Latest Updates
-
ஆடி பௌர்ணமியில் உருவாகும் கேந்திர திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
மணமணக்கும் மொச்சைப் பருப்பு கருவாட்டு குழம்பு - எப்படி செய்யணும் தெரியுமா? -
World Hepatitis Day 2026: இந்த அறிகுறி இருந்தா அசால்ட்டா இருக்காதீங்க.. அது ஹெபடைடிஸின் எச்சரிக்கை அறிகுறி! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி நாளை முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம்.. உஷார்.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு
சிம்ம ராசியில் வக்ரமாகும் சுக்கிரன்: ஜூலை 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்..
Venus Retrograde In Leo 2023: வேத ஜோதிடத்தில், அழகு, காதல், ஆடம்பரம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைந்தார்.
சிம்ம ராசியில் நுழைந்த பின், சில நாட்களிலேயே சுக்கிரன் வக்ரமாகவுள்ளார். அதுவும் ஜூலை 23 ஆம் தேதி காலை 06.01 மணிக்கு வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். வக்ர நிலை என்பது பின்னோக்கி நகரும் நிலையாகும். வக்ர நிலையில் கிரகங்கள் வலுவிழந்து பலவீனமாக இருக்கும்.

சிம்ம ராசியில் சுக்கிரன் வக்ரமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் சுக்கிரனின் வக்ர நிலையால் பண பிரச்சனைகளை மட்டுமின்றி, காதல் மற்றும் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 4 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். குறிப்பாக பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் வேலைப்பளுவால் கஷ்டப்படக்கூடும். பதவி உயர்வை எதிர்பார்த்தால், ஏமாற்றம் தான் கிட்டும்.
குடும்பத்திற்காக அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் இக்காலத்தில் எந்த முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, ஒருசில பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும்.
கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். தேவையற்ற செலவுகள் மற்றும் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் திருப்தி அடையமாட்டார்கள் மற்றும் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். அதோடு ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுவும் சருமம் மற்றும் பற்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரன் வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் சற்று மோசமாக இருக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். நிதி நிலை மோசமாக இருக்கும். நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
இக்காலத்தில் வாக்குவாதத்தால் குடும்ப உறவுகள் மோசமாக பாதிக்கப்படும். பணிபுரிபவர்கள் மறறும் வியாபாரிகள், இக்காலத்தில் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பேச்சால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications