Latest Updates
-
வயிற்றை சுத்தம் செய்யணுமா? அப்ப காலையில் இந்த பானங்களை குடிங்க... -
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க..
சுயமாக சாப்பிட குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்!

இரண்டு வயதிற்குப் பின்னர் குழந்தைகளை தாங்களாகவே உண்ணவும், தண்ணீர் பருகவும் பழக்கப்படுத்தவேண்டும். அதுவே அவர்களின் வளர்ச்சிக்கு ஏற்றது என்று குழந்தை நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சுதந்திரமாக உண்ணவேண்டும்
குழந்தைகளை சுதந்திரமாக உண்ணப் பழக்கவேண்டும். அகலமான தட்டில் உணவை போட்டு அவர்களின் கைகளால் எடுத்து உண்ணச் சொல்லாம். கைகளால் எடுத்து உண்ணும் போது எந்த கைகளில் எடுத்து உண்ணவேண்டும் என்பதை தெரிவிக்கவேண்டும். குழந்தைகளின் அருகில் அமர்ந்து எந்த மாதிரியான உணவை குழந்தைகள் விரும்புகின்றனர் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். டம்ளரில் தண்ணீரை சப்பி குடிக்கச் செய்யலாம், இதனால் தண்ணீர் சிந்துவது தவிர்க்கப்படும். அதிக அளவு தண்ணீர் பருகவும் முடியும்.
குழந்தைகள் உண்ணும் உணவை எளிதில் எடுத்து உண்பதற்கு ஏற்ப அதற்கான தட்டுக்களில் போட்டுத்தரவேண்டும். அவர்கள் தண்ணீர், ஜூஸ் குடிக்கும் பாட்டில் எளிதில் திறக்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
ஒரு பெரிய தட்டில் சாப்பாட்டை பரிமாறி, அதனுடன் காய்கறி, கீரை, முட்டை போன்றவற்றை வைத்து அதையும் சாப்பிடுமாறு ஊக்கப்படுத்துங்கள். கூடவே, குழந்தைகளுக்கு எவ்வளவு உணவு தேவையோ அந்த அளவு மட்டுமே உண்ணப் பழக்குங்கள்.
மிரட்ட கூடாது
குழந்தைகள் போதும் என்றளவிற்கு சாப்பிட்டதும் அவர்களாகப் போதும் என்று சொல்லுவார்கள். அதற்கு மேலும் அதிகமாக உண்ணச் சொல்லிக் கட்டாயப்படுத்த வேண்டாம். சாப்பிடப் பழகும் குழந்தைகள் தட்டிலிருந்து சாப்பாட்டை சிந்துவதை ஆரம்பத்தில் தடுக்க முடியாது. அவ்வாறு, சாப்பிடும் போது குழந்தைகள் உணவைச் சிந்திவிட்டால் திட்டுவதோ, அடிப்பதோ, மிரட்டுவதோ கூடாது. சாப்பாட்டை அவர்கள் ருசித்துச் சாப்பிட நீங்கள் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.
உணவும் நிறமும்
சில குழந்தைகள் உணவின் நிறத்தை அடையாளம் வைத்துக்கொண்டு அதனை சாப்பிட ஆர்வம் காட்டுவார்கள். பூரிக்கு மஞ்சள் கலர் குருமா, தோசைக்கு சிவப்பு கலர் சட்னி என அடையாளம் வைத்திருப்பார்கள். அவர்கள் சாப்பிடும் போது அவர்களின் உணவினை வண்ணமயமாக தருவது ஆர்வத்தை அதிகரிக்கும்.
எப்படி சாப்பிடுவது
சாப்பிடும் போது எப்படி சாப்பிட்டால் அதிக அளவு உணவை உட்கொள்ள முடியம் என்பதை குழந்தைகளுக்கு பழக்கவேண்டும். குழந்தைகளுக்கு பிடித்தமான உணவை அவர்களின் இடது கண் பார்வைப் பக்கம் படுமாறு வைத்தால் அவர்களால் உணவை எளிதில் கவனிக்க முடியும். ஆர்வமுடன் உணவை எடுத்து உண்பர். குழந்தைகளுக்கு எதிரில் கண்ணாடியை வைப்பது அவர்கள் எவ்விதம் உணவை எடுத்து வாயில் வைக்கின்றனர் என்பதை நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.
உண்பதற்கு இடைஞ்சல்
அதிக சப்தங்கள் இருந்தால் குழந்தைகள் உண்பதற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தேவையற்ற சப்தங்கள் வராமல் தடுக்கவேண்டும். உணவு மேஜையில் அமர்ந்த உடன் தொலைக்காட்சி சப்தங்களை குறைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.



Click it and Unblock the Notifications