Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்த 5 ராசிக்காரங்க ஒருதலைப்பட்ச உறவில் இருப்பங்களாம்... உங்க ராசி என்ன?
ஒருதலைப்பட்ச காதல் அல்லது உறவு என்பது உண்மையில் மிகவும் வேதனையானது. யாரோ ஒருவரைக உயிருக்கு உயிராக காதலிக்கும்போது, அதை அந்த நபர்கள் உணராதபோது அது உங்களை மிகவும் காயப்படுத்தலாம். இந்த வகையான காதல் மிகவும் தனிமையாகவும் மனதை அதிகம் பாதிப்பதாகவும் இருக்கும்.
சில சமயங்களில், ஒரு நபர் ஒருதலைப்பட்ச காதலை எவ்வளவு தவிர்த்தாலும், அவர்களின் 'மகிழ்ச்சி-எப்போதும்' கிடைக்காது என்று தெரிந்தும் அவர்கள் ஒரு நபரிடம் காதலில் விழலாம்.

இக்கட்டுரையில், ஒருதலைப்பட்ச உறவில் இருக்கக்கூடிய ராசிக்காரர்களைப் பற்றி காணலாம்.
ஒருதலைப்பட்சமான உறவை சமநிலை மற்றும் சமமான பரஸ்பரம் இல்லாத உறவு என்று கூறலாம். சமமான அன்பு இல்லாத உறவில் ஒருவர் மற்றவரை விட அதிக நேரம், ஆற்றல், முயற்சி, உணர்ச்சி அல்லது நிதி ஆதரவை போன்றவற்றை அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும் கூட அவர்களின் துணையால் அவர்களின் காதலை புரிந்துகொள்ள முடியாமல் போகலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் விசுவாசமான மற்றும் நம்பிக்கையான துணையாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தாங்கள் நினைத்து மட்டுமே நடக்க வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்ற பிடிவாத குணம் இருக்கும். ஆதலால், அவர்கள் தங்கள் சொந்த தேவைகளில் அதிக கவனம் செலுத்துவார்கள். ஒருதலைப்பட்ச உறவில் இருக்கும்போது, தங்கள் துணைக்குத் தேவையான கவனத்தையும் ஆதரவையும் இவர்கள் கொடுக்க மாட்டார்கள்.
இந்த ராசிக்காரர்கள் ஒருதலைப்பட்சமான உறவில் இருப்பதைப் போல் தங்கள் துணையை உணரச் செய்யும் சில சமயங்கள் வரலாம். மேலும், இவர்கள் உறவில் பல விஷயங்களில் சமரசம் செய்துகொள்வதில் சிரமப்படுகிறார்கள். இது உறவில் இருக்கும் அவர்களின் துணையை மிகவும் காயப்படுத்தலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் அக்கறையுள்ள துணையாக அறியப்படுகிறார்கள். அதேநேரம் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டக்கூடிய எமோஷ்னலான நபராகவும் இருக்கலாம். ஒருதலைப்பட்ச உறவில், அவர்கள் தங்கள் துணையுடன் மிகவும் இணக்கமாக இருக்கலாம். அந்த உறவு ஆரோக்கியமாக இல்லாவிட்டாலும், இந்த ராசிக்காரர்கள் அந்த உறவில் இருக்க முயற்சி செய்யலாம். இவர்கள் உறவின் எல்லைகளை அமைக்காமல் இருக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இயற்கையாகவே அமைதியானவர்களாக இருப்பார்கள் மற்றும் எல்லா வகையில் மோதல்களைத் தவிர்க்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த விஷயங்களை விட தங்கள் துணையின் மகிழ்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கலாம். இதனால், இந்த ராசிக்காரர்கள் உறவில் தங்கள் சொந்த தேவைகளைத் தெரிவிக்க முடியாமல் கஷ்டப்படலாம். துலாம் ராசிக்காரர்கள் தங்கள் துணையிடமிருந்து அதே அளவிலான காதல் முயற்சியைப் பெறாமல் தொடர்ந்து தியாகம் செய்கிறார்கள் மற்றும் உறவில் தொடர்ந்து சமரசம் செய்கிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் அர்ப்பணிப்பு குணம் கொண்டவர்களாக இருக்கலாம். அவர்கள் தங்கள் சுதந்திரத்தை கொஞ்சம் அதிகமாக நேசிக்கிறார்கள் மற்றும் மதிக்கிறார்கள். இதனால், இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையின் தேவைகளைத் தீர்க்க மறந்து விடுகிறார்கள். மேலும், இவர்கள் தங்கள் துணையோடு உணர்ச்சி நெருக்கத்துடன் இருக்க சிரமப்படலாம். இதனால் அன்பான ஆழமான உரையாடல்களைத் தவிர்க்கலாம்.
மீனம்
கருணை மற்றும் பச்சாதாபம் கொண்டவர்களாக மீன ராசிக்காரர்கள் அறியப்படுகிறார்கள். இது சில சமயங்களில் தங்கள் கூட்டாளியின் தேவைகளை தங்கள் தேவைகளுக்கு முன் வைத்து பார்க்க வழிவகுக்கும். இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையிடமிருந்து ஒரே மாதிரியான அன்பை காதலைப் பெறவில்லை என்று நினைக்கலாம். மேலும், அவர்கள் தனியாக இருக்க பயந்து நச்சு உறவில் இருக்க முடிவு செய்வார்கள்.
இதர ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் ஒருதலைப்பட்ச உறவை விட்டு வெளியேற வாய்ப்புள்ளது. ஏனெனில், அவர்கள் சமரசத்தையும் தியாகத்தையும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் துணை அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்றால், அந்த உறவை விட்டு உடனே வெளியேறிவிடுவார்கள்.



Click it and Unblock the Notifications














