Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
பாகிஸ்தான் கழுதைகளை 2 லட்சம் கொடுத்து வாங்கும் சீனா... காரணம் என்னனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
இந்தியாவுடனான போர் பதற்றத்திற்கு பின் பாகிஸ்தான் பொருளாதாரீதியாக பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருகிறது. தற்போது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி 2.7% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோதுமை போன்ற அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ள நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக கழுதைகளின் விலையும் மக்களின் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளது.
ஒரு கழுதையின் வயது மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்து ரூ.200,000 அல்லது அதற்கு அதற்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இது பாகிஸ்தானியர்களுக்கு கழுதைகள் எவ்வளவு முக்கியமானவை என்பதையும், இந்த விலை உயர்வு அவர்களின் வாழ்க்கையை எப்படி கடுமையாக பாதிக்கும் என்பதையும் விளக்குகிறது.

பாகிஸ்தானில் அளவிற்கு அதிகமாக கழுதைகளின் எண்ணிக்கை இருந்தாலும் அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. Pakistan Bureau of Statistics அறிக்கையின் படி, இந்த தென்கிழக்கு ஆசிய நாட்டில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான கழுதைகள் உள்ளன. இதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், எத்தியோப்பியா மற்றும் சூடானுக்குப் பிறகு மூன்றாவது பெரிய கழுதை எண்ணிக்கையைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரத்தில் கழுதைகளின் முக்கியத்துவம்
60 லட்சத்துக்கும் அதிகமாக கழுதைகள் இருந்தும் பாகிஸ்தானில் கழுதைகளின் விலை ஏன் இவ்வளவு அதிகமாக அதிகரித்துள்ளது? முதலாவதாக, செங்கல் சூளைகள், விவசாயம், போக்குவரத்து, மறுசுழற்சி மற்றும் கழிவு சேகரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் கழுதைகள் பயன்படுத்தப்படுவதால், பாகிஸ்தானின் முறைசாரா பொருளாதாரத்தில் கழுதைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இருப்பினும், பாகிஸ்தானில் கழுதைகளின் விலையில் சமீபத்திய உயர்வுக்கு சீனாவில் அவற்றின் தேவை அதிகரித்ததே காரணம். தேவை அதிகரித்ததால் விலையும் அதிகரித்துள்ளது.
எஜியாவோ என்றால் என்ன?
சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் எஜியாவோ என்ற ஜெலட்டின் தயாரிப்பில் கழுதையின் தோல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. கழுதை தோலை வேகவைத்து செறிவூட்டுவதன் மூலம் எஜியாவோ தயாரிக்கப்படுகிறது. சோர்வை விரட்டும் பண்புகள், மேம்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி, வீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பல உயிரியல் பண்புகளை எஜியாவோ கொண்டுள்ளது என்று சீனர்கள் நம்புகிறார்கள். இரத்தக் குறைபாட்டை சீராக்கும் சிகிச்சையிலும் இது பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, கழுதைகளின் விலை வரலாற்றில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளன. கடந்த ஆண்டை விட இது ஐந்து மடங்கு அதிகமாகும்.
சீனா பாகிஸ்தானிலிருந்து கழுதைகளை இறக்குமதி செய்கிறது
சீன மருத்துவத்தின் வெற்றி விகிதத்தையும், தேவையையும் கருத்தில் கொண்டு, எஜியாவோ தொழில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 160% வளர்ச்சியை அடைந்துள்ளது. இது சீன வணிகர்களை பாகிஸ்தானிலிருந்து கழுதைகளை வாங்குவதற்கான வாய்ப்புகளை ஆராயத் தூண்டியுள்ளது. மேலும் நாட்டில் பிரத்யேக கழுதை பண்ணைகள் நிறுவுவது குறித்து விவாதிக்க சீனக் குழு ஒன்று இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் தேசிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சிக்கான மத்திய அமைச்சர் ராணா தன்வீர் உசேனைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
