பாட்டில் பால் கொடுப்பதால் உண்டாகும் தீமைகள் - மாற்று வழிகளும், தீர்வுகளும்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் தாய்பால் கொடுப்பது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்குவகிக்கிறது.

ஜப்பான் குழந்தைகள் உலகின் ஆரோக்கியமானவர்களாக திகழ்வதன் இரகசியங்கள் இதுதானாம்!

நீங்கள் ஏதேனும் மருத்துவ காரணங்களினால் குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாத நிலை நேர்ந்தால், பாட்டில் பால் கொடுக்கும் வழியை தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். அதற்கு முன் பாட்டிலில் பால் கொடுப்பதால் உண்டாகும் விளைவுகளை பற்றி அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

நீங்கள் செய்யும் இந்த காரியங்கள் உங்கள் குழந்தைகளை வெறுப்படைய செய்யும் என தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. இரப்பர்

1. இரப்பர்

குழந்தைக்கு பால் மற்றும் தண்ணீர் கொடுப்பதற்கு ஃபீடிங் பாட்டிலை உபயோகப்படுத்துகின்றனர். இதில் உள்ள இரப்பரில் கண்ணுக்கு தெரியாத அழுக்குகள் இருக்கும். இதில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும் இவை குழந்தையின் உடல்நலனுக்கு ஆபத்தாக அமையும்.

2.வாயுத்தொல்லை

2.வாயுத்தொல்லை

பாட்டிலில் பால் குடிக்கும் போது பாலுடன் சேர்ந்து காற்றும் உள்ளே செல்லும். இதனால் குழந்தைக்கு வாயுத்தொல்லை வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

3.சத்துக்கள்

3.சத்துக்கள்

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு இயற்கையாகவே உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன. மேலும் தாய்பால் குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. ஆனால் பாட்டில் பால் அவ்வாறு இல்லை. இதனால் பாட்டில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக உடல் எடை கூட வாய்ப்புள்ளது.

4.நோய் எதிர்ப்பு சக்தி

4.நோய் எதிர்ப்பு சக்தி

தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தாராளமாக கிடைக்கிறது. ஆனால் பாட்டில் பால் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதில்லை. எனவே பாட்டில் பால் அருந்தும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, சிறுநீர் பாதை, காது சம்பந்தப்பட்ட தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

5. சங்கு பால்

5. சங்கு பால்

உங்களால் தாய்ப்பால் தர முடியவில்லை என்றால் சங்கில் பால் தரலாம். சங்கில் பால் குடிப்பது சுகாதாரமானதும் கூட. சங்கில் பால் குடிக்கும் குழந்தைகள் எளிதில் டம்ளரில் பால் குடிக்க கற்றுக்கொள்ளும். பல், தாடை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது. பேச்சு சீக்கிரம் வரும்.

6.பாட்டில் பால் தீமைகள்

6.பாட்டில் பால் தீமைகள்

பாட்டில் பால் சுகாதாரமானது அல்ல. பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளின் வார்த்தை உச்சரிப்பு சரியாக இருக்காது. பல் வரிசை மாறும் வாய்ப்புகள் அதிகம். மேலும் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அடிக்கடி வரும்.

7. பொது இடங்களில் பால் தர சிரமமா?

7. பொது இடங்களில் பால் தர சிரமமா?

இளம் தாய்மார்கள் பலர் பொது இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், கடற்கரை, பூங்காக்கள், கோவில்கள் ஆகிய இடங்களில் குழந்தைக்கு பால் தர தயங்குகின்றனர். இதனால் குழந்தைகளை பாட்டில் பழக்கத்திற்கு மாற்றுகிறார்கள். ஆனால் பொது இடங்களில் பால் தர ஏற்ற வகையில் உடைகள் வந்துவிட்டன.

8. தாயின் அரவணைப்பு

8. தாயின் அரவணைப்பு

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தாயின் சூடு, அரவணைப்பு ஆகியவை கிடைக்கும். தாயின் அரவணைப்பு மற்றும் பரிசம் குழந்தைக்கு கிடைப்பதால் குழந்தைக்கு பல்வேறு நண்மைகள் உண்டாகும். குறைந்தது பாட்டிலில் பால் தருவதை தவிர்த்து, டம்ளர்களிலாவது பால் தரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Negative Health Impacts of Bottle Feeding

Here are the some negative impacts of bottle feeding
Story first published: Wednesday, June 14, 2017, 12:40 [IST]