Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பிறந்த குழந்தைக்கு ஏற்படும் வயிற்று வலியை குணப்படுத்த சில டிப்ஸ்...
பெரும்பாலான பிறந்த குழந்தைகளுக்கு 3-6 மாத கால இடைவெளியில் வயிற்று வலியானது ஏற்படும். இவ்வாறு குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும் போது, அவர்கள் தொடர்ந்து அழுது கொண்டே இருப்பார்கள். இதற்கு பெரும் காரணம் குழந்தைகளுக்கு பொதுவாக குடலானது சிறிதாக இருக்கும். ஆகவே அவர்கள் பிறந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆகும் போது, குடலானது சரியான வடிவத்திற்கு வர ஆரம்பிப்பதால், அப்போது குழந்தைகளுக்கு கடுமையான வயிற்று வலி ஏற்படுகிறது.
ஆகவே தான் மருத்துவர்கள் குழந்தைகளுக்கு கிரேப் வாட்டரை கொடுக்கச் சொல்கிறார்கள். ஆனால் கிரேப் வாட்டர் இல்லாத காலத்தில், ஒரு சில இயற்கை வைத்தியங்கள் மூலமே, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியானது குணமாக்கப்பட்டது.
எனவே குழந்தைகளின் குடல் வளர்ச்சிக்காக ஏற்படும் வயிற்று வலியைப் போக்குவதற்கு எந்த மாதிரியான இயற்கை வைத்தியத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, குழந்தையின் வயிற்று வலியை குணப்படுத்துங்கள்.

பட்டை
பட்டைக்கு உடலின் உட்பகுதியில் ஏற்படும் காயங்களை போக்கும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் செரிமானமின்மை மற்றும் வாயுத் தொல்லையை குணப்படுத்தவும் பெரிதும் உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலியையும் சரிசெய்ய, பட்டையை டீ போட்டு கொடுக்கலாம்.

சீரகம்
சீரகம் குழந்தைகளது குடலுக்கு ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும் தன்மையுடையது. குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று வலிக்கு மிகவும் சிறந்தது.

துளசி
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த துளசியில் உள்ள இரசாயப் பொருள், குழந்தைகள் வயிற்று வலியால் ஏற்படும் அவஸ்தையைப் போக்கி, அவர்களுக்கு நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கும். எனவே குழந்தைகளுக்கு துளசியின் சாற்றை வயிற்று வலியின் போது கொடுக்க வேண்டும்.

ஏலக்காய்
ஏலக்காய் குழந்தைகளுக்கு ஓய்வெடுக்கவும், குமட்டலை போக்கவும் சிறந்ததாக உள்ளது. அதிலும் குமட்டலின் காரணமாக சில நேரங்களுக்கு குழந்தைகளுக்கு வயிற்று வலி ஏற்படும். எனவே இவற்றை தடுப்பதற்கு, ஏலக்காய் கொண்டு டீ போட்டு கொடுப்பது நல்லது.

சீமை சாமந்தி டீ
சீமை சாமந்தியில், உடலில் அழற்சியை ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இது குழந்தைகளின் வயிற்று வலியை குணப்படுத்தவும் சிறந்ததாகவும் உள்ளது. ஆகவே அதற்கு சீமை சாமந்தியை டீயைக் கொடுக்கலாம்.

புதினா
பிறந்த குழந்தையின் குடலில் கடுமையான பிடிப்பு இருப்பதால், அது வயிற்று வலியை ஏற்படுத்தும். எனவே இத்தகைய பிடிப்புக்களை போக்குவதற்கு புதினாவின் சாற்றினை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

தாய்ப்பால்
குழந்தைகளது உடலில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்குவதற்கு சிறந்த மருந்து என்றால் அது தாய்ப்பால் தான். எனவே குழந்தைகள் தொடர்ச்சியாக வயிற்று வலியினால் அழும் போது, அவர்களுக்கு அவ்வப்போது தாய்ப்பால் கொடுத்தால், அவர்களுக்கு வலி குறைவதோடு, நல்ல தூக்கமும் வரும்.

சோம்பு
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி, சோம்பை ஒரு துணியில் போட்டு இறுக்கமாக கட்டி, அதனை தோசைக்கல்லில் தொட்டு, குழந்தையின் வயிற்றில் மிதமான சூட்டில் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.

தண்ணீர்
குழாயிலிருந்து ஓடும் தண்ணீரிலோ அல்லது வாளியில் உள்ள நீரிலோ குழந்தையை உட்கார வைத்தால், வயிற்று வலி குணமாகும். குறிப்பாக அவ்வாறு உட்கார வைக்கும் போது, தண்ணீர் குழந்தையின் மூக்கு, கண் அல்லது காதுகளுக்குள் செல்லாதவாறு கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

தூக்கம்
குழந்தைக்கு வயிற்று வலியின் போது தூங்க வைத்துவிட்டால், குழந்தைகளுக்கு வலி தெரியாமல், குழந்தைகள் மெய் மறந்து தூங்குவார்கள்.



Click it and Unblock the Notifications
