Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
குழந்தைங்க ஆல்பம் ரெடி பண்ண போறீங்களா? முதல்ல இத படிங்க...
இந்த உலகத்தில் பெற்றோர்களால் எப்போதுமே மறக்க முடியாத ஒரு அனுபவம் என்றால் அது குழந்தைப் பருவத்தில் தங்கள் குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன குறும்புகள் தான். அத்தகைய குறும்புகளை எந்த ஒரு பெற்றோரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் மறக்காமல், அவற்றை நினைத்தோ அல்லது அந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆனப் பின் அவர்களிடம் சொல்லியோ சந்தோஷப்படுவார்கள். ஏனெனில் அது ஒரு சொல்ல முடியாத அளவிலான ஒரு அனுபவம். இந்த அனுபவத்தை உலகில் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் அனுபவிப்பார்கள்.
ஏனெனில் குழந்தைகள் சில நேரங்களில் நினைக்கவே முடியாத அளவில் அழகான பாவணைகளைக் கொடுப்பார்கள். அவைகளை மறுமுறை காணமுடியும் என்பது கடினம் தான். எனவே ஒவ்வொரு செயலையும் போட்டோ எடுத்துக் கொண்டால், சூப்பராக இருக்கும்.
சிலர் அந்த போட்டோக்களில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டை வீட்டின் சுவற்றில் ஃப்ரேம் செய்து மாட்டிவிடுவார்கள். இவ்வாறு ஆல்பம் செய்தால், அதனை குழந்தைகள் பெரியவர்களான பின்பு அவர்கள் எதிர் பார்க்காத ஏதாவது ஒரு நாளில், அந்த ஆல்பத்தைக் கொடுத்து ஒரு பெரிய ஆச்சரியத்தை கொடுக்கலாம்.
எனவே நீங்கள் அந்த நினைவுகளை மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்தும் வகையில் மற்றும் குழந்தைக்கு ஒரு அழகான ஒரு பரிசை வருங்காலத்தில தர வேண்டும் என்று நினைத்தால், அதற்கு இந்த ஆல்பம் சிறந்ததாக இருக்கும். இப்போது அவற்றில் ஒருசில அழகான பாவணையைத் தரும் குழந்தைகளின் போட்டோக்கள் உங்களுக்காக கொடுத்துள்ளோம். பார்த்து அதேப் போல் ஆல்பம் செய்து மகிழுங்கள்.

பிறந்த அந்த தருணம்
குழந்தை பிறந்ததும் அவர்கள் கண்களை திறக்கவே சற்று கடினமாக இருக்கும். மேலும் அப்போது அவர்களுக்கு தாயின் அரவணைப்பு அதிகம் தேவைப்படும். ஆகவே அந்த நேரத்தில் அவர்கள் பிறந்த அந்த நாளை மறக்காமல் இருக்கும் வகையில், தாயுடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

குட்டியின் தூக்கம்
எப்போதுமே இந்த மாதிரியான தூக்கத்தை பார்க்க முடியாது என்று சொன்னால், அது குழந்தை பருவத்தில் தான். ஆகவே அவர்கள் அழகாக தூங்கும் போது ஒரு கிளிக் செய்து, ஆல்பத்தில் வைக்கலாம்.

செல்லக் குளியல்
பிறந்த குழந்தையை குளிப்பாட்டும் போது சில நேரங்களில் க்யூட்டாக இருப்பார்கள். அப்போது அவர்களின் அந்த க்யூட்டான காட்சியை ஞாபகார்த்தமாக போட்டோ எடுத்துக் வைக்கலாம்.

குழந்தையின் முதல் சண்டைப் பயிற்சி
அனைத்து குழந்தைகளும் படுக்கும் போது இரண்டு கால்களையும் தூக்கிக் கொண்டு, பாதங்களை கைகளால் பிடித்துக் கொள்வார்கள். அதுவே அவர்களது முதல் சண்டை போடுவதற்கு காண்பிக்கும் ஒரு போஸ். ஆகவே அத்தகைய ஒரு போட்டோ ஆல்பத்தில் இருந்தால், சூப்பராக இருக்கும்.

முதல் நகர்வு
இந்த உலகில் இருக்கும் அழகான ஒரு காட்சியிலேயே குழந்தை தவழ்ந்து செல்வது தான் சிறப்பான காட்சி.

சின்ரெல்லா
சின்ரெல்லா எவ்வளவு அழகோ, அதேப்போல் அனைத்து அப்பாக்களுக்கும் தங்கள் குழந்தை தான் ஒரு சிறப்பான, விலைமதிப்பில்லாத அழகான ஒன்று.

வருங்கால செஃப்
சில குழந்தைகள் அடிக்கடி தலையில் ஏதாவது துணியை வைத்துக் கொள்வர். சில நேரத்தில் கரண்டி, ஸ்பூன் போன்றவற்றை பார்த்தால், உடனே அதை எடுத்து வாயில் வைக்காமல் விட மாட்டார்கள். இதைப் பார்த்தால், வருங்காலத்தில் செஃப் ஆவார்களோ?

கட்டிடக்கலை நிபுணர்
அடுத்த 25 ஆண்டுகளில், நகரத்தின் சிறந்த கட்டிடக்கலை நிபுணர் கூட ஆகலாம். அதை தான் இப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க போல...

முதல் அடி
செல்லக் குட்டி முதல் அடி எடுத்து வைத்துவிட்டால், அந்த தருணம் ஒரு சிறந்த அழகான நிகழ்வு.

பேபி சாண்டா
கிறிஸ்துமஸ் என்றாலே கிறித்துவர்களின் வீட்டில் மட்டுமின்றி அனைத்து வீடுகளில் இருக்கும் குழந்தைகளையும் கிறிஸ்துமஸ் தாத்தா போன்று அலங்கரித்து அழகு பார்ப்பார்கள். எனவே இதுவும் ஆல்பத்திற்கு ஒரு அழகைத் தரும்.



Click it and Unblock the Notifications
