வாடகைத் தாயைப் பற்றி நீங்கள் அறியாத விஷயங்கள்!!

Posted By: Arunkumar P.M
Subscribe to Boldsky

'சரோகேட்" என்பது ஒருவருக்கு பதில் மற்றொருவர் ஒரு செயலை செய்பவர் என்ற பொருளாகும். வாடகைத்தாய் என்பவர் மற்ற ஒருவருக்காக தன் கர்ப்பப்பையில் குழந்தையை சுமப்பவர்.

வாடகைத்தாய் வழிமுறை இரண்டு வகையைச் சாரும். ஒன்று பாரம்பரிய வாடகைத்தாய் முறை மற்றொன்று கருசுமக்கும் வாடகைத்தாய் முறையாகும்.

இதனைப் பற்றி முழு விவரங்கள் தெரிய யாரை எபப்டி அணுகுவது என்ற குழப்பங்கள் உண்டாகிறதா? உங்களுக்கு உதவ இங்கே நாங்கள் சொலியிருக்கிறோம். தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பரிய வாடகைத்தாய் முறை:

பாரம்பரிய வாடகைத்தாய் முறை:

இந்த முறையில் வாடகைத்தாயாக வரும் பெண் தன்னுடைய கருமுட்டையை பயன்படுத்தி கரு உருவாக வழி செய்கின்றார் .

அதாவது தம்பதியரில் அந்த கணவனின் உயிரணுக்களை செயற்கை முறையில் அந்த வாடகைத் தாயின் கருமுட்டையுடன் இணையச்செய்து கருத்தரித்தல் ஏற்பட வழி செய்யப்படுகிறது .

அந்த வாடகைத்தாய் அந்த சிசு வளர வழி செய்து பின்னர் அதனை பெற்றெடுக்கிக்கிறாள். பின்னர் அந்த குழந்தை அந்த தம்பதியரிடம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த முறையில் அந்த வாடகைத்தாய் அந்த குழந்தைக்கு உயிரியல் முறை தாயாக கருதப்படுகிறார்.

கருசுமக்கும் வாடகைத்தாய் முறை:

கருசுமக்கும் வாடகைத்தாய் முறை:

இந்த முறை இப்பொழுது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதனை ‘ ஐ. வி. எப்" என்று அழைக்கின்றனர். தம்பதியரில் கணவரின் உயிரணுக்களும் மனைவியின் கருமுட்டையும் செயற்கையாக இணைக்கப்பட்டு அந்த கரு வாடகைத்தாயின் கருப்பையில் வைக்கப்படுகிறது.

வாடகைத்தாயை தேர்வு செய்வதற்கு சில வழிமுறைகள் உண்டு. அந்த பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

அந்த பெண் கடந்த காலங்களில் கருச்சிதைவு போன்ற மகப்பேறு பிரச்சினைகள் இல்லாத உடல்நிலையை பெற்றிருக்க வேண்டும். சிறந்த வாடகைத்தாயை தேர்வு செய்வது எளிதான காரியம் அல்ல. இங்கு, ஆரோக்கியமான வாடகைத்தாய் தேர்வு முறைகளை காணலாம்.

பொருத்தமான வாடகைத்தாயை பெறுவது எப்படி?

பொருத்தமான வாடகைத்தாயை பெறுவது எப்படி?

நண்பர்கள்/ உறவினர்கள்:

வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற விரும்புவோர் தங்களுடைய உறவினர்களிடமும் நெருங்கிய நண்பர்களிடமும் அதனை தெரிவிக்கலாம். இதன் மூலம் பணம் பறிக்கும் சில மனிதர்களிடம் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் தப்பிக்கலாம்.

மருத்துவனை:

மருத்துவனை:

உங்களுக்கு தெரிந்த மருத்துவமனையின் மருத்துவர்களை இது சம்பந்தமாக நாடலாம். ‘வாடகைத்தாய்" முறையில் செயல்பட விரும்புபவர்களுடைய பட்டியல் அவர்களிடம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

 ஊடகங்கள்:

ஊடகங்கள்:

‘வாடகைத்தாய்" முறையில் குழந்தை பெற விரும்பும் உங்கள் நோக்கத்தை பொது தளத்தில் சொல்ல விரும்பினால்,

நீங்கள் ஊடகங்களை நாடலாம். தினசரி பத்திரிக்கைகள், தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் ஊடகங்களில் விளம்பரம் செய்யலாம்.

வலைப்பதிவு/ வலைத்தளம்:

வலைப்பதிவு/ வலைத்தளம்:

நீங்கள் உங்கள் பெயரில் வலைதளமோ வலைப்பதிவோ ஏற்படுத்தி உங்கள் குழங்தைபேறு பிரச்சினைகளை விவாதிக்கலாம். இதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் வாடகைத்தாய் உங்களை தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

ஆன்லைன் மூலம் தகவல் திரட்டுதல் :

ஆன்லைன் மூலம் தகவல் திரட்டுதல் :

இணையதளத்தின் சில குழுக்களில் வாடகைத்தாய் முறைகள் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் நிகழும்.உங்கள் யோசனைகளையோ கேள்விகளையோ அந்த தளத்தில் நீங்கள் பதிவு செய்யலாம்.இதன் மூலம் நீங்கள் எதிர்பார்க்கும் வாடகைத்தாய் பற்றிய தகவல்களை பெற முடியும்.

சமூக வலை தளங்கள்:

சமூக வலை தளங்கள்:

வாடகைத்தாய் முறையில் குழந்தை பெறும் உங்கள் விருப்பத்தை பல்வேறு சமூச வலைத்தளங்களில் பதிவு செய்யலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை இந்த பதிவு சென்றடையும்.

அவர்கள் அதனை மற்றவர்களுக்கு மறுபதிவு செய்து உதவுவார்கள். இதன் மூலம் யாராவது உங்களை தொடர்பு கொண்டால், நன்கு ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

உடன் வேலை செய்பவர்கள்:

உடன் வேலை செய்பவர்கள்:

உங்கள் அலுவலகத்தில் உங்களுடன் நெருக்கமாக பழகும் நல்ல நண்பர்களிடம் உங்கள் பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ளலாம். வாடகைத்தாய் மூலம் நீங்கள் குழந்தை பெற விரும்புவதை அவர்கள் புரிந்து கொள்வர். மேலும் அதற்கு தேவையான உதவிகளை அவர்கள் உங்களுக்கு செய்து கொடுப்பார்கள்.

தொழில் முறை வல்லுநர்கள்:

தொழில் முறை வல்லுநர்கள்:

வாடகைத்தாய் முறையில் பயன்பெற நினைக்கும் தம்பதியர்களுக்கு உதவி செய்ய பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. ஆனால் அந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையை உறுதி செய்த பின்னரே நீங்கள் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

மேலும் அந்த நிறுவனத்தின் மூலம் கடந்த காலங்களில் வாடகைத்தாய் முறையில் பயன்பெற்ற மற்ற தம்பதிகளை நீங்கள் சந்தித்து அவர்கள் கருத்துகளை கேட்டறியலாம். இதன் மூலம், உங்களுக்கு பொருத்தமான வாடகைத்தாயை நீங்கள் அடையாளம் காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

All You Wanted To Know About Surrogacy

All You Wanted To Know About Surrogacy
Story first published: Thursday, May 25, 2017, 20:30 [IST]