For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குழந்தைகளுக்கு பசும்பால் கொடுப்பதால் கிடைக்கும் பிரமாதமான சில நன்மைகள்!!!

By Nobert Thivyanathan
|

குழந்தைகளுக்கு ஒரு வயது பூர்த்தியாவதற்கு முன்னர் அவர்களுக்கு பசும்பால் கொடுக்கக் கூடாது. இது எல்லா நிபுணர்களும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம். அதுவரைக்கும், உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலுடன் குழந்தைகளுக்கான திட உணவும் சேர்ந்து கொடுக்க வேண்டும். ஆனால், குழந்தைக்கு ஆறு மாதம் பூர்த்தியான பின்னர் அவர்களுக்கான உணவில் சிறிதளவு பசும்பால் சேர்த்துக் கொள்ளலாம்.

ஏனெனில் பசும்பாலில் சிறந்த ஊட்டச்சத்துகள் உள்ளன. இது உடலை வலிமையாக்க உதவுகிறது. அதிலும் இது சிறந்த புரோட்டீன்கள், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் ஜிங்க் ஆகியவை குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொண்டுள்ளது.

எலும்புகளை வலிமையாக்குகிறது

பசும்பாலில் போதியளவு கால்சியம் உள்ளது. இது உங்கள் குழந்தையின் பல் மற்றும் எலும்புகளை வலிமையாக்குகிறது. அதிகளவு கால்சியம் மற்றும் ஏனைய சத்துகள் மூலம் இது குழந்தைகளின் தசைக் கட்டுப்பாடு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.

தேவையான வைட்டமின்கள் கொண்டவை

பசும்பாலில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அடங்கியுள்ளன. இது குழந்தையின் உடலில் கால்சியம் உறிஞ்சப்படுவதற்கு உதவுகிறது. மேலும் வாழ்க்கையின் பிற்காலங்களில், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் போன்றஆபத்துகளை இது குறைக்கிறது.

வளர்ச்சிக்கு தேவையான புரோட்டீன்கள் நிறைந்தவை

குழந்தைகள் வளரும் வயதில், அவர்களுக்கு புரோட்டீன் அவசியம். பசும்பால் மூலமாக நீங்கள் அவர்களுக்கு இதை வழங்கலாம். அதுமட்டுமல்லாமல் உங்கள் குழந்தையை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கான கார்போஹைட்ரேட்டும் இதில் உள்ளது.

எவ்வளவு பசும்பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு சிறந்தது?

உங்கள் குழந்தைகளுக்கு அதிகளவில் பசும்பால் கொடுக்க வேண்டாம். இது சில சமயங்களில் ரத்த சோகையை ஏற்படுத்தலாம். எனவே, நடுத்தரமான அளவு கொடுக்கவும். ஒரு நாளைக்கு 16 அவுன்ஸ் (2 கப்) என்ற அளவில் நீங்கள் துவங்கலாம். பின்னர் குழந்தைக்கு இரண்டு வயது நெருங்கும் போது படிப்படியாக 24 அவுன்ஸ் வரை அதிகரிக்கலாம்.

உங்கள் குழந்தைக்கு பால் தேவைப்படும் அதே நேரம், இதன் மூலம் ஏனைய திட உணவுகள் உட்கொள்ளும் அளவு குறையலாம். எனவே, பசும்பால் கொடுக்கத் துவங்குமுன் குழந்தையின் பசியில் கவனத்துடன் இருங்கள்.

English summary

3 Amazing Benefits Of Cow Milk For Babies

Most mothers introduce their babies to the goodness of cow’s milk. But the question that arises here is when? One thing is for sure – babies should not be put on cow’s milk before their first birthday. Cow’s milk is a good source of essential nutrients. The main benefits of cow milk are:
Desktop Bottom Promotion