Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 4 நபர்கள் சமூகத்தில் எல்லோராலும் அவமதிக்கப்படுவார்களாம் - அவர்கள் யார் தெரியுமா? -
ஜூலை 07-ல் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் 'துவித்வாதச யோகம்': அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்! -
ஹோட்டல் ஸ்டைல் கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருமுறை செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 06 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க பல தடைகளை தாண்ட வேண்டியிருக்குமாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது... -
உங்க முகம் மேடு பள்ளமா அசிங்கமா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பலன் கிடைக்கவில்லையா? அப்ப சாணக்கியரின் இந்த 5 விதிகளை ஃபாலோ பண்ணுங்க.. -
ஜூலை 20-ல் நடக்கும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது.. -
கணைய புற்றுநோயின் 7 எச்சரிக்கை அறிகுறிகளை பட்டியலிட்ட அமெரிக்க டாக்டர்!
வைகாசி மாத அமாவாசை 2024 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்..!
அமாவாசையன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) முதலானவற்றைத் தவறாது செய்யவேண்டும். அதனால் பித்ருக்களின் பசியும், தாகமும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். அதிலும் வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் அமாவாசை அன்று விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் இந்த வருடம் வைகாசி மாத அமாவாசையானது ஜூன் மாதம் (8-04-2024 ) 5ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்குகிறது. இந்த திதி அடுத்த நாள் ஜூன் 6ஆம் தேதி வரை உள்ளது.
அந்த வகையில் இந்த மாதத்தின் அமாவாசை நாள் அன்று முன்னோர்களுக்கு ஆராதனை, தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம். அதுமட்டுமல்லாமல் விரதம் இருந்து வழிபட்டால் பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடியதாக இருக்கும். வைகாசி மாத அமாவாசை, சந்திரன் ரிஷப ராசியில் உச்சம் அடையும் மாதத்தில் வருவதால், இந்த மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானதாகும். அமாவாசை திதி கொடுக்க வேண்டிய நேரம் எது? எப்போது தர்ப்பணம் செய்ய வேண்டும்? என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

வைகாசி மாத அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்
வைகாசி அமாவாசை 2024: தேதி மற்றும் திதி நேரம்
வைகாசி அமாவாசை 2024, ஜூன் 6ஆம் தேதி அன்று வருகிறது. திதி தொடங்கும் நேரம் ஜூன் 5ஆம் தேதி, 2024 மாலை 07:55 மணியாகும். இந்த திதி அடுத்தநாள் ஜூன் 6ஆம் தேதி, 2024 மாலை 06:40 மணிக்கு முடிகிறது. ஜூன் மாதம் 5, புதன் கிழமை அன்று இரவு எட்டு மணிக்கு அமாவாசை திதி தொடங்குகிறது, அடுத்த நாள் மாலை வியாழன் அன்று முடிகிறது. அமாவாசை திதி காலை இரவு தொடங்குவதால், உதய நாழிகை திதியின் அடிப்படையில், ஜூன் 6ஆம் தேதி வியாழன் அன்றுதான் வைகாசி அமாவாசை என கணிக்கப்பட்டுள்ளது. அதனால் அன்று நண்பகல் 12 மணிக்குள் தர்பணம் கொடுத்தால் நல்லது..
பித்ரு தர்பணம் கொடுக்கும் வழிமுறை
நதிக்கரையிலோ, கடற்கரையிலோ, முன்னோரை நினைத்து சிறிது எள்ளும், தண்ணீரும் இறைத்து தர்ப்பணம் செய்தாலே அவர்களது தாகமும், பசியும் அடங்கிவிடும் என்று கூறுகின்றன புராணங்கள். அவர்கள் மனம் குளிர அன்னதானம், வஸ்திர தானம், பழ வகைகள் தானம் போன்றவற்றைச் செய்தல் நன்மை பயக்கும். அல்லது சூரிய பகவானை வணங்கி கிழக்கு பக்கம் நின்னு வலது கையில் எள் எடுத்து பின்பு தூய பாத்திரத்தில் தூய நீரை எடுத்து சூரியனை பார்த்து இறந்த முன்னோர்களை நினைத்து பெயர்களை கூறி எள் மீது நீர் விட்டு கீழே உள்ள பாத்திரத்தில் விட வேண்டும். பின்பு அந்த நீரை கடல், ஆறு, ஏரி, குளம் பகுதிகளில் விட்டலாம்.
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்கலாம்...
சனி ஜெயந்தியும் அமாவாசையும்
சனி ஜெயந்தி என்பது சனி பகவானின் பிறந்த நாளைக் குறிக்கும் ஒரு நல்ல நாளாகும். அவருடைய அருளை நாடும் பக்தர்களுக்கு இது ஒரு முக்கியமான நாள். இது பொதுவாக மே அல்லது ஜூன் மாதத்தில் வரும். தமிழ் மாதமான வைகாசி அமாவாசை அன்று இந்த சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி ஜூன் 6ஆம் தேதி 2024 வியாழன் அன்று வருகிறது. அதனால் எப்போதுமே இந்த வைகாசி அமாவாசை சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சனி ஜெயந்தி 2024 தேதி மற்றும் நல்ல நேரம்
இந்து நாட்காட்டியின்படி, வைகாசி மாதம் அமாவாசை திதி ஜூன் 6, 2024 அன்று காலை 10:40 மணிக்குத் தொடங்கி ஜூன் 7ஆம் தேதி புதன் கிழமை அன்று காலை 08:52 மணிக்கு முடிவடைகிறது.
அன்னதானம் செய்தல்
குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் அமாவாசையில் விரதம் இருந்து அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபட நிச்சயம் புத்திர பாக்கியம் கிடைக்கும். எனவே வைகாசி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுங்கள். மேலும் அன்று குறைந்தது மூன்று பேருக்காவது வயிறு நிரம்ப சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அன்னதானம் செய்ய வேண்டும். அது நிறைவான அன்னதானம் ஆக இருக்க வேண்டும். அதனால் தலைமுறை செழிக்கும். ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் அதுவும் விலகி நல்ல வளமுடன் வாழலாம்.



Click it and Unblock the Notifications