Latest Updates
-
செப்டம்பர் 15, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரங்கள ஆபத்துக்கள் விடாம துரத்தப்போகுதாம் -
செப்டம்பர் இறுதியில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
செப்டம்பர் 14-ல் தொடங்கும் நவபஞ்சம யோகத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
லன்ச் பாக்ஸிற்கு ஒருடைம் இந்த சோயா புலாவ் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
உங்க முகத்தில் இந்த 3 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
தலைசுற்ற வைக்கும் வட கொரியாவின் கொடூரமான விதிமுறைகள் - இந்த நாட்ல மக்கள் எப்படித்தான் வாழ்றாங்களோ? -
விரிசல் இல்லாம பூர்ண கொழுக்கட்டை செய்யணுமா? இதோ சில டிப்ஸ்.. -
பெண்களுக்கு ஆண்கள் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்யும் பெண்களால் ஆளப்படும் இந்தியச் சமூகம் எது தெரியுமா? -
Ganesh Chaturthi 2026: உங்க கஷ்டங்கள் குறையணுமா? அப்ப இன்னிக்கு விநாயகருக்கு உங்க ராசிப்படி இத வாங்கி கொடுங்க!
இந்தியாவின் டாப் 5 பணக்கார முதலமைச்சர்கள் இவங்கதான் - தமிழ்நாடு முதலமைச்சர் எத்தனாவது இடத்தில் உள்ள தெரியுமா?
இந்தியாவில் அரசியல் தலைவர்களின் ஆடம்பர வாழ்க்கை என்பது எப்போதும் விவாதத்திற்கு உரிய ஒன்றாக இருந்து வருகிறது. ஏனெனில் இந்தியாவில் சாதாரண மக்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கான ஆடம்பர வாழ்க்கையை வாழ்வது அரசியல்வாதிகள்தான். இந்திய அரசியல் தலைவர்களின் நிதிநிலை விவரங்கள் எப்போதும் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் ஒன்றாக இருந்து வருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும், வேட்பாளர்கள் தங்கள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், கடன்கள் மற்றும் நிதி முதலீடுகள் குறித்த விவரங்களை உள்ளடக்கிய கட்டாய உறுதிமொழிப் பத்திரங்களை இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கின்றனர்.

'அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ரீஃபார்ம்ஸ்' மற்றும் 'நேஷனல் எலக்ஷன் வாட்ச்' போன்ற சில சமூக அமைப்புகள், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆவணங்களைத் தொகுத்து வெளியிடுவதன் மூலம், நாட்டின் முக்கிய மாநில நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் குறித்த வெளிப்படையான தகவல்களை வழங்குகின்றன.
சமீபத்தில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் முடிந்து புதிய அரசுகள் பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பணக்கார முதல்வர்களின் பட்டியலில் தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே முக்கியப்பங்கு வகிக்கின்றனர். இந்த பதிவில் இந்தியாவின் டாப் 5 பணக்கார முதலமைச்சர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.
2026-ஆம் ஆண்டில் இந்தியாவின் மிகப் பணக்கார முதலமைச்சர் யார்?
2026-ஆம் ஆண்டிற்கான மிகப் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில், கர்நாடகாவின் முதலமைச்சராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள டி.கே. சிவகுமார் முதலிடத்தில் உள்ளார். கர்நாடகாவின் முதலமைச்சராக பதவியேற்றுள்ள அவரது குடும்பத்தின் அறிவிக்கப்பட்ட சொத்து மதிப்பு ₹1,413 கோடியாக உள்ளது. அவரது அதிகாரப்பூர்வத் தேர்தல் பிரமாணப் பத்திரங்களின்படி, அவரது மொத்தச் சொத்துக்களில் 80%-க்கும் அதிகமானவை ரியல் எஸ்டேட் மற்றும் நிலங்களாகவே உள்ளன. பெங்களூரு, மைசூரு, கனகபுரா மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்கள், உயர்தர ரியல் எஸ்டேட் சொத்துக்கள் மற்றும் பெங்களூருவின் பிரபலமான 'குளோபல் மால்' (Global Mall) ஆகியவை அவரது சொத்துப்பட்டியலில் முக்கியமானவை. அத்துடன் அவருக்குச் சொந்தமான பரம்பரை விவசாய நிலங்களும் இதில் உள்ளன.
சந்திரபாபு நாயுடு
₹931 கோடி மதிப்பிலான குடும்பச் சொத்துக்களுடன் ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு இந்தியாவின் பணக்கார முதல்வர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவின் சொத்துக்களில் பெரும்பகுதி, அசையும் சொத்துக்கள் மற்றும் 'ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட்' நிறுவனத்தில் உள்ள குடும்பப் பங்கு ஆகியவற்றைக் கொண்டதாகும்.
ஜோசப் விஜய்
தமிழ்நாட்டின் முதல்வரும், நடிகருமான ஜோசப் விஜய் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் 648 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்துள்ளதால் மூலம் இந்தியாவின் மூன்றாவது பணக்கார முதல்வராக அறியப்படுகிறார்.
பேமா காண்டு
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வரான பேமா காண்டு இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. பாஜக ஆளும் இந்த மாநிலத்தின் முதல்வரான பேமா கண்டு 332 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதன் மூலம் இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.
நெய்பியு ரியோ
இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தின் முதலமைச்சராக பதவி வகிக்கும் நெய்பியு ரியோ இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார். Nationalist Democratic Progressive Party கட்சி சார்பில் முதல்வராக உள்ள இவர் 46 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.



Click it and Unblock the Notifications

