Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவை!
பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் வயிற்று வலி. இத்தகைய வலியால் பெரும்பாலான குழந்தைகள் அவஸ்தைப்படுவார்கள். குழந்தையால் பேச முடியாததால், அவர்கள் தனக்கு ஏற்படும் வயிற்று வலியை அழுகையின் மூலம் தான் வெளிப்படுத்துவார்கள். இருப்பினும் குழந்தையின் அழுகையை வைத்து உடனே கண்டுபிடிக்க முடியாது. ஆனாலும், தொடர்ந்து அழுகையை நிறுத்தாமல் பிறந்த குழந்தையானது அழுதால், அதற்கு கோலிக் பெயின் என்று சொல்லப்படும் வயிற்று வலியானது உள்ளது என்று அர்த்தம்.
இதுப்போன்று வேறு: 'பிறந்த குழந்தை மலம் கழிப்பது' பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள்!
மேலும் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியைப் பற்றி பெரும்பாலான பெற்றோர்களுக்கு தெரியாது. அதுமட்டுமல்லாமல் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள வயிற்று வலியை அழுகையை தவிர, வேறு எதைக் கொண்டும் கண்டறிய முடியாது. ஆனால் பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியைப் பற்றி பெற்றோர்கள் நன்கு தெரிந்திருந்தால், அவர்களின் பிரச்சனையைப் புரிந்து கொள்வதோடு, அவர்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை தடுக்க முடியும்.
பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த சில டிப்ஸ்...
அதிலும் தற்போது பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியை சரிசெய்ய ஒருசில இயற்கை வழிகள் உள்ளன. இங்கு பெற்றோர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியைப் பற்றிய சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து உங்கள் குழந்தையின் வலியைப் போக்குங்கள்.

குழந்தை பிறந்து 2 வாரங்களுக்கு பின் ஆரம்பமாகும்
பொதுவாக குழந்தை பிறந்து கொஞ்ச மாதம் வரைக்கும் அவர்களின் குடல் சரியா வேலை செய்யாமல் சுருண்டிருக்கும். அதனால் தான் குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படுகிறது.

4-5 மாதங்களுக்கு பின் போய்விடும்
குழந்தை பிறந்த 4-5 மாதங்களில் அதன் செரிமான மண்டலமானது சரியான நிலையில் இயங்க ஆரம்பித்துவிடும். இப்படி செரிமான மண்டலமானது சீராக செயல்பட ஆரம்பித்துவிட்டால், குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படாமல் இருக்கும். ஒருவேளை 5 மாதங்களுக்கு பின்னரும் குழந்தை வயிற்று வலியால் அவஸ்தைப்பட்டால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

அனைத்து குழந்தைகளுக்கும் வலி ஏற்படாது
வயிற்று வலியால் பெரும்பாலான குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் அனைத்து குழந்தைகளுக்குமே நிச்சயம் வலி ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஏனெனில் ஒருசில குழந்தைகளுக்கு இத்தகைய வலி வராமல் கூட இருக்கும்.

தொடர்ந்து அழுவது
பிறந்த குழந்தையானது பசி அல்லது மலம் கழித்திருந்தால் தான் அழும். அதுவும் பசி அடங்கிவிட்டால், அவர்கள் அழமாட்டார்கள். ஆனால் வயிற்று வலி இருந்தால், அவர்கள் தொடர்ந்து அழுவார்கள். அப்போது அவர்களது அழுகையை நிறுத்துவதற்கு என்ன செய்தாலும் அது பலிக்காது.

பால் குடிப்பதை தவிர்ப்பார்கள்
பொதுவாக அழும் குழந்தைக்கு பால் கொடுத்தால், அவர்கள் அழுகையை நிறுத்துவார்கள். ஆனால் குழந்தைக்கு வயிற்று வலியானது கடுமையாக இருந்தால், அப்போது அவர்கள் பாலை குடிக்க மறுப்பார்கள். மேலும் வயிற்று வலி இருந்தால், அவர்கள் அடிக்கடி வாயுவை வெளிவிடுவார்கள்.

வலி ஆரம்பமானால் திடீரென்று நின்றுவிடும்
பிறந்த குழந்தைக்கு வயிற்று வலி வந்தால், அது எப்போது வேண்டுமானாலும் நின்றுவிடும். அதுவும் அந்த வலியானது சில குழந்தைகளுக்கு 5 நிமிடத்தில் நிற்கும் அல்லது 1/2 மணிநேரத்திற்கு கூட இருக்கும்.

உடலை இறுக்குவார்கள்
பிறந்த குழந்தைக்கு வயிற்று வலி வந்தால், அவர்கள் தொடர்ந்து அழுவதுடன், உடலை இறுக்குவார்கள். இது அவர்களுக்கு வயிற்று வலி வந்துள்ளது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்.

தாய்ப்பால் கொடுத்தால் வயிற்று வலி குறைவாக இருக்கும்
ஃபார்முலா பால் குடிக்கும் குழந்தைகளை விட, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு வயிற்று வலியானது குறைவாக இருக்கும். ஏனெனில் தாய்ப்பாலானது எளிதில் செரிமானமடையும். ஆனால் ஃபார்முலா பாலானது கெட்டியாக இருப்பதால், அது குழந்தையின் செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுத்து, கடுமையான வலியைக் கொடுக்கும்.

வலியுடன் மலம் அல்லது வாயு வெளியேறும்
பிறந்த குழந்தைக்கு வயிற்று வலி வரும் போது, வலியுடன் அவர்கள் மலம் அல்லது வாயுவை வெளியேற்றினால், அவர்களுக்கு வலி குறைந்துவிடும் என்று அர்த்தம். எப்படியெனில் குழந்தைக்கு வயிற்று வலி ஏற்படும் போது, அவர்களின் அடி வயிற்றினைப் பார்த்தால் இறுக்கமாக வாயுவானது நிறைந்து இருக்கும். வாயு வெளியேறிவிட்டால், அவர்களது வலியானது பறந்து போய்விடும்.

வயிற்று வலிக்கு ஓமம்
சிறிது ஓமத்தை வாணலியில் வறுத்து, அதனை ஒரு துணியில் கட்டி, வெதுவெதுப்பான நிலையில் குழந்தையின் வயிற்றில் ஒத்தடம் கொடுத்தால், அவர்களது வயிற்றில் உள்ள வாயுவானது வெளியேறி, வலியானது போய்விடும்.

எலுமிச்சை நீர்
குழந்தையின் வயிற்று வலியை சரிசெய்ய கடைகளில் விற்கப்படும் அனைத்து பொருட்களிலும் எலுமிச்சை நீர் சிறிது இருக்கும். எனவே கடைகளில் வாங்கி வந்து கொடுக்க முடியாதவர்கள், வீட்டிலேயே எலுமிச்சை நீர் தயாரித்து, குழந்தைகளுக்கு சிறிது கொடுக்கலாம். இதனால் அவர்களது வயிற்று வலியானது நிச்சயம் நின்றுவிடும்.



Click it and Unblock the Notifications