Latest Updates
-
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 4 ராசிக்காரங்கள பணமும், அதிர்ஷ்டமும் தேடிவரப்போகுதாம்... உங்க ராசி என்ன? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்...
மூச்சு விடாமல் வாழும், கண்ணீர் சிந்தாமல் அழும் பச்சிளம் குழந்தைகள்! வியப்பூட்டும் பல செய்திகள்!
குழந்தைகள் தாயின் கருவறையில் உருவாகி, வளர்ந்து வெளிப்படுவதே பெரிய அதிசயமாய், வியப்பாய் இருக்கும் நிலையில், பிறந்த பின் குழந்தைகள் புரியும் செயல்கள் குறித்து நீங்கள் அறிந்தால் ஆச்சரியத்தின் ஆழத்திற்கே
குழந்தைகள் தாயின் கருவறையில் உருவாகி, வளர்ந்து வெளிப்படுவதே பெரிய அதிசயமாய், வியப்பாய் இருக்கும் நிலையில், பிறந்த பின் குழந்தைகள் புரியும் செயல்கள் குறித்து நீங்கள் அறிந்தால் ஆச்சரியத்தின் ஆழத்திற்கே சென்று விடுவீர்கள்! குழந்தைகள் பிறந்த நொடி முதல் ஒரு வயது கால கட்டத்தை எட்டும் வரை குழந்தைகளின் உடலில், அவர்கள் செய்யும் செயல்களில், அவர்தம் வளர்ச்சியில் பல வியப்பூட்டும் விஷயங்கள் நிறைந்துள்ளன.

உங்கள் புருவங்களை உயர்த்திட செய்யும் அளவிற்கு குழந்தைகளில் நிகழும், நமக்கு தெரியாமல் நடக்கும், நாம் அறியாத, நாம் கவனியாத விஷயங்களை பற்றி இந்த பதிப்பில் படித்தறியுங்கள்!

மணமில்லாத மலம்!
கருப்பான தார் போன்ற திரவம் அன்னையின் வயிற்றில், அவர் உண்ட உணவுகளால், சளியால் ஆன இதை குழந்தைகள் தாயின் வயிற்றில் இருக்கையில், விழுங்கியிருப்பர். ஆனால் அதில் பாக்டீரியா போன்ற கிருமிகள் எதுவும் இருக்காது; அதனால், குழந்தையின் உடலில் இருந்து வெளியேறும் முதல் மலம் அதாவது ஆய் மணமில்லாத மலமாக வெளிப்படும்.
பின் குழந்தைக்கு முதன் முதலாக தாய்ப்பால் கொடுத்த பின், அது பாக்டீரியா போன்றவற்றை தோற்றுவித்து, உடற்செயலிய மாற்றத்தை உருவாக்கும்; முதல் உணவான தாய்ப்பாலுக்கு பிற்காடு குழந்தையின் உடலில் இருந்து வெளிப்படும் மலம் மஞ்சள், பச்சை, பிரௌன் நிறத்தில், மலத்திற்கான மணத்துடன் வெளிப்படும். இது குழந்தையின் உடலில் நடக்கும் விசித்திர மாற்றம் ஆகும்.

மூச்சு விட மாட்டோம்!
பிறந்த குழந்தைகள் உறங்கும் பொழுது, ஐந்து முதல் பத்து நொடிகளுக்கு மூச்சினை வெளியே விடாமல், நிறுத்தி வைப்பர்; குழந்தையின் இந்த நிலையை காணும்பொழுது பெற்றோர்களுக்கு இதயமே நின்று விடுவது போல் ஆகிவிடும். குழந்தைகளின் மூச்சு எண்ணிக்கையில் சில மாறுபாடுகள் இருக்கலாம்.
குழந்தைகள் அதிகமாக சிரிக்கும் பொழுது, அழும்பொழுது ஒரு நிமிடத்திற்கு 60 முறைக்கும் அதிகமாக மூச்சு விடுகின்றனர். இவையெல்லாம் சாதாரண மாற்றங்களே! ஆனால், குழந்தைகள் மூச்சினை அதிக நேரத்திற்கு நிறுத்தி வைத்தாலோ, குழந்தையின் உடல் நீலமாக மாறினாலோ உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

தொண்டையில் சுவை மொட்டுக்களா?
குழந்தைகள் பெரியவர்களுக்கு நிகரான சுவை மொட்டுக்களை கொண்டிருந்தாலும், பெரியவர்களுக்கு கூட இல்லாத வேறுசில இடங்களிலும் சுவை மொட்டுக்களை கொண்டுள்ளனர், குழந்தைகள். பச்சிளம் சிசுவின் தொண்டையின் பின்பகுதியில், டான்சில்களில் சுவை மொட்டுக்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளால், இனிப்பு, கசப்பு, புளிப்பு சுவையை மட்டுமே உணர முடியும்; உவர்ப்பு சுவையை முதல் 5 மாதகாலம், அவர்களால் உணர இயலாது. தாய்ப்பாலின் சுவை சற்று இனிப்பாக இருப்பதால், குழந்தைகள் அதை அறிவர்; கசப்பு மற்றும் புளிப்பு சுவையை 6 மாதத்திற்கு பிறகு குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது நல்லது.

நாங்க கண்ணீரே வராம அழுவோம்ல!
குழந்தைகள் பிறந்த 2-3 வாரங்களில், கண்ணீரை வெளிக்காட்டாமல், கண்ணீர் வெளியே வராத வகையில் அழுவார்கள். ஒரு மாத வயது ஆன் பின் தான் குழந்தைகள் அழும்பொழுது அவர்களின் கண்கள் கண்ணீரை வெளிப்படுத்தும். பிற்பகல் மற்றும் சாயங்கால முன் வேளைகளில் குழந்தைகள் பொதுவாக கண்ணீர் வெளிப்படமால், காரணம் ஏதுமின்றியே அழுவார்கள்.
குழந்தைகள் பிறந்து 46 வாரங்கள் முடிந்த பின், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் காரணமாக அழுகையின் உச்ச கட்டத்திற்கே செல்வார்கள்; இந்த உச்சகட்ட அழுகை 3 வாரங்கள் வரை நீடிக்கும். பின் வீட்டில் அழுகை புயல் ஓய்ந்து அமைதி நிலவும்.

மார்பகங்கள்
பிறந்த குழந்தைகள் ஆணாயினும், பெண்ணாயினும் அவர்களின் உடல் சிறிய மார்பகங்கள் கொண்டதாய் திகழும்; மேலும் அந்த மார்பகங்களில் இருந்து பால் வெளிப்படவும் செய்யலாம். அந்த மார்பகங்களில் சிறு சிறு கட்டிகளும் கண்ணிற்கு தென்படலாம்; ஆனால் அவற்றை அமுக்கி பாலை வெளியேற்றுவது, கட்டியை உடைப்பது போன்ற செயல்களை புரியாதீர்கள்.
இந்த மார்பகங்கள் மற்றும் மாற்றங்கள் அனைத்தும் குழந்தைகள் அன்னையின் வயிற்றில் இருக்கும் பொழுது, ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோனை உட்கொண்டதால் ஏற்படுகின்றன. குழந்தை பிறந்த ஓரிரு வாரங்களில் இந்த மாற்றங்கள் மறைந்து சாதாரணமாகிவிடும். புதிதாய் பிறந்த பெண் குழந்தைகளின் பிறப்புறுப்புகளில் இருந்து மாதவிடாய் வெளிப்படுவது அல்லது மற்ற திரவங்கள் வெளிப்படுவது போன்ற நிகழ்வுகளும் நடக்கலாம்; இது சில நாட்களுக்கு நீடித்து, பின் மறைந்துவிடும்.

வலப்புறம் பார்க்க பிடிக்கும்
குழந்தைகள் பிறந்தது முதல் சில மாதங்கள் வரை அவர்கள் உறங்கும் பொழுது தலையை வலப்புறமாக திருப்பி, வலது பக்கம் பார்த்தவாறே தலையை வைத்திருப்பர். 15 சதவிகித குழந்தைகளில் இந்த மாற்றம் காணப்படுகிறது; இது குழந்தைகளின் ஜீன்களில், மரபணுவில் உள்ள மாற்றங்களால் நிகழ்கிறது. இதன் காரணமாகவே, நம்மில் பெரும்பாலானோர் வலக்கை பழக்கம் உள்ளவர்களாக இருக்கிறோம்; வெகுசிலரே இடது கை பழக்கம் கொண்டுள்ளனர். நம்முடைய பழக்க வழக்கங்கள் நாம் பிறக்கும் பொழுதே நிச்சயிக்கப்பட்டு விடுகின்றன என்ற உண்மையை இந்த செய்தி வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.

மூளை அதிகம்
பிறந்த குழந்தைகளின் உடலில், அதிக மூளை செல்கள் இருப்பதால், அவர்களின் மூளையின் அளவு, முதல் வருடத்தை விட அடுத்தடுத்த வருடங்களில் வளர்ந்து கொண்டே,எ தாவது பெரிதாகிக் கொண்டே இருக்கும். இந்த மூளை செல்கள் எலக்ட்ரிக்கல் தகவல்களை நரம்புகள் வாயிலாக கடத்தும்; இந்த நாட்களில் அதாவது குழந்தை பருவத்தில் குழந்தைகளின் கற்பனா சக்தி அதீதமாக இருக்கும். வளர வளர இந்த நியூரான் செல்கள் இறந்தால் அவை புதுப்பிக்கப்படுவதில்லை; எனவே, குழந்தைகள் பெரியவர்கள் ஆகியபின் அவர்களின் கற்பனை சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைகிறது.



Click it and Unblock the Notifications











