Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
செல்லத்துக்கு பல் முளைக்கும் போது என்னலாம் நடக்கும் தெரியுமா!!!

* குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கும் போது, அவர்களது வாயில் இருந்து அதிகமான அளவு எச்சில் வெளிவரும். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்கு தண்ணீர் அல்லது பால் கொடுக்கும் போதும், வாயில் அதிகமாக எச்சில் சொட்ட ஆரம்பிக்கும். அவ்வாறு ஏற்படும் போது அதனை அடிக்கடி துடைக்க வேண்டும். இல்லையென்றால் அந்த எச்சில் அவர்களது முகத்தில் நீண்ட நேரம் இருந்தாலோ அல்லது குழந்தையின் துணியில் இருந்தாலோ அவர்களுக்கு சளி அல்லது இருமல் போன்றவை ஏற்படும். ஆகவே துணிகள் ஈரமாக இருந்தால் அடிக்கடி மாற்ற வேண்டும்.
* பற்கள் முளைப்பது போல் இருந்தால் குழந்தைகளுக்கு வலி ஏற்படும். ஆகவே அப்போது அந்த வலியால் குழந்தை அடிக்கடி அழத் தொடங்கும். அதுமட்டுமல்லாம என்ன தான் சமாதானப்படுத்தி குழந்தை அழுதாலும், அது குழந்தைக்கு பற்கள் முளைக்கும் நேரம் என்பதை அறியலாம். அப்போது குழந்தை நல மருத்துவரை அணுகி, குழந்தைக்கு ஏற்ற வலி நிவாரணியை வாங்கி கொடுக்க வேண்டும்.
* எதையாவது குழந்தை அடிக்கடி வாயில் வைக்கும். அதுமட்டுமல்லாமல் கண்ணில் படும் அனைத்துப் பொருட்களையும் வாயில் வைக்கும். ஏனெனில் பற்கள் முளைக்கும் போது ஈறுகளில் அரிப்பு மற்றும் தோலை துளைத்து பற்களை வருவதால் வாயில் வலி போன்றவை ஏற்படும். இந்த நேரத்தில் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் போது தாய்க்கு பெரும் சிரமம் ஏற்படும்.
* வலியின் காரணமாக சில சமயங்களில் குழந்தை பால் குடிப்பதை கூட மறுக்கும். ஏனெனில் அந்த வலி குழந்தைக்கு ஒருவித எரிச்சலை ஏற்படுத்துவதால், அது பால் குடிப்பதை மறுக்கும்.
* சிலசமயங்களில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். பல் வளர்வதற்கு முன் குழந்தைகளுக்கு தண்ணீர் போன்று கழிவுகள் வெளியேறும். இவ்வாறு வந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஏனென்றால் வயிற்றுக்கோளாறுகள் இருந்தால் கூட இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும்.
* பற்கள் முளைக்கும் ஆரம்ப காலத்தில் குழந்தைகளுக்கு தூக்கம் கூட வராது. பற்கள் முளைக்கும் போது ஏற்படும் வலி, குழந்தைகள் நிம்மதியாக தூங்கவிடாது. தூங்கும் போது புரண்டு புரண்டு படுக்கும். சொல்லப்போனால் நடு ராத்திரியில் கூட தூங்காமல் எழுந்து அழத் தொடங்கும்.
இவையெல்லாம் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும் போது ஏற்படும் அறிகுறிகள் ஆகும். ஆகவே இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு, குழந்தைகளுக்கு வலி ஏற்படாமல், அதற்கான மருந்துகளை மருத்துவரை அணுகி முன்பே கொடுத்து, அவர்களை சந்தோஷமாக, எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வளர்க்கலாம்.



Click it and Unblock the Notifications
