Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆண்கள் அதிகமாக கள்ளக்காதலில் உள்ள மோசமான டாப் 5 நாடுகள்... முதலிடத்தில் உள்ள நாடு எது தெரியுமா?
கள்ளக்காதல் என்பது பல எந்த வகையில் பார்த்தாலும் அறமற்ற ஒன்றாகும். இந்தியாவைப் பொறுத்தவரை கள்ளக்காதல் என்பது தண்டனைக்குரிய குற்றமல்ல என்றாலும் அது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றும் அல்ல, மேலும் மக்கள் அதனை மிகவும் தவறான மற்றும் பாவச்செயலாக கருதுகிறார்கள். அதேசமயத்தில் சில நாடுகளில் கள்ளக்காதல் என்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த நாடுகளில் கள்ளக்காதலில் இருப்பது நிரூபணமானால் சில மாதங்கள் முதல் ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.
சில நாடுகள் இதுபோன்ற எந்த வரைமுறைகளுக்குள்ளும் வராது. மக்கள் இங்கு சுதந்திரமாக திருமணம் மீறிய உறவில் ஈடுபடலாம். இதற்கு பாலின பேதமும் கிடையாது. சில நாடுகளில் ஆண்கள் அதிகம் துரோக செயல்களில் ஈடுபட்டால் சில நாடுகளில் பெண்கள் அதிகம் துரோக செயல்களில் ஈடுபடுகிறார்கள். சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் சில நாடுகளில் பெரும்பாலான ஆண்கள் தாங்கள் திருமணம் மீறிய உறவில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த பதிவில் எந்தெந்த நாடுகளை சேர்ந்த ஆண்கள் அதிகம் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

தாய்லாந்து
ஸ்டாடிஸ்டா அறிக்கையின்படி, "புன்னகைகளின் நிலம்" என்றும் அழைக்கப்படும் தாய்லாந்து, உலகளவில் அதிக திருணம் மீறிய உறவு விகித்தைக் கொண்டுள்ளது. இந்த நாட்டில் திருமணமான பெரியவர்களில் 56% பேர் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்டிருப்பாதக ஒப்புக்கொள்கிறார்கள். மேலும், டியூரெக்ஸ் நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, தாய்லாந்து ஆண்களில் 54% பேர் தங்கள் மனைவியை ஏமாற்றியதாக ஒப்புக்கொண்டனர், இதனால் அவர்கள் இந்த நாடு உலகின் விசுவாசமற்ற கணவர்களைக் கொண்ட நாடு என்ற பெயர் பெற்றது. ஆண்களுக்கு இணையாக பெண்களும் இந்த நாட்டில் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். பெண்கள் கள்ளத்தொடர்பிலும் தாய்லாந்துதான் முதலிடத்தில் உள்ளது.
பிரான்ஸ்
பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் திருமணம் மீறிய உறவை ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். 1975 ஆம் ஆண்டில் பிரான்ஸ் விபச்சாரத்தை குற்றமற்றதாக்கியது, மேலும் பியூ ஆராய்ச்சி மையத்தின் ஒரு கணக்கெடுப்பில், பிரெஞ்சு குடிமக்கள் 53% பேர் தடைசெய்யப்பட்ட பாலியல் உறவுகளுக்கு ஆதரவாக இருந்ததாகக் கண்டறிந்தனர். உலகில் விபச்சாரத்திற்கும், திருமணம் மீறிய உறவிற்கும் அதிக சகிப்புத்தன்மை கொண்ட நாடாக பிரான்ஸ் உள்ளது.
இங்கிலாந்து
மேற்கத்திய கலாச்சாரம் பரவலாக இருக்கும் இங்கிலாந்தில் திருமணம் மீறிய உறவில் இருப்பது தண்டனைக்குரிய குற்றமல்ல. எனவே இங்கு மக்கள் சுதந்திரமாக திருமணம் மீறிய உறவில் ஈடுபடுகின்றனர். குளோபல் இன்வெஸ்டிகேஷன்ஸ் 2017 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், 57% ஆண்களும் 54% பெண்களும் தாங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபருடன் துரோகம் செய்ததாக ஒப்புக்கொண்டனர். 2010 ஆம் ஆண்டு பொதுவில் வெளியிடப்பட்டதிலிருந்து, திருமணம் தாண்டிய உறவை கண்டறிய உதவும் ஆஷ்லே மேடிசன் வலைத்தளம், இங்கிலாந்தில் சுமார் 1.1 மில்லியன் பயனர்களைக் குவித்துள்ளதாகக் கூறுகிறது. இது ஏராளமான பிரிட்டிஷ் மக்கள் தங்கள் கூட்டாளர்களை ஏமாற்ற விரும்புகிறார்கள் என்பதைக் குறிக்கிறது.
ஜெர்மனி
உலகளவில் விபச்சாரத்தில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலில், ஜெர்மனி நான்காவது இடத்தில் உள்ளது. திருமண உறவில் துரோகம் செய்வது அவர்களின் வாழ்க்கை முறையில் பிரிக்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உலக மக்கள்தொகை மதிப்பாய்வு ஆய்வின்படி, 45% ஜெர்மன் திருமணமான ஆண்கள் தங்கள் துணையை ஏமாற்றியதாக ஒப்புக்கொள்கிறார்கள்.
ஸ்பெயின்
மே 1978 இல், ஸ்பானிஷ் தண்டனைச் சட்டத்தில் ஒரு முக்கிய திருத்தம் செய்யப்பட்டது, இது விபச்சாரத்தை குற்றமற்றதாக மாற்றியது. இது ஸ்பெயினில் திருமணம் மீறிய உறவுகள் அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது. 2018 ஸ்டாடிஸ்டா ஆராய்ச்சியில் பங்குபெற்ற ஸ்பானியர்களில் தோராயமாக 30% பேர் தங்கள் வாழ்நாளில் ஒன்று முதல் மூன்று பாலியல் கூட்டாளிகளைக் கொண்டிருந்ததாக ஒப்புக்கொண்டனர்.



Click it and Unblock the Notifications
