Latest Updates
-
மனிதத் தன்மையற்ற வரலாற்றின் டாப் 10 கொடூரமான அரசர்கள் - முதலிடத்தில் எந்த அரசர் இருக்கிறார் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா?
காதல் வாழ்க்கையை அழிப்பதே இந்த 10 விதமான மூடநம்பிக்கைகள் தானாம்.. தெரியுமா?
Love Superstitions In Tamil: மூட நம்பிக்கைகள் நம்பிச் சுற்றி பல இடங்களில் இருக்கிறது. மனிதனும் சில மூடநம்பிக்கைகளை நம்பி அதன்படி தான் செயல்படுகிறான். அந்த வகையில் பார்க்கும் போது சில மூட நம்பிக்கைகள் காதல் வாழ்க்கையிலும் தலைக்காட்டத்தான் செய்கின்றன. இந்த மூட நம்பிக்கைகள் உங்கள் காதல் வாழ்க்கையை அழித்து விடும்.
காதல் என்பது உணர்ச்சி ரீதியான விஷயமாக பார்க்கப்பட்டாலும், சில பைத்தியக்காரத்தனமான மூடநம்பிக்கைகளும் காதலர்களுக்கிடையே இருக்கத்தான் செய்கிறது. அப்படி உலகெங்கிலும் உள்ள பைத்தியக்காரத்தனமான காதல் மூட நம்பிக்கைகளை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காணப் போகிறோம்.

1. தாடி வைப்பது
பெரும்பாலும் ஆண்கள் காதல் தோல்வி என்றால் தாடி வைப்பார்கள். ஆனால் உலகில் உள்ள சில இடங்களில் தாடி வைப்பது என்பது துரதிர்ஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படி ஆண்கள் தாடி வைப்பது அவர்களது காதலை அழிக்க கூடும் என பல பகுதிகளில் நம்புகின்றனர். மேலும் அந்தஸ்தைப் பொருத்தும் இது பார்க்கப்படுகிறது.
2. இரட்டை எண் பூங்கொத்துகள்
ரஷ்யா உட்பட பெரும்பாலான பகுதிகளில் பாசத்தின் சின்னமாக மலர்கள் பார்க்கப்படுகிறது. எனவே ஒருவருக்கொருவர் பூங்கொத்துகளை வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இருப்பினும் இந்த பூங்கொத்தை வழங்கும் போது அதிலிருக்கும் பூக்களின் எண்ணிக்கை ஒற்றை படை இலக்குகளில் இருக்க வேண்டும்.
ஒற்றைப்படை எண்ணிக்கையிலான பூக்களை மட்டுமே பரிசாக வழங்க வேண்டும். சமமான அளவில் பூங்கொத்துகளை கொடுக்கக் கூடாது. இது உங்கள் காதல் வாழ்க்கையை பாதிக்கக் கூடும் என அவர்கள் நம்புகின்றனர். எனவே உண்மையில் இரட்டை எண்களில் பூங்கொத்துகளை கொடுப்பதை அவமதிப்பதாக எண்ணுகின்றனர். அவர்களைப் பொருத்த வரை இரட்டை எண் என்பது இறுதிச்சடங்குகள் மற்றும் துக்க காலத்துடன் தொடர்புடையது.
3. நம்பர் 8
எப்படி 13 ஆம் நம்பர் என்பது பேய்களின் நம்பராக பார்க்கப்படுகிறதோ அதே மாதிரி நம்பர் 8 என்பது புதிய ஜோடிகளுக்கு ஆகாத நம்பராக பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில் நம்பர் 8 என்பது புதிய ஜோடிக்கு ஒரு பயங்கரமான சகுனமாகக் கருதப்படுகிறது. எனவே திருமண தேதியை எட்டாவது எண்ணில் அவர்கள் வைப்பதில்லை. எட்டு என்பது சனியின் பிரதிநிதித்துவமாக பார்க்கப்படுகிறது. கெட்ட அதிர்ஷ்டம் அல்லது மோசமான அதிர்ஷ்டமாக பார்க்கப்படுகிறது.
4. பெயரை கண்டுபிடித்தல்
இந்திய பாரம்பரிய திருமண நிகழ்வுகளில் மருதாணி அல்லது மெஹந்தி போடும் விழாக்கள் நடைபெறுகிறது. இந்த விழாக்களில் மணமகளின் கைகளில் மெஹந்தி போடப்பட்டு இருக்கும். அதில் மணமகனின் பெயர் எழுதப்பட்டிருக்கும். மணமகன் மணமகளின் கைகளில் உள்ள மெஹந்தியில் தன் பெயரை கண்டுபிடிக்க வேண்டும். மணமகன் பெயரை கண்டறியும் வரை திருமணக் கொண்டாட்டங்களை தொடங்க குடும்பத்தினர் அனுமதிக்க மாட்டார்கள். இதில் மணமகன் தோல்வியுற்றார் என்றால் மணமகள் திருமண வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவார். இன்றும் இந்த மாதிரியான பாரம்பரிய நிகழ்வு திருமண விழாவில் நடைபெறுகிறது.
5. பணம் இல்லாமல் போதல்
உறவுச் சிக்கல்களில் பணமும் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பணப் பற்றாக்குறை உறவில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஸ்வீடனில் ஒரு மூடநம்பிக்கை நிலவி வருகிறது. தங்கள் மகளுக்கு பணப் பற்றாக்குறை இருக்க கூடாது என்பதற்காக திருமணத்தின் போது தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களை வழங்குவார்கள். மணமகள் தந்தை கொடுத்த நாணயங்களை வலது காலணியில் ஒரு தங்கத்தையும், இடது காலணியில் ஒரு வெள்ளியையும் வைக்க வேண்டும் என்பது மரபு.
6. துண்டை பகிர்தல்
உலகின் சில பகுதிகளில் குறிப்பாக ரஷ்ய போன்ற நாடுகளில் ஒருத்தர் துண்டை மற்றொருவர் பயன்படுத்துவது மோதலை உண்டாக்கும் என நம்புகின்றனர். எனவே ஒருவருக்கொருவர் துண்டை அவர்கள் மாற்றிக் கொள்வதில்லை. இது மோசமான சண்டைக்கு ஒரு சகுனமாக இருக்கலாம்.
7. கடிகாரம் பரிசளிக்க கூடாது
பொதுவாக பரிசுப் பொருட்கள் என்றால் லேப்டாப், ஸ்மார்ட் போன்கள் மற்றும் கடிகாரங்களை பரிசளிப்போம். ஆனால் ஆசியாவின் சில பகுதிகளில் குறிப்பாக சீனாவில் கடிகாரம் மரணத்தை நினைவூட்டக்கூடியதாக பார்க்கப்படுகிறது. கடிகாரத்தை பரிசாக கொடுப்பது அவரை இறுதிப்பயணத்திற்கு அனுப்பப் கூடியதாக பார்க்கப்படுகிறது. எனவே இளம் காதலர்கள் கடிகாரத்தை பரிசளிக்க கூடாது. மேலும் நேரத்தை குறிக்கும் ஒரு பரிசுப் பொருள் முதியோர்களை புண்படுத்தக் கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications