குட்டிப்பாப்பா அழுவது ரொம்ப நல்லதாம்!! ஏன்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பெரும்பாலான நேரங்களில் குழந்தைகள் எதற்கு அழுகிறார்கள் என்றே நம்மால் அவதானிக்க முடிவதில்லை. பிறந்த குழந்தைகளின் அழுகை பார்க்கும் நமக்கு கஷ்டமாக இருந்தாலும் அது குழந்தையின் நலனுக்கு மிகவும் அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆச்சரியமான தகவலை இன்னும் விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழுகை அவசியம் :

அழுகை அவசியம் :

பிறக்கும் குழந்தையின் அழுகுரலுக்காகத் தான் எல்லாருமே காத்திருப்போம். இது குழந்தை பிறந்துவிட்டது என்பதற்கான சமிக்ஞை மட்டுமல்ல, குழந்தை சுயமாக சுவாசிக்கவும் நுரையீரல் வேலை செய்திடவும் ஆரம்பிக்கிறது. பிறந்தவுடனான முதல் அழுகை மட்டுமே நுரையீரல் செயல்பட வைக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

பேசும் திறன் :

பேசும் திறன் :

குழந்தைகள் அழவில்லை என்றால் தங்களுடைய தேவைகளை பிறருக்கு உணர்த்த முடியாது. பல்வேறு காரணங்களால் அழுதாலும், அந்த காரணங்களை துல்லியமாக நம்மால் அறியமுடியாவிட்டாலும், குழந்தை அழுதால் எதோ இடைஞ்சல் இருக்கிறது என்பதறிந்து பெற்றோர் சமாதனம் படுத்த முடிகிறது.

பழகப்பழக குழந்தையின் அழுகைக்கு தாய்க்கு அர்த்தம் புரிந்திடும். அதோடு தனக்கான தேவையை பிறரிடம் சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் , பேசும் திறனும் மேம்படும்.

மனரீதியாக :

மனரீதியாக :

குழந்தையை தட்டிக் கொடுக்கும் போது அல்லது மார்போடு அணைத்து அரவணைக்கும் போது, குழந்தை தனியாக இல்லை என்கிற உணர்வைக் கொடுக்கிறோம். வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகள் வீம்பாக அழுதால் அப்படியே விட்டுவிடுகிறோம்.

அப்போதான் திருந்துவான், என்று சிலர் சொல்வார்கள். இது தவறான போக்கு, இது அவர்களின் மனதை வெகுவாக பாதிக்கும். குழந்தை பருவத்திலிருந்தே தனிமையை உணர ஆரம்பித்து விடுவர்.

குழந்தை, ஒவ்வொரு முறையும் அழுது தன் தேவைகளை நிராகரிக்கப்படும் போது, வளரும் பருவங்களில் மனரீதியாக பெரும் சவால்களை சந்திக்க நேரிடும்.

வலுவாகும் தசைகள் :

வலுவாகும் தசைகள் :

குழந்தை அழுகும் போது கவனித்தீர்களானால் குழந்தையின் முகத்தசையிலிருந்து, பல்வேறு தசைகள் விரிந்து ஸ்ட்ர்ச் ஆகும். சிறிய பயிற்சி போல இது என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் நீண்ட நேரம் இதனை தொடரச் செய்யக்கூடாது.

எமோஷனல் அட்டாச்மெண்ட் :

எமோஷனல் அட்டாச்மெண்ட் :

எமோஷனல் அட்டாச்மெண்ட் பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைகளுக்கும் மிகவும் அவசியம். அழும் போது தான், தன்னைச் சுற்றி தனக்கு இவர்கள் இருக்கிறார்கள் என்ற அட்டாச்மெண்ட் வரும். அழும் போது குழந்தையை மிரட்டவோ திட்டவோ செய்யாதீர்கள்.

பிறந்த குழந்தைகளாக இருந்தால் உங்களின் பிசிக்கல் டச் மூலமாக உங்களின் இருப்பை உணர்த்துங்கள். சற்று வளர்ந்த குழந்தைகளானால் அமைதியாகவும் அன்பாகவும் பேசி சமாதனப்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Crying is good for Infants

Crying is a healthy sign of a baby
Story first published: Tuesday, July 25, 2017, 10:26 [IST]