Latest Updates
-
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறைவதை பாப்பீங்க.. -
அக்டோபர் 09 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
அக்டோபர் 16-ல் நவபஞ்சம ராஜயோகத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் கஷ்டங்களையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேரட் சாதமும், கோவக்காய் வறுவலும் - மதியம் ஸ்கூலுக்கு இந்த காம்போ செய்யுங்க.. பாக்ஸ் காலியா தான் வரும்..
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
இந்தியாவின் தலைநகரமாக விளங்கும் டெல்லி தற்போது எப்போதும் பதற்றம் நிறைந்த ஒரு இடமாக மாறியுள்ளது. இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் டெல்லி கடந்த காலத்தில் இந்தியாவின் தலைநகரமாக இருக்கவில்லை. இந்தியத் தலைநகரின் வரலாறு காலப்போக்கில் மாறியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்தியாவில் செய்த பல மாற்றங்களில் தலைநகர் மாற்றமும் மிகவும் முக்கியமானதாகும்.

டெல்லி இந்தியாவின் தலைநகராக மாறுவதற்கு முன்பு, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக கல்கத்தா திகழ்ந்தது. 1772 முதல் 1911 வரை கிட்டதட்ட 139 ஆண்டுகால்க பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மையமாக கல்கத்தா விளங்கியது. ஆங்கிலேயர்கள் ஏன் கல்கத்தாவை தலைநகரமாக மாற்றினார்கள், அதன்பின் ஏன் அது மாற்றப்பட்டது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைநகரம்
1772 முதல் 1911 வரை கல்கத்தா(தற்போதைய கொல்கத்தா) பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக இருந்தது. இது தற்போதைய மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது. 1772-ல் இது பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மையமாக மாறியது. கல்கத்தா சுமார் 139 ஆண்டுகள் தலைநகராகத் திகழ்ந்தது. 1911-ல் தலைநகரம் ஆங்கிலேயர்களால் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.
யாரால் மாற்றப்பட்டது?
1772-ஆம் ஆண்டில் கல்கத்தா பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராக மாறியது. அந்த காலகட்டத்தில் வாரன் ஹேஸ்டிங்ஸ் வங்காளத்தின் ஆளுநராக இருந்தார். அவர் முக்கியமான அலுவலகங்களை முர்ஷிதாபாத்திலிருந்து கல்கத்தாவிற்கு மாற்றினார். கல்கத்தாவை பிரிட்டிஷ் நிர்வாகத்தின் மையமாக மாற்றுவதில் வாரன் ஹேஸ்டிங்ஸ் முக்கிய பங்காற்றினார்.
கல்கத்தாவின் பெயர்க் காரணம்
பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்நகரம் 'கல்கத்தா' என்று அழைக்கப்பட்டது. தற்போது இது அதிகாரப்பூர்வமாக 'கொல்கத்தா' என்று மாற்றப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் ஆரம்பகால வரலாறு மூன்று கிராமங்களுடன் தொடர்புடையது. அவை சுதானுதி, கோவிந்தபூர் மற்றும் கலிகட்டா ஆகிய கிராமங்களாகும். 'கல்கத்தா' என்ற பெயர் 'கலிகட்டா' என்பதிலிருந்தே உருவானது. 2001-ஆம் ஆண்டில், இதன் அதிகாரப்பூர்வ ஆங்கிலப் பெயர் 'கல்கத்தா'விலிருந்து 'கொல்கத்தா' என மாற்றப்பட்டது. தற்போது கொல்கத்தா மேற்கு வங்காளத்தின் தலைநகராக உள்ளது.
எப்போது தலைநகர் கொல்கத்விலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது?
தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றும் முடிவை ஆங்கிலேயர்கள் 1911-ல் அறிவித்தனர். இந்த அறிவிப்பு 1911-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்காலத் தலைநகரம் எது?
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிம்லா, பிரிட்டிஷ் இந்தியாவின் கோடைக்காலத் தலைநகராக இருந்தது. குளிர்ந்த காலநிலை மற்றும் இமயமலையின் அழகான சூழல் ஆகியவற்றின் காரணமாக, இந்த மலை நகரம் பிரிட்டிஷ் அதிகாரிகளை ஈர்த்தது. அதனால் அவர்கள் கோடைகாலத்தில் இந்த பிரதேசங்களிலிருந்து நிர்வாகத்தை மேற்கொண்டனர்.
டெல்லி எப்போது தலைநகராக மாற்றப்பட்டது?
பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றும் முடிவு 114 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது; இது இந்திய வரலாற்றிலேயே மிக முக்கியமான நிர்வாக மாற்றங்களில் ஒன்றாகும். 1911-ஆம் ஆண்டு நடைபெற்ற 'பட்டாபிஷேக தர்பார்' நிகழ்வில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இது இந்தியாவின் எதிர்காலத்தையே மாற்றி அமைத்ததுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க டெல்லியை நவீன 'புது டெல்லி'யாக உருமாற்றியது.
1911-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி நடைபெற்ற முடிசூட்டு விழாவில், தலைநகரை கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றுவதாக பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இவ்விழாவில் லண்டன் அதிகாரிகள், இந்திய மன்னர்கள் மற்றும் துணைக்கண்டத்தின் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.



Click it and Unblock the Notifications

