தாய்ப்பால் கொடுப்பதால் பெண்களுக்கு இந்த நோய்கள் எல்லாம் எட்டி கூட பாக்காதாம்!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

இப்பொழுது உள்ள புதிய தகவல் என்னவென்றால் குழந்தைக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு எதிர் காலத்தில் எந்த வித இதய நோயும் பக்க வாதமும் ஏற்பட வாய்ப்பில்லை என்பது தான்.

இந்த தகவல் அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் நாளிதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளது. பாலூட்டும் தாய்மார்களுக்கு 10% அளவில் இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் வருவது தடுக்கப்படுகிறது என்று தகவலை கூறியுள்ளனர்.

Does Breastfeeding Cut Heart Attack Risk?

குழந்தைக்கு பாலூட்டும் செயல் தாய்மார்களுக்கு அவர்கள் கருவுற்ற காலத்தில் இருந்த உடல் மெட்டா பாலிசம் விரைவாக பழைய நிலைக்கு வருவதற்கு உதவுகிறது என்று ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழ ஆராய்ச்சி மாணவர் சேன் பீட்டர்ஸ் விவரிக்கிறார்.

கருவுற்ற காலத்தில் தாய்மார்களின் உடல் மெட்டபாலிசம் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான கொழுப்பை சேமித்து வைக்கிறது. அதுவே பாலூட்டும் போது அந்த கொழுப்புகளை எல்லாம் கரைத்து விடுகிறது என்று பீட்டர்ஸ் கூறுகிறார்.

Does Breastfeeding Cut Heart Attack Risk?

இந்த தகவல் சீன கடூரி பயோபேங்க் ஆய்வில் பங்கு பெற்ற 289,573 சைனீஸ் பெண்களை ஆராய்ச்சி செய்து இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் வாழ்க்கை காரணிகள் போன்றவற்றை பற்றிய விளக்கத்தை கூறியுள்ளனர்.

இதற்கு முன் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் பாலூட்டும் செயல் தாய்மார்களுக்கு குறுகிய கால பயனான எடை குறைதல், கொழுப்பை குறைத்தல், இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு சமநிலைப்படுத்துதல் போன்றவற்றை தருகிறது என்றே கூறியுள்ளனர்.

Does Breastfeeding Cut Heart Attack Risk?

ஆனால் தற்போது அதன் தொடர்ச்சியாக செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் பாலூட்டும் தாய்மார்களுக்கு இதய நோய்கள் மற்றும் பக்க வாதம் வராமல் தடுக்கப்படுகிறது என்று தெரிவிக்கின்றனர்.

இதை பார்த்து உங்களால் முடிந்த அளவு பாலூட்டும் செயலில் குழந்தைக்கும் தாய்க்கும் கிடைக்கும் நன்மைகளை பற்றிய தகவலை பரப்புங்கள் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழக விரிவுரையாளர் 'ஜென்மிங்க் கென் ' அவர்கள் கூறியுள்ளார்.

English summary

Does Breastfeeding Cut Heart Attack Risk?

Does Breastfeeding Cut Heart Attack Risk?
Story first published: Monday, July 10, 2017, 21:00 [IST]