For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு டையபர் பயன்படுத்துவதால் ஏற்படும் அரிப்பை தவிர்க்கும் வழிகள்!!!

By Boopathi Lakshmanan
|

பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டையபர்களை பயன்படுத்துவதை எளிதாக கருதுகிறார்கள். வெளியே செல்லும் போதும், குழந்தைகளை இரவில் தூங்க வைக்கும் போதும் அதிகளவு தண்ணீரை உறிஞ்சும் டையபர்கள் வசதியாக உள்ளன. ஆனால், இந்த நற்பலன்களுடன், சில பக்க விளைவுகளையும் பெற்றோர்களும் குழந்தைகளும் எதிர்கொள்கிறார்கள். மிகவும் அதிகளவில் தண்ணீரை உறிஞ்சும் டையபர்களை தங்களுடைய குழந்தைகளிடம் பயன்படுத்தும் பெற்றோர்கள் எதிர்கொள்ளும் மிகவும் சாதாரணமான ஆனால் அதிகளவில் இருக்கும் பிரச்னையாக டையபர் அரிப்பு உள்ளது. அடிக்கடி டையபர்களை பயன்படுத்தும் குழந்தைகளிடம் இந்த வகை அரிப்புகளை காண முடியும்.

இயற்கையான நிவாரணிகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புகளை கவனிப்பது தான் சிறந்த சிகிச்சையாக இருக்கும். ஆரம்ப கட்டத்திலேயே இந்த அரிப்புகளை கவனித்தால் தான் பின்நாட்களில் தொற்றுகளும், எரிச்சலும் வருவதை தவிர்த்திட முடியும். சிறுநீர் மற்றும் மலம் ஆகியவை தொடர்ந்து டையபர்களில் படுவதால் சூழ்நிலை மிகவும் மோசமாகி விடும். இதன் மூலம் தோலில் மிகவும் குறைவான அளவே சத்து எண்ணெய்கள் உற்பத்தியாகும், அதன் காரணமாக தொற்றுகளிலிருந்து கிடைக்கும் பாதுகாப்பும் குறைவாகவே இருக்கும். உங்கள் குழந்தைக்கு டையபர் அரிப்பு வந்துள்ளதை நீங்கள் கண்டறிந்தவுடன் செய்ய வேண்டிய முதல் செயல்பாடு - அந்த இடத்தை ஈரப்பதம் இல்லாமல் காய வைப்பது தான்.

இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தி டையபர் அரிப்புகளை கவனிக்கும் போது தான் உங்கள் குழந்தையின் சருமம் அழகாக பராமரிக்கப்படும். செயற்கையான (Synthetic) பொருட்கள் சருமத்தை பாழ்படுத்தி விடும். டையபர் அரிப்புகளை தீர்க்கும் நிவாரண வழிகள் பற்றி இங்கே கொடுத்துள்ளோம். இந்த டிப்ஸ்களைப் பயன்படுத்தி எந்தவொரு அரிப்பு புண்களையும் சரி செய்யுங்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுக்கவும் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

பாதிக்கப்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை தடவவும். டையபர் அரிப்புகளை சமாளிக்கும் முதன்மையான இயற்கை வைத்தியங்களில் இதுவும் ஒன்றாகும். இயற்கையான கிருமிநாசினியான தேங்காய் எண்ணெயில் உள்ள மூலப்பொருட்கள் டையபர் அரிப்புகளையும் சரி செய்து விடுகின்றன. ஊங்கள் குழந்தையின் கீழ் பகுதியில் மெலிதாக தேங்காய் எண்ணெயை தடவி விடுங்கள் மற்றும் கை, கால் மடங்கும் இடங்களிலும் மற்றும் பிளவுகளிலும் விரலை வைத்து இதமாக மசாஜ் செய்து விடுங்கள்.

துணி டையபர் பயன்படுத்துங்கள்

துணி டையபர் பயன்படுத்துங்கள்

மிகவும் அதிகமாக உறிஞ்சும் தன்மை கொண்ட ஜெல் டையபர்களை பயன்படுத்தினால் அரிப்புகள் வரும். எனவே மென்மையான துணிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட டையபர்களை பயன்படுத்தி ஈரப்பதத்தை உறிஞ்சி எடுக்க முயற்சி செய்யுங்கள். இந்த துணி டையபர்கள் உங்கள் குழந்தைக்கு இதமூட்டி அழகிய சருமத்தை பாதுகாக்கின்றன.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

டையபர் அரிப்பு உள்ள இடங்களில் ஆலிவ் எண்ணெய் தடவுவதன் மூலம் அந்த இடங்களை சரி செய்ய முடியும். ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவதால் சருமத்தின் ஈரப்பதத்தையும் பாதுகாக்க முடியும். பாதிக்கப்பட்ட இடத்தை காய வைத்து விட்டு, அதன் பின்னர் ஆலிவ் எண்ணெயை தடவுங்கள். நீங்கள் தடவி விட்ட ஆலிவ் எண்ணெய் ஒரு அடுக்கு போல செயல்பட்டு, தண்ணீர்; சருமத்தை ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளும்.

சமையல் சோடா

சமையல் சோடா

டையபர் அரிப்புகளை தீர்க்கும் இயற்கையான பொருட்களில் ஒன்றாக சமையல் சோடா உள்ளது. உங்களுடைய குழந்தை குளிக்கும் பாத்-டப்-ல் 2 தேக்கரண்டி அளவிற்கு சமையல் சோடாவை கலக்குங்கள். இதற்காக வெந்நீரை பயன்படுத்துவது நல்லது. அந்த தண்ணீரில் உங்கள் குழந்தை சிறிது நேரம் இருக்கச் செய்யுங்கள். பின்னர் அந்த பகுதியை முழுமையாக நன்றாக காய வையுங்கள்.

சோள மாவு

சோள மாவு

டையபர் அரிப்புகளை தீர்க்கும் இயற்கையான பொருட்களில் ஒன்றாக சோள மாவும் உள்ளது. இது ஈரப்பத்தத்தை மிக நன்றாக உறிஞ்சவல்லது. சோள மாவை பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து ஒரு பசை போல செய்தும் நீங்கள் பயன்படுத்தலாம். இது ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்கக் கூடிய மிகச்சிறந்த பாதுகாப்பு அரணாக செயல்படும்.

தாய்ப்பால்

தாய்ப்பால்

உங்கள் குழந்தைக்கு டையபர் அரிப்பு புண்களை குணப்படுத்தக் கூடியவற்றில் மிகச்சிறந்த மருந்து தாய்ப்பால் என்பது உங்களுக்குத் தெரியுமா? எல்லா வகையான இயற்கை நிவாரணங்களும், தாய்ப்பாலுக்கு முன் என்று வரும் போது இரண்டாம் இடத்தையே பெறுகின்றன.

காற்றில் காய வை!

காற்றில் காய வை!

உங்கள் குழந்தை சில மணி நேரங்கள் டையபர் இல்லாமல் இருக்கச் செய்யுங்கள். இதன் மூலம் சருமத்திற்கு காற்றுடன் நேரடியான தொடர்பு ஏற்படும். டையபர் அரிப்புகளை சரி செய்ய முயற்சிக்க வேண்டிய மிகச்சிறந்த இயற்கையான வழிமுறைகளில் இதுவும் சிறந்த வழிமுறையாகும். உங்கள் குழந்தையை காய வைக்கப்பட்ட பாயில் படுக்க வையுங்கள் மற்றும் அவர்கள் வசதியாக இருக்குமாறு உணரச் செய்யுங்கள். அப்பொழுது தனர் அவர்களுடைய சருமத்ததைச் சுற்றிலும் காற்று நன்றாக சென்று வரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Remedies For Diaper Rashes

Natural remedies for diaper rash burn will be the best choice for the delicate skin of your baby. Synthetic products may irritate your baby’s skin. Here are some effective natural remedies for diaper rash burn. Try these tips to help soothe any soreness and keep nappy rash at bay.
Desktop Bottom Promotion