Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
தந்தையிடம் இருந்து மட்டுமே ஒருவர் பெறக்கூடிய சில சுவாரஸ்யமான பண்புகள்! மிஸ் பண்ணாம படிங்க..
ஒரு குழந்தையை பார்த்ததும், நிறைய பேர் கேட்கும் முதல் கேள்வி குழந்தை அப்பா மாதிரியா, அம்மா மாதிரியா என்பதாகவே இருக்கும். இப்படி ஒரு குழந்தை அப்பா, அம்மா போன்று இருக்க காரணம், உடலில் உள்ள டிஎன்ஏ தான். நாம் என்ன தான் நமது உயிரியல் வகுப்பில், ஒரு குழந்தையின் டிஎன்ஏவில் 50% அம்மாவிடம் இருந்தும், 50% அப்பாவிடம் இருந்தும் பெறுவதாக படித்தாலும், அது முற்றிலும் உண்மையல்ல.
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு சம அளவிலான உடல் பண்புகள் மற்றும் மரபணு பண்புகளை அனுப்புவதில்லை. உண்மையில், குழந்தைகளின் பெரும்பாலான பண்புகள் அவர்களது தந்தையிடம் இருந்து தான் பெறப்படுகின்றன. அதாவது 60% பண்புகள் தந்தையிடம் இருந்து தான் பெறப்படுகிறது.

அதனால் தான் நிறைய குழந்தைகளின் பழக்கவழக்கங்கள், தோற்றங்கள், எண்ணங்கள் போன்றவை அவர்களது அப்பாவைப் போன்றே உள்ளது. இப்போது தனது தந்தையிடம் இருந்து மட்டுமே ஒருவர் பெறக்கூடிய சில பண்புகளைக் காண்போம்.
உயரம்
ஒருவரின் உயரம் பெற்றோர் இருவரிடமிருந்தும் பெறப்பட்ட குறைந்தபட்சம் 700 மரபணு மாறுபாடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. இருந்தாலும், ஒவ்வொரு பெற்றோரின் உயர மரபணுவும் சற்று வித்தியாசமான முறையில் செயல்படுவதாக தெரிகிறது. அதுவும் குழந்தையின் உயரத்தை எடுத்துக் கொண்டால், தந்தையின் மரபணுக்கள் தான் அந்த குழந்தையின் உயரத்தை தூண்டுவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. அதனால் தான் நிறைய பேர் அவர்களின் தந்தையின் உயரத்தில் உள்ளனர்.
பற்களின் வடிவம்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பற்கள் இருக்கும். அதுவும் ஒருவரது தந்தையின் பல் ஆரோக்கியம் மோசமாக இருந்தால், அந்த குழந்தை மற்றவர்களை விட அடிக்கடி பல் மருத்துவரை சந்திக்க வேண்டியிருக்கும். பற்களின் வடிவம் அந்த குழந்தையின் தாயின் பற்களைப் போன்று இருந்தாலும், சொத்தைப் பற்கள் முதல் வாயில் வரும் பிரச்சனைகள் அனைத்துக்கும் தந்தையின் மரபணு காரணமாக இருக்கலாம்.
பாலினம்
ஒரு குழந்தையின் பாலினத்திற்கு அப்பாக்கள் தான் 100 சதவீதம் பொறுப்பு. பொதுவாக ஒரு குழந்தையின் பாலினத்தை X மற்றும் Y குரோமோசோம்கள் வரையறுக்கின்றன. அதில் பெண்கள் தங்கள் தந்தையிடம் இருந்து X குரோமோசோமைப் பெறுகிறார்கள். இதனால் XX மரபணு வகை உருவாகிறது. அதுவே ஆண்கள் தங்கள் தந்தையிடம் இருந்து Y குரோமோசோமைப் பெறுகிறார்கள். இதன் விளைவாக XY மரபணு வகை உருவாகிறது. தாயிடம் இருந்து X குரோமோசோம்களை மட்டுமே பெற முடியும் என்பதால், குழந்தையின் பாலினத்தில் தந்தை காரணமாக உள்ளனர்.
கன்னத்தில் குழி
கன்னத்தில் குழி விழுவது ஒருவரது அழகை மேம்படுத்தி காட்டும். இருப்பினும், ஆராய்ச்சியாளர்கள் இப்படி கன்னத்தில் விழும் குழிகளை முகத்தசை குறைபாடு என்று கூறுகிறார்கள். மேலும் இது பரம்பரை பரம்பரையாக வரக்கூடியதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில் இது ஒரு வகையான ஆதிக்கும் செலுத்தும் மரபணு பண்பு மற்றும் இது தந்தையிடம் இருந்து மட்டுமே பெறக்கூடிய ஒன்று.
கைரேகைகள்
மனிதர்களின் கை ரேகைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆனால் குழந்தையின் கைரேகைகள் தந்தையின் கைரேகையை ஒத்திருக்கலாம். கைரேகை வடிவங்கள் என்பது நம் தந்தையிடமிருந்து பெறப்பட்ட மரபணு பண்புகள் ஆகும்.
தும்மல்
சிலருக்கு அதிகாலையில் எழுந்ததும் அல்லது பிரகாசமான வெளிச்சத்தைக் கண்டதும் கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து தும்மல் வரும். இது ஒரு மரபணு பண்பு. இதனால் தந்தை தான் காரணம். இம்மாதிரியான நிலையை அச்சூ சிண்ட்டோர் என்பர். இம்மாதிரியான தும்மல் பிரச்சனை தந்தையின் மரபணுக்களால் தான் வரும் வாய்ப்புள்ளது.
சரி, நீங்கள் அல்லது உங்கள் குழந்தை பார்க்க யாரைப் போன்று இருக்கிறார்கள்? தந்தை போன்றா அல்லது அம்மாவைப் போன்றா?



Click it and Unblock the Notifications