Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
வரலட்சுமி பூஜை அன்று மகாலட்சுமி குடிகொள்ளும் கலசத்தை எப்படி தயார் செய்ய வேண்டும்?
Varalakshmi Vratam 2023: வரலட்சுமி விரதமானது ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு வரலட்சுமி விரதமானது நாளை ஆகஸ்ட் 25 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த வரலட்சுமி விரதத்தை வர மஹாலட்சுமி விரதம் என்றும் அழைக்கின்றனர்.
இந்த நன்னாளில் வரங்களை வழங்குபவரான வரமஹாலக்ஷ்மி தேவிக்காக பெண்கள் கடுமையான விரதத்தை (விரதம்) கடைப்பிடிப்பார்கள். இந்த வரலட்சுமி பூஜையானது சிராவண மாசத்தின் (ஜூலை-ஆகஸ்ட்) சுக்ல பக்ஷத்தின் (சந்திர மாதத்தின் பிரகாசமான பாதியில்) ஒவ்வொரு இரண்டாவது வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது. இந்த வரலட்சுமி விரதத்தின் போது பயன்படுத்தப்படும் கலசத்தை எப்படி தயார் செய்யலாம் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

வரலட்சுமி விரதம் 2023 பூஜை நேரம்
வரலட்சுமி விரதம் உங்களுக்கு நீண்ட கால செழிப்பை வழங்கக் கூடியது. இந்த பூஜையை நீங்கள் நாளைக்கு 4 நேரங்களில் வழிபடலாம். முதல் வழிபாட்டு நேரம் காலை 05.55 முதல் 07.42 வரையிலும், இரண்டாவது வழிபாட்டு நேரம் மதியம் 12.17 முதல் 02.36 வரை, மூன்றாவது வழிபாட்டு நேரம் மாலை 06:22 முதல் 07:50 வரை, நான்காவது வழிபாடு நேரம் - இரவு 10:50 முதல் 12:45 வரையிலும் செய்யலாம்.
வரலட்சுமி பூஜைக்கு கலசத்தை எப்படி தயார் செய்ய வேண்டும்?
ஒரு நாள் முன்பே எல்லா திருமணமான பெண்களும் அதிகாலையில் எழுந்திருப்பார்கள். பின்னர் அவர்கள் பிரம்மமூர்த்தியில் (சூரிய உதயத்திற்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முந்தைய காலம்) குளித்து, பூஜை மண்டபம் அல்லது அறையை ரங்கோலி மற்றும் மா கோலத்தால் அலங்கரிக்க வேண்டும்.
வீட்டில் வெள்ளி மற்றும் வெண்கல கலசத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு பூஜை மண்டபம் மற்றும் பூஜை அறையில் ஸ்வஸ்திக் சின்னம் வரையப்பட வேண்டும். பிறகு கலசத்தில் 5 வகையான இலைகள், தண்ணீர், நாணயங்கள், பச்சை அரிசி, வெற்றிலை பாக்கு இவற்றைக் கொண்டு நிரப்ப வேண்டும். கண்ணாடி, மஞ்சள், சிறிய கருப்பு வளையல்கள், கருப்பு மணிகள் மற்றும் சீப்பு போன்ற பொருட்களையும் வைக்க வேண்டும்.
பிறகு கலசத்தின் கழுத்துப் பகுதியில் ஒரு பட்டுத் துணியைக் கட்டி சுற்றிலும் மா இலைகள், அழகான ரோஜா மாலை கொண்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு தேங்காய் முழுவதும் மஞ்சளைத் தடவ வேண்டும். இந்த கலசத்தில் லட்சுமி தேவி குடிகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கலசத்திற்கு ஆர்த்தி எடுக்கப்படுகிறது.
முதலில் விநாயகப் பெருமானின் முதல் வழிபாடு மற்றும் தெய்வீக பூஜையுடன் வரலட்சுமி பூஜையானது தொடங்குகிறது. பூஜையில் படைக்கப்பட்ட இனிப்புகளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கும் வழங்கப்படுகிறது.
அடுத்த நாள் சனிக்கிழமையன்று கலச நீரானது பூஜை மண்டபம், படுக்கையறைகள், சமையலறை மற்றும் வீடுகளில் உள்ள அனைத்து இடங்களிலும் தெளிக்கப்படுகிறது. தெளிக்கப்பட்ட கலச நீர் உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் நேர்மறை உணர்வை வழங்கும்.
திருமணமான பெண்கள் வரலட்சுமி பூஜை செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
இந்த பூஜை வேத காலத்துக்கு முந்தையது என்பதால் திருமணமான பெண்களால் செய்யப்படுகிறது. ஒருமுறை பார்வதி தேவி, மக்களின் வலி, துக்கம் மற்றும் துன்பங்களைத் தீர்க்க சிவபெருமானிடம் உதவி கேட்டபோது, சிவபெருமான் வரமஹாலக்ஷ்மி விரதம் பற்றிய தகவலை கூறினார். அதன் படி மக்கள் தங்கள் கவலைகள் நீங்கி செல்வத்தை பெறவும் தீர்க்க சுமங்கலியாக இருக்கவும் இந்த பூஜையை செய்கின்றனர்.
இந்த விரதத்தை பெண்கள் கடைபிடிப்பதால் குடும்பத்திற்கும் கணவருக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கும். பொருளாதார ஆசிர்வாதத்தை பெற முடியும் அதாவது செல்வ செழிப்பை பெற முடியும். நல்ல ஆரோக்கியத்தை பெறலாம்.
வரமஹாலக்ஷ்மி பூஜையை "பெண்கள் தங்கள் நலனுக்காகவும், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் நலனுக்காகவும்" செய்கிறார்கள். இந்த நாளில் வரலக்ஷ்மி தேவியை வழிபடுவது அஷ்டலட்சுமிகளை (லட்சுமியின் எட்டு வெவ்வேறு வடிவங்கள்) வழிபடுவதற்கு சமம் என்று நம்பப்படுகிறது.
வரலக்ஷ்மி என்ற சொல்லுக்கு வரம் என்று பொருள், இந்த நாளில் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு தேவி தரும் வரங்கள் ஏராளம். லக்ஷ்மி சாருமதி என்ற பெண்மணி தேவியிடம் பிரார்த்தனை செய்த போது, சாருமதியின் கனவில் மகாலட்சுமி தேவி வந்து, வரமஹாலக்ஷ்மி விரதம் என்று அழைக்கப்படும் விரதத்தைக் கடைப்பிடிக்கச் சொன்னார். அவளும் கடைபிடித்து தேவியின் அருளை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த விரதத்தின் கதையைப் படிப்பதோடு, லக்ஷ்மி அஸ்தோத்திரம் மற்றும் சதனமாவலி போன்ற பாடல்களை பாடுவதன் மூலமும் பெண்கள் லட்சுமி தேவியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். வரமஹாலக்ஷ்மி விரதம் சிவபெருமானாலேயே சொல்லப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த விரதமாகும். இந்த விரதத்தின் போது திருமணமான பெண்களும் தங்கள் கைகளில் ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் நூலைக் கட்டி, அம்மனுக்கு பிரசாதம் மற்றும் வெல்லத்தை சமர்பிப்பார்கள்.



Click it and Unblock the Notifications











