Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
பால் குடித்தவுடன் நீங்க வெளியே செல்லக்கூடாதாம்... ஏன் தெரியுமா?
தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பல காலங்களாக நமக்கு கூறப்பட்டு வருகிறது. நம் உடல் ஆரோக்கியத்திற்கு பல அதிசயங்களை செய்வதால், நம் முன்னோர்கள் தினமும் பால் குடிக்க சொல்லி நம்மை வற்புறுத்தி இருப்பார்கள். ஆனால் பால் குடிப்பதில் சில கட்டுப்பாடுகள் இருப்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

வீட்டில் இருந்து வெளியே செல்வதற்கு முன்பு பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகிறது. எதனால் இது கூறப்படுகிறது? பால் குடித்துவிட்டு வெளியே செல்வதை ஏன் தவிர்க்க வேண்டும்? என்பதை பற்றி இக்கட்டுரையில் விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய குடும்பத்திலும் தினமும் பால் குடிப்பது என்பது அன்றாட பழக்கமாக இருந்து வருகிறது. மேலும், இது பாராமரியமாக பின்பற்றி வரும் பழமையான சடங்கு. காலை, மாலை மற்றும் இரவு தூங்குவதற்கு முன்பு பால் குடிப்பதை பெரும்பாலான மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். மதிய வேளையில் பால் குடிப்பது மிகவும் குறைவு. பால் குடித்துவிட்டு, சிறிது நேரம் நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். ஏனெனில், பால் குடித்த உடனேயே வீட்டை விட்டு வெளியேறுவது எதிர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது.
பாரம்பரிய நம்பிக்கைகளின்படி, வெளியே செல்வதற்கு முன்பு, இனிப்புகள் போன்ற வெள்ளை நிற உணவை சாப்பிடுவது அல்லது குடிப்பது எதிர்மறை ஆற்றலை தூண்டுகிறது மற்றும் ஈர்க்கிறது. இது உங்களுக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது மற்றும் உங்கள் உடல் நலத்தை பாதிக்கலாம்.
பொதுவாக மதிய வேளை மற்றும் நடு இரவில் வீட்டை விட்டு வெளியே செல்ல மக்கள் யோசிப்பார்கள். ஏனெனில், பகல் மற்றும் இரவு 12 மணிக்கு எதிர்மறை ஆற்றல்கள் அதிகமாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே, இந்த நேரத்தில் பால் அல்லது வெள்ளை நிற இனிப்புகளை சாப்பிட்டுவிட்டு வெளியே செல்வதை எப்போதும் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது. அதை நீங்கள் மீறும்போது, எதிர்மறை ஆற்றல்கள் உங்கள் உடலை பாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.
பிரபலமான நம்பிக்கைகளின்படி, சுராஹா (குறுக்கு பாதை) ராகுவை (எதிர்மறை ஆற்றல்கள்) குறிக்கிறது. மறுபுறம் வெள்ளை நிறம் சந்திரனை (நிலவு) குறிக்கிறது. வெள்ளை என்பது எப்போதும் அமைதியைப் பற்றியது. இருப்பினும், இந்து மத நூல்கள் மற்றும் நம்பிக்கைகளின்படி ராகு மற்றும் சந்திரன் இருவரும் எதிரிகள். இது நபரை எதிர்மறையாக பாதிக்கிறது மற்றும் மகிழ்ச்சியற்ற தன்மையைக் கொண்டுவருகிறது. இதனால், சிக்கல்கள் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
