Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையை திருடி அதனை 240 துண்டுகளாக வெட்டி ஆராய்ச்சி செய்த மருத்துவர்... ஏன் தெரியுமா?
உலக வரலாற்றில் பல விஞ்ஞானிகள் தங்களின் அரிய கண்டுபிடிப்புகளாலும், கோட்பாடுகளாலும் அறிவியல் முன்னேற்றத்திற்கு பங்களித்திருந்தாலும் வெகுசில விஞ்ஞானிகளே உலகில் அனைத்து மக்களாலும் அறியப்பட்ட புகழ்பெற்ற விஞ்ஞானிகளாக இருப்பார்கள். அப்படி அறிவியல் உலகின் தவிர்க்க முடியாத விஞ்ஞானிகளில் ஒருவர்தான் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 20 ஆம் நூற்றாண்டின் மிகச்சிறந்த அறிவியல் சிந்தனையாளர்களில் ஒருவர். நோபல் பரிசு பெற்ற இயற்பியல் அறிஞர், நவீன இயற்பியலின் இரண்டு முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக உள்ள Theory of Relativity கோட்பாட்டிற்கு பெயர் பெற்றவர்.

அவர் தனது மூளையில் உதித்த சிறப்பு வாய்ந்த பல அறிவியல் கோட்பாடுகளையும் உலகிற்கு கொடுத்துள்ளார், அதனால்தான் அவரது மூளை உலகிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதுவரை மனித வரலாற்றில் அதிக IQ உள்ள மூளை ஐன்ஸ்டீனுடையது என்று கூறப்படுகிறது. ஆனால் இந்த புகழே பின்னாளில் அவருக்கு பிரச்சினையாக மாறியது.
ஏப்ரல் 18, 1955 இல் அவர் பிரின்ஸ்டன் மருத்துவமனையில் அவர் இறந்தபோது, அவரது உடலை உடற்கூறு செய்த நிபுணர் தாமஸ் ஹார்வி அதைத் திருடினார். ஹார்வி அதை பாதுகாத்து, புகைப்படம் எடுத்து அளந்தது மட்டுமல்லாமல், மூளையை 240 துண்டுகளாக வெட்டினார்.
தாமஸ் ஹார்வி ஐன்ஸ்டீன் மூளையின் 200 ஸ்லைடுகளின் 12 செட்களை உருவாக்கினார், இதில் திசு மாதிரிகள்ப்ளாக்குகளில் குறியிடப்பட்டுள்ளன.
23 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த ஐன்ஸ்டீனின் மூளையைக் கண்டுபிடிக்க ஸ்டீவன் லெவி என்ற தனது நிருபரை பிரபல நாளிதழின் ஆசிரியர் அனுப்பினார். தாமஸ் ஹார்வி பிரின்ஸ்டன் மருத்துவ மையத்தை விட்டு வெளியேறியதை லெவி கண்டறிந்தார், இறுதியில் அவரை கன்சாஸில் இருந்த வியூட்டாவில் கண்டுபிடித்தார்.
லெவி இதுபற்றி கூறியபோது "நான் அவரிடம், 'ஐன்ஸ்டீனின் மூளையைப் பற்றி ஒரு கதை எழுதுகிறேன்' என்று சொன்னேன். அவர் முதலில் சொன்னது என்னவெனில் 'உண்மையில் என்னால் உங்களுக்கு உதவ முடியாது'. மேலும் 'அவர் பேசுவதற்கு ஆர்வமாக இல்லை" என்று கூறினார்.
ஆனால் இறுதியில் அவர் ஹார்வியைச் சந்தித்தபோது, தாமஸ் ஹார்வி உண்மையில் ஐன்ஸ்டீனின் மூளையை ஆராய்ந்து பார்த்திருப்பதை லெவி அறிந்தார். லெவி ஐன்ஸ்டீன் மூளையின் ஒரு புகைப்படத்தைக் கேட்டார், ஹார்வி அவருக்கு ஒரு பீர் குளிரூட்டியைக் காட்டினார். அதற்குள்ளே லெவி பார்த்த போது மூளையின் வெட்டப்பட்டு பகுதிகள் உள்ளே இருந்தன.
அந்த ஜாடிகளில் ஒன்றில் இருந்ததைப் பற்றி, நியூ ஜெர்சி மாத இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில் லெவி கூறினார், "ஒரு சங்கு ஷெல் வடிவ சுருக்கம் நிறைந்த பொருள் சுடப்பட்ட பிறகு இருக்கும் களிமண்ணின் நிறத்தில் இருந்தது, இரண்டாவது, பெரிய ஜாடியில் "டஜன் கணக்கான செவ்வக ஒளிஊடுருவக்கூடிய பிளாக்குகள், கோல்டன்பெர்க்கின் வேர்க்கடலை அளவில்" இருந்தது.
இந்த விஷயம் வெளியே வந்த பிறகு ஹார்வி மிகவும் பிரபலமானார். 1985 ஆம் ஆண்டில், அவர் ஐன்ஸ்டீனின் மூளையின் முதல் ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார், அதில் நியூரான்கள் மற்றும் க்ளியல் ஆகிய இரண்டு வகையான உயிரணுக்களின் அசாதாரண விகிதங்கள் இருப்பதாகக் கூறி, அவை நியூரான்களை நிலைநிறுத்தி ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. நேஷனல் ஜியோகிராஃபிக் அறிக்கையின் படி, ஐன்ஸ்டீனின் மூளை நுண்ணறிவின் நரம்பியல் அடிப்படைகளை வெளிக்கொணர உதவும் என்று மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் உலகின் பல வல்லுநர்கள் இந்த ஆய்வுகளை முட்டாள்தனமானவை என்று கூறி மறுத்துவிட்டனர்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளையின் விஞ்ஞான முக்கியத்துவம் விவாதத்திற்குரியதாக இருந்தாலும், அதன் கதை கலாச்சாரரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது, ஒரு நாவல், ஒரு காமிக் புத்தகம் மற்றும் ஹார்வியின் கதையால் ஈர்க்கப்பட்ட நிக் பெய்னின் நாடகம் ஆகியவற்றை இந்த சம்பவம் உருவாக்கியது.



Click it and Unblock the Notifications
