு நான் நல்லதை கற்று தர போகிறேன் என்று எல்லா விஷயங்களையும் ஒரே நாளில் ஒட்டு மொத்தமாக கூறி அவர்களை போர் அடித்து விடாதீர்கள். குழந்தைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு நேரத்தில் ஒன்று என ஒவ்வொன்றாக கற்பியுங்கள்!

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை மட்டும் கற்பித்து கொண்டு இருக்காமல், தீமை செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் என்றும் கற்பியுங்கள்.

ஆணிவேர் யார்?

ஆணிவேர் யார்?

குழந்தை செய்யும் தவறுகளை நேரடியாக அவர்களிடம் கேட்டு கண்டிக்கும் முன், அதனை பழக்கி தந்த ஆணி வேர் யார், எந்த சூழல் என்பதை அறிந்து கொண்டு, அவற்றை முதலில் நீக்க முயலுங்கள். பின் குழந்தையிடம் பொறுமையாக அவர்கள் செய்த தவறை எடுத்துக்கூறி, அதனை மீண்டும் செய்யாது இருக்கும் வகையில், அந்த தவறை நினைத்து அவர்கள் மனம் வருந்தும் வகையில் சொல்லி புரிய வையுங்கள்!

விதி முறைகள் - நீதி, நேர்மை!

விதி முறைகள் - நீதி, நேர்மை!

குழந்தைகளுக்கு வாழ்வில் நீதி, நேர்மை, அன்பு, பாசம் போன்ற விஷயங்களை எப்படி கடைபிடிக்க வேண்டும்; அவற்றால் என்ன பலன் கிடைக்கும் என்பது பற்றியும், வாழ்வில் கொள்கைகளுடன் வாழ்வதால் என்ன நன்மைகள் ஏற்படும் என்பது பற்றியும் எடுத்துரைக்க வேண்டும். முக்கிய பாடமான களவும் கற்று மற என்னும் கூற்றை எடுத்து சொல்லி, தவறு இழைத்தல் இயல்பே; ஆனால் அதுவே என்றென்றும் தொடர்ந்து விட கூடாது என்று கூறுங்கள்.

அத்யாவசிய கொள்கை!

அத்யாவசிய கொள்கை!

மேலும் குழந்தைகள் பள்ளி, கல்லூரி, சமுதாயம் என அனைத்து இடங்களிலும் விதிக்கப்பட்டு உள்ள விதிகளை மதித்து, அவற்றை மீறாமல் தவறு இழைக்காமல் அனைவருடனும் இணைந்து வாழ வேண்டும் என்ற அத்யாவசிய அடிப்படை கருத்தை கற்று கொடுங்கள்! இது தெரிந்தால் போதும் குழந்தைகள் வாழ்வில் என்றும் தவறு இழைக்க துணிய மாட்டார்கள்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Saturday, September 29, 2018, 12:05 [IST]
Desktop Bottom Promotion